விஷால் காதில் இதை தான் சொன்னேன்..! ரகசியங்களை உளறிய அன்ஷிதா! இவ்ளோ நடந்துச்சா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் இருந்து வெளியே போகும்போது அன்ஷிதா விஜே விஷால் காதில் என்ன சொன்னேன் என்பது பற்றி பிக் பாஸ் அன்லிமிடெட் நிகழ்ச்சியில் விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஆறாம் தேதி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி 91 வது நாளில் இன்று ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் இன்னும் ஒரு வாரத்தோடு இந்த நிகழ்ச்சி முடிவடைகிறது. அடுத்த வாரம் இந்த நிகழ்ச்சியில் மணி டாஸ்க் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து அதற்கு அடுத்த வாரத்தில் கிராண்ட் பினாலே நடைபெறும்.

அதுபோல இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்து வெளியே வந்த அன்ஷிதா மற்றும் ஜெஃப்ரி இருவரும் பிக் பாஸ் பன் லிமிடெட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்கள். அப்போது ரசிகர்கள் கேட்க நினைத்த பல கேள்விகளை அந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருக்கும் சபரிநாதன் கேட்டிருக்கிறார்.
அதிலும் பிக்பாஸில் விஷால் அன்ஷிதாவை காதலித்தாரா? என்பது பலருடைய கேள்வியாக இருந்தது. ஏற்கனவே அன்ஷிதா அவரோடு சீரியலில் நடித்த அர்னவ் உடன் அதிகமாக வதந்திகளில் சிக்கிக்கொண்டிருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இவர்கள் இருவரும் முன்ன பின்ன தெரியாதது போல நடந்து கொண்டனர். இது குறித்து கூட அதிகமான விமர்சனங்கள் வந்தது. அது பற்றியும் சபரி அன்ஷிதாவிடம் கேட்டிருக்கிறார்.
அதுபோல பிக் பாஸ் வீட்டிற்குள் ஆரம்பத்தில் விஷால் தர்ஷிகா பின்னாடி சுற்றிக் கொண்டிருந்தார். தர்ஷிகாவும் விஷாலை காதலிப்பது போன்றே பேசிக்கொண்டு இருந்தார். ஆனால் விஷால் நமக்குள் வேறு எதுவும் இல்லை என்பதை அடிக்கடி தெளிவுபடுத்திக் கொண்டிருந்தார். ஆனால் தர்ஷிகா வெளியே செல்லும்போது அவருடைய கையில் அணிந்து இருந்த மோதிரத்தை கழட்டி விஷாலிடம் கொடுத்துவிட்டு வந்திருந்தார்.

அதுபோல தர்ஷிகா வெளியே சென்று பிறகு அன்ஷிதாவோடு விஷால் அதிகமாக பேசிக் கொண்டு இருந்தார். அன்ஷிதா எவிக்ஷன் ஆகும்போது விஷால் காதில் ஏதோ ரகசியமாக சொல்லிவிட்டு வந்தார். அதுபோல விஷால் ஒரு செயினை அன்ஷிகாவிடம் கொடுத்து இருந்தார். அதை தன்னுடைய கழுத்தில் அன்ஷிதா போட்டுவிட்டு வெளியே வந்திருந்தார்.
விஜய் சேதுபதி முன்பு நின்று பேசிக் கொண்டிருக்கும்போது கூட அன்ஷிதா அந்த செயினை காட்டி இதை கழுத்தில் தான் போட்டு இருக்கிறேன் என்று பேசி இருந்தார் இதனால் அன்ஷிதா விஷால் காதில் என்னதான் சொன்னார் என்பது பலருடைய கேள்வியாக இருந்தது. அதைத்தான் இப்போது சபரியும் பிக் பாஸ் அன்லிமிடெட் நிகழ்ச்சியில் அன்ஷிதாவிடம் கேட்டிருக்கிறார்.
அதற்கு அன்ஷிதா நான் விஷால் காதில் பேசியது வேறு, ஆனால் வெளியே பலர் வேற மாதிரி பேசிட்டு இருக்குறாங்க. நானும் அதையெல்லாம் பார்த்தேன். நான் விஷால் காதில் சொன்னது என்னுடைய எக்ஸ் உடைய பெயர் தான். அது அர்னவ் கிடையாது, விஷாலும் கிடையாது என்று விளக்கம் கொடுத்திருக்கிறார். ஏற்கனவே அர்னவ் சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதரை காதலித்து திருமணம் செய்து கொண்டிருந்தார்.

ஆனால் திவ்யா கர்ப்பமாக இருக்கும்போது அர்னவ் செல்லம்மா சீரியலில் நடிக்கும் போது அன்ஷிதாவோடு நெருங்கி பழகுகிறார் என்றுதான் திவ்யா மற்றும் அர்னவ் வாழ்க்கையில பிரச்சனையே ஏற்பட்டது. அது பலருக்கும் தெரிந்த சங்கதி தான். அந்த நேரத்தில் அன்ஷிதா ஒரு ஆணின் கையை பற்றிய படி இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி போட்டு இருந்தார். அதுவும் பரபரப்பாக பேசப்பட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications