அடுத்த ஸ்கெட்ச் பிராவோவுக்கா! உன்ன இப்படி பார்க்குறான்! பூர்ணிமாவை உசுப்பேத்தும் பிக்பாஸ் மாயா, ஐஷு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து பிரதீப் ஆன்டனிக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பிய நிலையில் தற்போது ஆர்ஜே பிராவோவையும் வெளியேற்ற சதி நடப்பதாக சொல்லப்படுகிறது.

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்தே ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவர் பிரதீப் ஆன்டனி. அவரை சக போட்டியாளர்கள் சிலர் வெறுத்தாலும் அவருக்கு ரசிகர்கள் இருந்து வந்தனர். தொடர்ந்து நாமினேட் செய்யப்பட்டாலும் அவர்தான் முதல் ஆளாக எலிமினேஷனில் இருந்து காப்பாற்றப்பட்டு வந்தார்.

இந்த நிலையில் கடந்த வாரம் பிரதீப் ஆன்டனியும் கூல் சுரேஷும் மோதலில் இறங்கினர். இது சக போட்டியாளர்களுக்கு பிடிக்கவில்லை. இதற்காக கூல் சுரேஷிடம் பிரதீப் மன்னிப்பு கேட்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். ஆனால் பிரதீப்போ மன்னிப்பு எல்லாம் கேட்க மாட்டேன், கமல் சாரே சொன்னாலும் சரி பிக்பாஸே சொன்னாலும் சரி மன்னிப்பெல்லாம் கேட்க மாட்டேன் என்றார்.

Biggboss Maya, Aishu doing sketch for RJ Bravo?

இதையடுத்து கமல்ஹாசனிடம் அவரை பற்றி சக போட்டியாளர்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.மேலும் அவருக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்றும் கூறினர். அவரால் பிக்பாஸ் வீட்டில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என கூறி உரிமைக் குரல் எழுப்பினர். மேலும் பிரதீப்பிடம் கமல்ஹாசன் விளக்கம் கேட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது பிரதீப் , சார் பாத்ரூமில் சிலர் சரியாக பயன்படுத்துவதே இல்லை, நான் எத்தனை முறை பாத்ரூம் கழுவி இருக்கிறேன் தெரியுமா, பெண்கள் பயன்படுத்துகிறார்கள் என்பதால் நான் டாய்லெட்டை கழுவி வருகிறேன் என்றார். உடனே மணி எழுந்து சார் கதவை திறந்துவிட்டே யூரீன் போகிறார். இவரை முதலில் சரி செய்ய சொல்லுங்கள், பிறகு மற்றவர்களை பற்றி கூறலாம் என்றார்.

அப்போது அதுகுறித்து விளக்கமாக கேட்ட கமல்ஹாசன் ஒரு கட்டத்தில் பிரதீப் விளக்கமளிப்பதை தொடர்ந்த போது நீங்கள் எதையும் சொல்ல வேண்டாம், உட்காருங்கள் என கூறிவிட்டார். இதையடுத்து ஒவ்வொரு போட்டியாளர்களையும் தனித்தனியே அழைத்த கமல்ஹாசன் அவர்களிடம் பிரதீப்புக்கு ரெட்கார்டு கொடுக்க வேண்டுமா என கேட்டனர்.

அதற்கு அவர்கள் எல்லாம் ஆம் என்றார்கள். விசித்ரா, அர்ச்சனா, தினேஷ், கூல் சுரேஷ் ஆகியோர் அவருக்கு மேலும் ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் என்றனர். ஆனால் மெஜாரிட்டி ரெட் கார்டு என்பதால் பிரதீப்பை அழைத்த கமல்ஹாசன் அவரை வீட்டை விட்டு வெளியேற்றினார். ரெட் கார்டு கொடுத்தனுப்பிய பிரதீப்பிடம் கமல்ஹாசன் விளக்கமே கேட்கவில்லை. இதுதான் ஜனநாயகமா என்றெல்லாம் சிலர் கேள்வி எழுப்பினர்.

மேலும் பூர்ணிமாவும் பிரதீப்பும் பேசிக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதில் பூர்ணிமா லோ நெக்கில் உடை அணிந்திருந்தார். குனிந்தால் மற்றவர்கள் பார்வைக்கு அசிங்கமாக இருக்கும் என்பதால் அவரை மேற்கொண்டு குனிய வேண்டாம் என பிரதீப் கூறியதாக தெரிகிறது. அது போல் பால் கேம் விளையாடும் போது வேறு ஒரு ஆண் போட்டியாளரை பிரதீப் ஆபாசமாக கிண்டல் செய்துள்ளார்.

ஆனால் அந்த வார்த்தை பெண்களுக்கும் பொருந்தும் என்பதால் ரவீனா, அதை அப்படியே பூர்ணிமாவை சொன்னதாக ஏற்றிவிட்டார் என புதிய வீடியோ வெளியாகியுள்ளது. பிரதீப் வெளியேறியது உள்ளே விசித்ரா உள்ளிட்டோருக்கு கஷ்டமாக இருக்கிறது. மேலும் கூடி கூடி பேசி அவரை வெளியே அனுப்பிவிட்டீர்கள் என்ற குற்றச்சாட்டையும் முன் வைத்தார்.

இந்த நிலையில் மற்றொரு வீடியோவில் ஆர்ஜே பிராவோவுக்கு மாயா, ஐஷு உள்ளிட்டோர் பிளான் செய்து வருவது தெரிகிறது. பூர்ணிமா, மாயா, ஐசு ஆகியோர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது மாயாவும் ஐஷுவும் பூர்ணிமாவிடம் பிராவோ பற்றி பேசுகிறார்கள். "ஏ அவன் உன்னை எப்படி பார்க்குறான் தெரியுமா, அவன் பார்க்குறதே தப்பாகத்தான் பார்க்கிறான், எப்போதுமே மூஞ்சியை பார்த்து பேசுவதே இல்லை" பிராவோ எப்படி பார்க்கிறார் என்பதை மாயா நடித்து காட்டுகிறார். இதை கேட்டு ஷாக்காகும் பூர்ணிமா, அய்யோ எனக்கு கண்ணு தெரியலையா, அந்த மாதிரி நான் எதுவும் பார்க்கலை என்கிறார். அதற்கு மாயா ஆமா உனக்கு கண்ணு தெரியலை என்கிறார்.

இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியான நிலையில் அடுத்த ஸ்கெட்ச் பிராவோவுக்கா! இப்படியே சதி செய்தும் ஆண் மீதும் போடக் கூடாத பழியை போட்டும் வெளியேற்ற திட்டமிடுகிறார்களா என நெட்டிசன்கள் கேட்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+