Bigg Boss: விஜய் சேதுபதியின் பெருந்தன்மையை பார்த்தீங்களா? கெமிக்கு கொடுத்த கண்ணாடியின் விலை இவ்வளவாம்!
சென்னை: விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9, விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், கடந்த வாரம் குறைந்த வாக்குகள் பெற்ற காரணமாக நடிகை கெமி எலிமினேட் செய்யப்பட்டார். போட்டியிலிருந்து வெளியேறிய கெமிக்கு, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி செய்த ஒரு உணர்ச்சிப்பூர்வமான செயல் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

மேடையில் உடைந்த கெமி
எலிமினேட் ஆகி மேடைக்கு வந்த கெமி, விஜய் சேதுபதியுடன் பேசிக்கொண்டிருந்தபோது திடீரெனக் கண்கலங்கினார். பிக் பாஸ் வீட்டை நினைத்து கலங்கிய அவர், நிஜ வாழ்வில் மிகவும் தனிமையாக வாழ்ந்து வருவதாகவும், ஒருவேளை மட்டுமே சாப்பிட்டதாகவும் உணர்ச்சிப்பூர்வமாகப் பகிர்ந்து கொண்டார்.
தன்னுடைய அப்பா சமீபத்தில் தான் இறந்து போய்விட்டார், அதற்கு பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் வரும் சமயத்தில் தான் தன்னுடைய அம்மாவும் ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகி இருந்தார். அதனால் தனக்கு பணத்தேவை அதிகமாக இருந்ததால்தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்ததாகவும் பேசி இருந்தார். அதோடு தான் இன்னும் கொஞ்ச நாட்கள் இருப்பேன் என்று எதிர்பார்த்தேன் அதற்குள் வெளியேறுவது கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது என்றும் சோகமாக பேசியிருந்தார்.
பிக் பாஸ் வீடே பரவாயில்லை
வீட்டில் இருந்த தனிமையைவிட, பிக் பாஸ் வீடே சந்தோஷமாக இருந்ததாக கெமி சொன்னது, பிக் பாஸ் வீட்டின் நிகழ்வுகளை அதிர்ச்சியுடனும் கேலியுடனும் பார்க்கத் தூண்டியுள்ளது. "பணம் தேடிப் போனா இந்த கெதியா - இதெல்லாம் ஒரு விளம்பரத்துக்காகத்தானே ஓடுது!" என நாடோடித் தனமாக பேசுகின்றனர் சில ரசிகர்கள்.
விஜய் சேதுபதியின் பரிசு
கண்கலங்கிய கெமியை பார்த்த விஜய் சேதுபதி, உடனடியாகத் தன்னுடைய கண்ணாடியை (கூலிங்கிளாஸ்) கழற்றி பரிசாகக் கொடுத்து அவரை உற்சாகப்படுத்தினார். கெமி சந்தோஷமாகப் போட்டியாளர்களுடன் பேசிவிட்டு வெளியேறினார்.
கெமி புறப்படும் போது மேடையில் இருந்து இறங்கியதும், "இந்த கண்ணாடியை எடுத்து கொள்ளவா"எனக் கேட்டபோது, விஜய் சேதுபதி, "தாராளமாக இது என்னுடைய உழைப்பில் வாங்கியது. அதனை உங்களுக்கு பரிசாகத் தருகின்றேன்" என்று குறிப்பிட்டார். இது தான் ஒரு மண்ணின் மகன் என்பதை உறுதிப்படுத்துவதாகவும், அவருடைய மனுஷீத்தை நிரூபிப்பதாகவும் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.
ரூ.18,000 பரிசு
விஜய் சேதுபதி பரிசளித்த அந்தக் கண்ணாடி துபாயில் வாங்கியது என்றும், அதன் விலை சுமார் 18,000 ரூபாய் என்றும் தகவல் வெளியாகி சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வருகிறது. "கொடுக்க வேண்டும் என்ற மனம்தான் முக்கியமே தவிர எங்கு வாங்கியது எவ்வளவு வாங்கியது என்பது முக்கியமில்லை" என்று விஜய் சேதுபதி போட்டியாளர்களிடம் பேசியது அவருடைய உயர்ந்த எண்ணத்தைக் காட்டுவதாக இருந்தது.
இந்த பரிசும், விஜய் சேதுபதியின் பேச்சும் சினிமா ரசிகர்கள் மத்தியில் அவருக்கான மரியாதையை மேலும் உயர்த்தியுள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications