Bigg Boss: கனி மீது கோபம் இருக்கு! FJ கூட அப்படி இருக்க காரணம்! அவங்க அசிங்கப்படுத்துறாங்க! விஜயலட்சுமி ஆதங்கம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் கனியின் செயல்பாடு தங்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியதாக கனியுடைய சகோதரியான நடிகை விஜயலட்சுமி நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கிறார். இது பலருடைய கருத்தை பெற்று வருகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே மனநலம் சார்ந்த ஒரு நிகழ்ச்சியாக தான் இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு நெகட்டிவ் பெயரோடு இருப்பவர்கள் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால் அவர்கள் பாசிட்டிவாக மாறிவிடுகிறார்கள். அதேபோல பலராலும் பாராட்டப்பட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் சென்று தங்களுடைய பெயரை இழந்து, தாங்கள் இதுவரைக்கும் சேர்த்து வைத்த மரியாதை எல்லாம் குறைத்துக் கொள்கிறார்கள்.

அதுபோலத்தான் இந்த சீசனில் கனியின் நிலைமை இருக்கிறது. கனி இதற்கு முன்பு விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் காரக்குழம்பு கனி என்று பெயர் வாங்கியவர். டைட்டில் வெற்றியும் பெற்றிருந்தார். கனி வேறு யாரும் இல்லை. இயக்குனர் அகத்தியனின் மூத்த மகள்தான். இயக்குனர் அகத்தியனுக்கு மூன்று மகள்கள் இருக்கும் நிலையில் மூத்த மகள் கனி, இரண்டாவது மகள் விஜயலட்சுமி மற்றும் நிரஞ்சனா என்று மூன்று மகள்கள் இருக்கின்றனர்.
இதில் இரண்டாவது மகளான விஜயலட்சுமி ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார். ஆனால் பாதியில் அவர் வெளியேற்றப்பட்டு இருந்தார். அதற்குப் பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அவர் டைட்டில் வெற்றி பெற்றிருந்தார். இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் கனி மற்றும் எஃப்ஜே இருவரும் பழகும் விதம் குறித்து அதிகமான ட்ரோல் ஆகி வருகிறது.
எஃப்ஜே, கனியின் கழுத்தில் முத்தம் கொடுப்பது, நெற்றியில் முத்தம் கொடுப்பது, கையைப் பிடித்து தடவிக் கொண்டிருப்பதெல்லாம் செய்து கொண்டிருப்பது அதிகமாக வீடியோக்களாக இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் கடுப்பான விஜயலட்சுமி பேசும்போது நாங்களும் எஃப்ஜே மற்றும் அக்காவை பற்றி தவறாக பரவி வரும் வீடியோக்களை பார்த்தோம்.
பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு உள்ளே போகும்போதே ஒரு சிலர் பிஆர் செட் பண்ணி கொண்டு போவார்கள். அந்த சீசனில் யார் தமக்கு டப் போட்டியாளராக இருப்பார்களோ அவர்களை பற்றி மோசமாக ட்ரோல் செய்ய சொல்வார்கள். அதுபோலத்தான் இப்போ அக்காவுக்கு நடந்து கொண்டு இருக்கிறது. அக்கா மீது எங்களுக்கு கோபம் இருக்கிறது, ஏனென்றால் அவள் எப்பவுமே இப்படித்தான். யார் என்ன நினைப்பார்கள் என்று நினைக்க மாட்டார்.

அந்த இடத்தில் தனக்கு சரி என்று பட்டது என்றால் அதை அப்படியே செய்துவிடுவார். அதுபோலத்தான் பிக் பாஸ் வீட்டிற்குள் இப்போது அவள் நடந்து கொண்டிருக்கிறாள் என்று நினைக்கிறேன். பிக்பாஸ் வீட்டிற்குள் எஃப்ஜேவுடன் அவங்க பேசுவது, பழகுவது எல்லாம் பார்க்கும்போது எவ்வளவோ ட்ரோல் பண்ணுறாங்க. அப்படி டோல் பண்றவங்களுடைய மனசில்தான் அந்த வக்கிரமும், மோசமான எண்ணங்களும் இருக்கிறது. அதனால் அவர்கள் அப்படி பேசுறாங்க.
ஆனால் கனி அக்காவிற்கு எஃப்ஜே அவர்களுடைய சொந்த மகள் போல தான். அவங்க மகள் கிட்ட எப்படி பேசுறாங்களோ அதேபோல எஃஜேயிடம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். கனி அக்காவின் மகளுடைய வயசு தான் எஃப்ஜேக்கு அதனால் அந்த பாண்டிங் அவங்களுக்கு இருக்கிறது. தவிர அடுத்தவங்க அசிங்கமா பேசுறாங்க, என்கிறதுக்காக நாங்க வருத்தப்படவும் இல்லை என்று விஜயலட்சுமி பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications