பிக்பாஸ் அல்டிமேட்: நன்றி மழைபொழியும் ஜூலி..காரணம் இது தானா.. அப்போ ஓகே

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் ஜூலி தற்போது தன்னுடைய ரசிகர்களுக்கு நன்றி கூறியுள்ளார்.

ரசிகர்களின் செயல்பாடு ஜூலியை உணர்ச்சிவசப்பட வைத்துள்ளதாம்.

ஜல்லிக்கட்டில் மெர்சல்

ஜல்லிக்கட்டில் மெர்சல்

தற்போது ஒளிபரப்பாக இருக்கும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் ஜூலி இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது போட்டியாளராக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார். ஏற்கனவே இவர் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்டு ரசிகர்களின் மத்தியில் வேற லெவல் பிரபலம் அடைந்துள்ளார். ஆரம்பத்தில் ஜூலி என்றால் யார் என்றே தெரியாமல் இருந்த காலகட்டத்தில், இவர் தன்னுடைய துணிச்சலான கேரக்டர் மூலமாக ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மெர்சல் காட்டிவிட்டார்.

நெகட்டிவ் பற்றி கண்டு கொள்வதில்லை

நெகட்டிவ் பற்றி கண்டு கொள்வதில்லை

தனக்கென்று தனி அடையாளத்தோடு பிக்பாஸ் முதல் சீசனில் அறிமுகமான ஜூலி, நாட்கள் செல்ல செல்ல ரசிகர்களின் மத்தியில் நெகட்டிவ் ஆக மாறிவிட்டார். ஆரம்பத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் குழந்தைத்தனமாக செய்யும் செயல்களை ரசித்து வந்த பல ரசிகர்கள் இவருக்கு ஓவியாவிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஆரம்பித்துவிட்டனர். என்னதான் தனக்கு நெகட்டிவ் கமெண்டுகள் வந்தாலும் அதையெல்லாம் செவி சாய்க்காமல் பல நேரங்களில் இவர் கண்டு கொள்ளாமல் தான் இருந்து வந்துள்ளார். இதைப் பார்த்து பலரும் அதிசயமும் பட்டுள்ளார்கள். இந்த சின்ன வயதில் இப்படி ஒரு மெச்சூரிட்டியா என்றும் கேட்டுள்ளார்களாம்.

பிக்பாஸ் அல்டிமேட்டில் அறிமுகம்

பிக்பாஸ் அல்டிமேட்டில் அறிமுகம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனக்கு கிடைத்த நெகட்டிவ் பெயரை மீண்டும் சரிசெய்ய வேண்டும் என்று தற்போது பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார். யாரால் இவருடைய பெயர் கெட்டுப் போனதோ அவரும் மீண்டும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதால் இவர்கள் இருவருக்கும் பிரச்சனை வெடிக்குமா?? அல்லது பாசமழை பொங்குமா?? என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. வெளியே வந்த பிறகு மீண்டும் எதற்கு இந்த விஷப்பரீட்சை என்றும் பல கேள்விகளை எழுப்பி இருக்கின்றனர்.

ஒரே நன்றி மழைதான் போங்க

ஒரே நன்றி மழைதான் போங்க

தன்னைப்பற்றி நெகட்டிவ் கமெண்டுகளை அனுப்புபவர்களுக்கு பதிலளிக்க விரும்பாத ஜூலி தற்போது தன்னுடைய ரசிகர்களுக்கு இன்ஸ்டாகிராமில் நன்றி கூறியிருக்கிறார். போட்டியாளர் வெளிப்படுத்தும் காணொளி பெரும் ஆதரவு அளித்தமைக்கு நன்றி... அனைத்து பாசிட்டிவ்விட்டிகளுக்கும் நன்றி, என்று தன்னுடைய நன்றி மழைகளை பொழிந்து வருகிறார். இதைப் பார்த்த அவருடைய ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறிக் கொண்டிருக்கும் போது, ஒரு சில ரசிகர்கள் அறிவுரைகளையும் கூறி வருகின்றனர். கவனமாக விளையாடு ஜூலி. ...மா.. கரணம் தப்பினால் மரணம் என்று பயமுறுத்தவும் செய்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+