நீங்கள் எல்லாம் மனுஷனா? கரூர் சோகம்: விஜய் மீது பிக்பாஸ் அசீம் சரமாரி தாக்கு! நிஜத்தில் ஜீரோ, ஆதங்கம்
சென்னை: தமிழ் சினிமாவில் தற்போது பேசுபொருளாக இருப்பது, அரசியல் ஆசையோடு களம் இறங்கியுள்ள நடிகர் விஜய்யின் செயல்பாடுகள் தான். கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் நடந்த அவரது கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில், ரசிகர்கள் மயங்கி விழுந்ததும், சிலர் உயிரிழந்ததுமான சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்தச் சம்பவம் குறித்து நடிகர் விஜய் நான்கு நாட்கள் கழித்து மௌனம் கலைத்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் டைட்டில் வின்னர் அசீம், விஜயை மிகவும் கடுமையாக விமர்சித்து ஒரு வீடியோவை வெளியிட்டு, பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.
அசீம் டைட்டில் வின்னர் ஆனபோது மக்கள் மத்தியில் விமர்சிக்கப்பட்டாலும், அவர் தற்போது எழுப்பியுள்ள கேள்விகள் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

அசீமின் சரமாரி கேள்விகள்
பிக்பாஸ் வின்னரான அசீம், நடிகர் விஜய் மீது அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். அவரது பேச்சில் இருந்த சில முக்கியப் பகுதிகள் இவைதான்: "உங்களைப் பார்க்க வந்த கூட்டம், அந்த நெரிசலில் இரண்டு மூன்று பேர் மயங்கி விழுகிறார்கள். அதுவும் நீங்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே இது நடக்கிறது. அதை நீங்களும் பார்த்தீர்கள். பார்த்து என்ன பண்ணீங்க? ஒன்னும் பண்ணல. கரூரிலிருந்து உங்கள் தனி விமானத்தைப் பிடிப்பதற்காக திருச்சிக்குப் போனீங்க."
புறமுதுகு காட்டினீர்கள்
"போகும்போது வழியில் உங்களுக்கு போன் கால் வராமலா இருந்திருக்கும்? அதைக் கேட்டு நீங்கள் என்ன பண்ணீங்க? திரும்பி வந்தீங்களா? திருச்சியிலிருந்து சென்னைக்குப் போகும்போது, விமான நிலையத்தில் பத்திரிகை நிருபர் இந்தச் சம்பவத்தைப் பற்றிக் கேட்டபோது எதுவும் பதில் சொன்னீங்களா? புறமுதுகு காட்டி கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டீர்கள். நீங்கள் எல்லாம் என்ன சார் தலைவர்? தலைவரை விடுங்க, நீங்கள் எல்லாம் என்ன மனுஷன்?"
ஓட்டு போட வரவில்லை
"உங்களை திரையில் பார்த்து கைதட்டியவன் தானே வந்தான்? அங்கு சின்ன குழந்தைகள், பச்சிளம் குழந்தைகள் வந்திருந்தார்கள். அவர்கள் என்ன உங்களுக்கு ஓட்டு போடவா வந்தார்கள்? வயது முதிர்ந்தவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், வாய் பேச முடியாத பெண்கூட அங்கு வந்திருந்தார். ஒரு சின்ன குழந்தை மிதிபட்டு அதோட கழுத்து எலும்பு உடைந்து போய் இருக்கிறது. கேட்கிற எங்களுக்கே பதைக்கிறது. ஆனால், உங்களுக்குக் கொஞ்சம் கூட அதைப் பற்றிக் கவலையில்லை. நேரடியாக ப்ளைட்டைப் பிடித்து சென்னை வந்து விட்டீர்கள்."
திமுகவின் செயல்பாடு Vs விஜய்யின் மௌனம்
விஜய் நான்கு நாட்கள் கழித்து மௌனம் கலைத்ததைக் குறித்தும் அசீம் காட்டமாகப் பேசினார்.
"இது நடந்தது செப்டம்பர் 27-ஆம் தேதி. ஆனால், இன்றுடன் நான்கு நாட்கள் ஆகிவிட்டது. இந்த விஷயத்தைப் பற்றிப் பேசுவதற்கு உங்களுக்கு நான்கு நாட்களா தேவைப்பட்டது?" என்று கேள்வி எழுப்பினார். மேலும், மேடையில் விஜயால் விமர்சிக்கப்பட்ட தி.மு.க. அரசே பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஓடி வந்து உதவி செய்ததையும் அசீம் சுட்டிக் காட்டினார்.
"மேடைக்கு மேடை தி.மு.க. அது பண்ணுச்சு, இது பண்ணுச்சுன்னு சொல்றீங்களே? அந்தக் கட்சியில இருக்கிறவங்கதான் இன்று பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஓடி வந்திருக்கிறார்கள். சனிக்கிழமை இரவு இந்தச் செய்தி கேட்டதும் முதலமைச்சர் ஸ்டாலின் வந்து பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறுகிறார். அவரிடம் நிருபர், 'சார், இதன் காரணமாக விஜயைக் கைது செய்வீர்களா?' என்று கேட்டார்கள். அப்போ கூட முதலமைச்சர் என்ன சொன்னார் தெரியுமா? 'இதை நான் அரசியலாகப் பார்க்கவில்லை. என்னுடைய தமிழ் மக்கள் இறந்திருக்கிறார்கள். அதைப் பார்க்கத்தான் வந்திருக்கிறேன். அவங்க உயிர் தான் எனக்கு முக்கியம்' என்றார். அப்போ நீங்கள் குறை சொன்ன இந்த ஆட்சியில் இருக்கிறவர்கள் தான் இன்று மக்களோடு நின்று கொண்டிருக்கிறார்கள். ஆனால், நீங்கள் மக்களுடன் நிற்கவே இல்லை."
முதல்வர் கனவுக்குச் சவால்
அசீம், விஜய்யின் அரசியல் கனவு குறித்தும் நேரடியாகச் சவால் விடுத்தார். "வெறும் 28 ஆயிரம் பேர் கூடி, அந்தக் கூட்டத்தில் 41 உயிர்கள் (மயக்கம், காயம்) ஏற்பட்டிருக்கிறது. அதுக்கே உங்களால் நின்னு அதை எதிர்கொள்ள முடியவில்லை. இதுக்கே உங்களுக்குத் தைரியம் இல்லை. நாளைக்கு நீங்கள் பகல் கனவு காண்கிறீர்கள் அல்லவா? நான் முதலமைச்சராகி விடுவேன் என்று. ஒருவேளை உங்கள் பகல் கனவு படி, கனவில் கூட நீங்கள் சி.எம். ஆகிவிட்டால், இந்த எட்டிலிருந்து பத்து கோடி மக்களுக்காக நீங்கள் என்ன பண்ணுவீங்க? ஒண்ணும் பண்ணப் போறது கிடையாது. இன்னும் ஒரு வாரம் கழித்து நீங்கள் என்ன பண்ணுவீர்கள் தெரியுமா? மேடையில் அழுவீங்க, இல்லை ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பீங்க. வாய்ப்பு இல்ல ராஜா!"என்று ஆதங்கத்துடன் அசீம் பேசி இருக்கிறார்.
கோலிவுட் ஹீரோக்களின் மௌனம்
கரூர் சம்பவம் குறித்துப் பேசிய அசீம், மற்ற உச்ச நட்சத்திரங்கள் மௌனம் காப்பதையும் கடுமையாக விமர்சித்துள்ளார். "திரையில் மட்டும் தான் ஹீரோ. தரையில் ஹீரோ இல்லை" என்று விஜயை விமர்சித்த அசீம், "ரஜினி, கமல் முதல் நாளாக அவர்களுடைய வருத்தத்தைப் பதிவிட்டு இருந்தனர். ஆனால், மற்ற நடிகர்கள் ஒருத்தர்கூட இதைப்பற்றி வாய் திறக்கவே இல்லை. ஏன்? உங்களுக்குப் பயமா? ஏனெனில் விஜய் ரசிகர்களைப் பகைத்துக் கொண்டால் நம்முடைய படங்கள் ஓடாமல் போய்விடுமோ என்ற பயத்தினால் தான் நீங்கள் வாய் திறக்கவில்லையா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். நடிகர்கள் மட்டுமல்ல, "மக்களுக்கு அநீதி நடக்கிறது" என்று படங்களில் பேசிய இயக்குநர்களும் வாய் திறக்கவில்லை என்று அசீம் சாடியிருக்கிறார்.
-
திமுக கூட்டணியில் 3 சீட் கேட்டுள்ளோம்.. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவோம்- எஸ்டிபிஐ தலைவர் தகவல் -
விஜயால் மது குடிக்காமல் இருக்க முடியாதா? யாரு சொன்னது? கண்முன்னே நடந்த சம்பவம்! சர்ச்சைக்கு அனு மோகன் பதிலடி -
பால்வாடி இயக்கம்.. லீடர்னு சுற்றியவன்.. வில்லிவாக்கத்தில் சம்பவம் இருக்கு! உறுதியாக சொன்ன சேகர் பாபு -
விஜய் பிரண்ட் சஞ்சீவ்வை சுற்றும் பிரச்சனை.. உண்மை தெரியாமல் பேசாதீங்க! ஓபனாக உடைத்து பேசிய ப்ரீத்தி சஞ்சீவ் -
கருப்பு ஆடு யார்? விஜய் - சங்கீதா விவாகரத்து மனு கசிந்தது எப்படி? உண்மையை உடைத்த செங்கல்பட்டு ஆர்டிஐ -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. மும்பைக்கு பறந்த விஜய்! பைனான்ஸ் செய்யும் அரசியல் புள்ளியின் வாரிசு -
“திமுக தீயசக்தி”! கோஷம் போட்ட சிறுவர்கள்! த.வெ.க ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் மீது பாய்ந்தது வழக்கு -
மும்பை பயணம் முடிந்த கையோடு விஜய் எடுத்த முடிவு! புதுவை தவெக வேட்பாளர்கள் பட்டியல் நாளை ரிலீஸ் -
பச்சை துண்டு போட்டு விஜய் கத்துனா விவசாயி ஆயிடுவாரா? சூட்டிங் வைத்து 50 பேரை கொன்னுட்டாரு! ஜூலி வீடியோ -
ஜனநாயகன் பிரச்சனை.. அடிச்சவன் சொல்ல மாட்டான்.. அடிவாங்குபவன் சொல்லனும் சார்.. இயக்குநர் அமீர்! -
சினிமாவை விட்டு விலகும் திரிஷா.. காரணம் இதுதானா? அதிர்ச்சி பின்னணி! லீக்கான தகவல்கள்












Click it and Unblock the Notifications