கொச்சையாக பேசிய நிக்சன்.. கமல் செய்யல ஆனால் வெளுத்து வாங்கிய நடிகர் நாகர்ஜுனா.. வைரலாகும் வீடியோ
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி பல மொழிகளில் ஒளிபரப்பாகி வரும் நிலையில் தமிழில் கமலை போலவே தெலுங்கில் தொகுப்பாளராக நடிகர் நாகார்ஜுனா இருந்து வருகிறார்
இந்த நிலையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் நிக்சன் வினுஷா உடல் அமைப்பை வைத்து கேலி செய்திருந்தார். ஆனால் அதை கமல் கண்டுகொள்ளாத நிலையில் தெலுங்கில் அதுபோல சம்பவம் நடந்தபோது நாகர்ஜுனா கடுமையாக, கேலி செய்த ஒரு போட்டியாளரை திட்டி இருக்கிறார்.

நாகார்ஜுனா தெலுங்கு பிக் பாஸ் போட்டியாளரை திட்டிய விதம் குறித்து இப்போது இணையத்தில் அதிகமாக பேச பட்டு வருகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சி உளவியல் சார்ந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் சண்டை சச்சரவுகள் மற்றும் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாத நிகழ்ச்சியாக தான் இருந்து வருகிறது. அதனால் தான் பல மொழிகளில் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டு வருகிறது. அதில் முன்னணி நடிகர்கள் தொகுப்பாளராக தொகுத்து வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் தான் தமிழில் நடிகர் கமல்ஹாசன் தற்போதைய ஏழாவது சீசன் வரைக்கும் தொகுப்பாளராக தொடர்ந்து கொண்டிருக்கிறார். கடந்த சீசனில் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போயிருந்த நிலையில் தான் கமல்ஹாசனுக்கு பதிலாக நடிகர் சிலம்பரசன் மற்றும் நடிகை ரம்யா கிருஷ்ணன் என சிலர் பங்கேற்று இருந்தனர்.
இந்த நிலையில் இப்போது கமல் பிக் பாஸ் வீட்டிற்குள் நடக்கும் பிரச்சனைகளை சரியாக கையாளுவது இல்லை என்று அதிகமான நெகட்டிவ் கருத்துக்கள் குவிந்து வருகிறது. அதிலும் இந்த சீசனில் திடீரென்று பிரதீப் வெளியேற்றப்பட்டது குறித்தும் பலர் கமல் குறித்தும் விமர்சித்து வந்தனர். அதுபோல அதற்கு தன்னுடைய விளக்கத்தையும் கடந்த வாரத்தில் கமல்ஹாசன் கொடுத்திருந்தார்.
தான் தனியாக முடிவெடுத்து பிரதீப்பை வெளியேற்ற வில்லை என்றும் சில போட்டியாளர்கள் பிரதீப் குறித்து குற்றச்சாட்டு வைத்ததால் தான் அப்படி ஒரு முடிவை எடுத்தேன் என்றும் குறும்படம் போட்டு விளக்கி இருந்தார். இப்படியாக இருக்கும் நிலையில் பிரதீப்க்கு உடனடியாக களத்தில் இறங்கிய நடிகர் கமல்ஹாசன் உள்ளே நிக்சன் வினுஷாவை உருவ கேலி செய்து பெரும் சர்ச்சையான போதிலும் அது பற்றி கேள்வி கேட்காதது பலரையும் கேள்வி கேட்க வைத்திருக்கிறது.
ஏற்கனவே வினுஷா வெளியே வந்து பல பேட்டிகளில் நிக்சன் தன்னை பற்றி பேசியது தவறு என்றும் தனக்கு நிக்சன் மீது இருக்கும் கோபத்தையும் வெளிப்படுத்துகிறார். அதுபோல பிக் பாஸ் வீட்டிற்குள் டாஸ்டில் கூட நிக்சன் வினுஷாவை பற்றி பேசியது அம்பலத்துக்கு வந்திருந்தது. இப்படியாக இருக்கும்போது கூட நிக்சனுக்கு ஒரு வார்னிங் கூட கமல்ஹாசன் கொடுக்கவில்லை என்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்து இருக்கிறது.
இந்த நிலையில் இதேபோன்று சம்பவம் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடந்திருக்கிறது. அதாவது ஒவ்வொரு வாரமும் நடைபெறும் எலிமினேஷன் டாஸ்க் போன்று அந்த வாரம் நடைபெற்றிருக்கிறது. அப்போது சகப் பெண் போட்டியாளர் ஒருவரை ஒரு ஆண் போட்டியாளர் அவருடைய உடல் அளவை வைத்து கை சேகையின் மூலமாக அவரை கிண்டல் செய்து இருக்கிறார்.
அப்போது அந்தப் பெண் போட்டியாளர் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் விட்டிருக்கிறார். ஆனால் அது பற்றி அந்த வார இறுதி நாள் எபிசோட்டில் நடிகர் நாகார்ஜுனா சம்பந்தப்பட்ட அந்த ஆண் போட்டியாளர்களை கடுமையாக கண்டித்து இருக்கிறார் அதோடு பெண் போட்டியாளர் ஏன் கேள்வி எழுப்பவில்லை என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த நிலையில் இந்த வீடியோ தற்போது இணயத்தில் வைரலாகி வரும்போது இதை சுட்டிக்காட்டி அதிகமான ரசிகர்கள் நாகார்ஜுனாவிடமிருந்து கமல் இதை கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறி வருகின்றனர். மற்ற மொழியில் தொகுப்பாளர்கள் உள்ளே போட்டியாளர்கள் செய்யும் செயல்களை கடுமையாக விமர்சித்து உடனே தண்டனை கொடுக்கிறார்கள்.
ஆனால் கமல் அப்படி செய்வதில்லை காரணம் அவருடைய அரசியல் வாழ்க்கை பாதிப்படைந்து விடும் என்று நினைக்கிறாரா? என்று பல கேள்வி எழுப்பி கொண்டிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications