நிரூப்பை கொம்பு சீவி விடும் சுரேஷ் சக்கரவர்த்தி.. என்ன..என்ன.. கதையெல்லாம் சொல்றார் பாருங்க
சென்னை: அல்டிமேட் நிகழ்ச்சியில் நிரூப்பிடம் சுரேஷ் சக்கரவர்த்தி பற்ற வைத்துள்ளார்.
நிரூப்புக்கே நெருப்பா என்று ரசிகர்கள் சுரேஷ் சக்கரவர்த்தியை கலாய்த்து வருகிறார்கள்.

ஐந்தாவது நாள் தொடக்கம்
ரசிகர்கள் ஆர்வத்தோடு இருந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி இன்றோடு ஐந்தாவது நாளில் அடியெடுத்து வைத்திருக்கும் நிலையில், இந்த நிகழ்ச்சி தொடங்கிய நாளிலிருந்தே சண்டை சச்சரவுகள் பஞ்சமில்லாமல் இருந்துவருகிறது. வழக்கம்போல பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகி வரும் சண்டைச் சச்சரவுகள் போலத்தான் இதிலும் இருந்துவருகிறது. ப்ரோமோக்காக போட்டியாளர்கள் போடும் சண்டைகள் வேற லெவலில் இருந்து வந்தாலும் மற்ற நேரங்களில் ஒருவருக்கொருவர் ஆறுதலாக நடந்து வருகிறார்கள்.

ப்ரோமோவில் தொடரும் சண்டைகள்
அல்டிமேட் நிகழ்ச்சி இருபத்தி நான்கு மணி நேரமும் ஒளிபரப்பாகி வருவதால் அதை ரசிகர்களால் முழுமையாக பார்க்க முடியாமல் இருந்து வருகிறது. பலர் ப்ரோமோவை நம்பி சமூக வலைத்தளத்தில் கலாய்த்துக் கொண்டு இருக்கும்போது நிகழ்ச்சியை பார்த்தவர்களுக்குத்தான் உள்ளே நடக்கும் தில்லாலங்கடி வேலைகள் எல்லாம் தெரிந்து கொள்ள முடிகிறது என்று பலரும் கூறி வருகின்றனர். அந்த மாதிரிதான் ப்ரோமோவில் அடிக்கடி சண்டைகள் போட்டு வரும் சுரேஷ் சக்ரவர்த்தி வீட்டிற்குள் நிதானமாக நிரூப்பிடம் பேசிக்கொண்டிருப்பதை பார்க்கும் போது வேற லெவல் என்று சொல்லத் தோன்றுகிறது என பலரும் கூறுகின்றனர்.

சுரேஷ் சக்கரவர்த்தியின் அறிவுரை
பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் நிரூப்பிடம் அமீர் பேசிய அந்த ஒரு வார்த்தை தான் அவருடைய விளையாட்டை டோட்டலாக மாற்றிவிட்டது. தனக்கு நெகட்டிவ் பெயர் வெளியே இருக்கிறது என்று அமீர் சொன்ன வார்த்தையை நம்பி நிரூப் அப்படியே தன்னுடைய விளையாட்டில் பின்தங்கி விட்டார். இந்த நிலையில் தற்போது சுரேஷ் சக்ரவர்த்தி இவரிடம் விளையாட்டைப் பற்றி பல கருத்துக்களை எடுத்துரைத்து வருகிறார். அதில் தன்னிடம் இந்த வீட்டில் பலரும் சண்டை போடும் நிலமை வரும், அதில் முதல் ஆளாக பாலா இருக்கிறார். நீ பாலா போல தைரியமாக இருக்க வேண்டும் என்று தீப்பொறிகளை பற்ற வைத்திருக்கிறார்.

செமையாக பற்றவைத்து விட்டாரே
பாலா எப்போதுமே தைரியமானவர், நேர்மையாகவும் விளையாடுபவர் அதனால்தான் அவரால் நான்காவது சீசனில் இரண்டாவது இடத்தில் வெற்றி பெற முடிந்தது. இந்த வீட்டிற்குள் வரும் போது கூட நான் பாலாவை நினைத்து தான் பயந்தேன். நீயும் அவரைப்போல செமையாக விளையாட வேண்டும். நீ கடந்த சீசனில் தலைவர் பதவியில் இருக்கும்போது எப்படி விளையாடினாயோ அதை அருகிலிருந்து நான் பார்க்கவில்லை. அதனால் இந்த வீட்டிற்குள் அந்த விளையாட்டை நீ கொண்டுவர வேண்டும். நான் உன் அருகில் இருந்து அதை பார்க்க வேண்டும் என்றெல்லாம் இவருக்கு தூபம் போட்டு வருகிறார். இதைப்பார்த்து நிரூப்பின் முகத்தில் தெரியும் மாற்றத்தை கவனித்த ரசிகர்கள் இனி நிரூப்பின் ஆட்டம் எப்படி மாறப்போகிறது என்று எதிர்பார்த்து வருகிறார்கள்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications