விசித்ரா உங்க பர்சனல் பத்தி நான் சொல்லட்டா? உங்களை உள்ளே தூக்கி வச்சுருவாங்க.. வனிதா சொன்ன பகீர்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் நேற்று விசித்திரா தினேஷின் பர்சனல் வாழ்க்கையை பற்றி பேசியதை கண்டித்து வனிதா வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அதில் அடுத்தவர்களின் பர்சனல் வாழ்க்கையை பற்றி பேசும் உங்களுடைய பர்சனல் பற்றி நான் பேசினால் என்ன ஆகும் தெரியுமா என்று வனிதா, விசித்ராவை குறித்து கேள்வி கேட்டு இருக்கிறார்.
அதோடு விசித்ரா இந்த மாதிரி நடந்து கொண்டால் வரும் அவருடைய மருமகள்கள் பிற்காலத்தில் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து விடுவார்கள் என்று வனிதா கூறி இருக்கிறார். தற்போது இந்த வீடியோ வைரல் ஆகிறது என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

அந்த வகையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் விசித்திரா ஆரம்பமான நாளிலிருந்து அதிகமாக வீட்டிற்குள் பிரச்சனைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் விசித்திராவிற்கும் நடிகை வனிதாவின் மகள் ஆன ஜோவிகாவிற்கும் இடையே படிப்பு விஷயத்தில் பிரச்சனை ஏற்பட்டது.
அப்போது அதிகமானோர் விசித்திராவிற்கு ஆதரவு கொடுத்து வந்தனர். அப்போது இருந்து அவருக்கு எதிராகவே நடிகை வனிதா தன்னுடைய ரிவியூவில் பேசி வருகிறார். சில நேரங்களில் விசித்திரா செய்யும் நல்ல செயல்களை பாராட்டியும் வருகிறார். இந்த நிலையில் இன்று வனிதா வெளியிட்ட வீடியோ ஒன்றில் விசித்திரா பற்றி கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
அதாவது நேற்று பிக் பாஸுக்குள் ரவீனா சமையல் செய்வதற்காக பாத்திரத்தை கழுவுவதற்காக விசித்திராவை கூப்பிட்டு இருந்தார் அதற்கு விசித்திரா கோபமாகி உங்களால இந்த வேலை கூட செய்ய முடியாதா என்று கேட்டபடியே இந்த பொண்ணுங்க எல்லாம் எப்படித்தான் கல்யாணம் பண்ணி நாளைக்கு குடும்பம் நடத்தப் போகுதுன்னு தெரியல என்று அலுத்து கொண்டார்.
பிறகு தினேஷ் தான் தன்னை வேலை செய்ய சொல்லி ரவீனாவிடம் சொல்லி இருப்பார் என்று நினைத்து தினேஷை திட்டிக் கொண்டிருந்தார். அதாவது இவருடைய மூஞ்ச பாத்தாலே பிடிக்கல, இவரோட எல்லாம் எப்படித்தான் வாழ முடியும்? மூன்று மாசமே இவங்களோட என்னால குப்பை கொட்ட முடியல... அம்மா தாயே நீ திருப்பி இவர்கூட வாழ்ந்திடாதே என்று கேமராவை பார்த்து ரச்சிதாவிற்கு செய்தியும் கொடுத்திருந்தார்.
இந்த நிலையில் இது குறித்து வனிதா தன்னுடைய கருத்தை தெரிவித்து இருக்கிறார். அதில் தினேஷ் குறித்து விசித்திரா இப்படி பேசியது ரொம்பவே மோசமான செயல். தினேஷின் பர்சனல் வாழ்க்கையை குறித்து விசித்திரா எப்படி இப்படி பேசலாம்? இது ஒரு நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் எல்லோரும் சம்பளம் வாங்கிக் கொண்டுதான் வந்திருக்கிறோம்.
அதனால் அங்கே வேலை செய்ய வேண்டியது தானே? வேலை செய்ய மாட்டேன் என்று எப்படி அடம் பிடிக்க முடியும்? அங்கு இருப்பவர்களில் விசித்திரவிற்கு தான் அதிக சம்பளம். ஆனால் அவர் நான் வேலை செய்ய மாட்டேன் என்று அடம்பிடிப்பது எந்த வகையில் நியாயம்? அதுவும் தினேஷ் முகம் சரியில்லை, அவர் அழகாகவில்லை, அவரோடெல்லாம் வாழ முடியாது என்று இவர் எதுக்கு பீல் பண்றாரு...

விசித்ரா என்ன தினேஷை கல்யாணமா பண்ணி இருக்காங்க? அதுவும் ஏற்கனவே தினேஷூம், ரச்சிதாவும் பிரிந்து இருக்காங்க. ரட்சிதாவோடு சேரனும்னு தினேஷ் பலமுறை சொல்லிட்டு இருக்காங்க. ஆனால் விசித்திரா தினேஷ் மீது இருக்குற கோவத்துல அவங்க வாழ்க்கையில் பூகம்பத்தை ஏற்படுத்துறாங்க.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications