பிக்பாஸ் சீசன் 7 : ஒரே நேரத்தில் இருவர் அவுட்.. யார் இவர்களா? பிக்பாஸ் வரலாற்றில் முதல்முறையாக!
சென்னை: பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறுகிறார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். இது தற்போது சீசன் 7 நடந்து வருகிறது. 100 நாட்களுக்கு மேல் இந்த வீட்டில் யார் தங்குகிறார்களோ மக்களின் வாக்குகளின் அடிப்படையில் அவர்களே வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்கள்.
இதற்காக பிக்பாஸ் வீட்டுக்குள் 18 போட்டியாளர்கள் வந்தனர். அவர்களில் வாரம் ஒருவர் மக்களின் வாக்குகளில் யாருக்கு ஓட்டு குறைவாக இருக்கிறதோ அவர்கள் வெளியேற்றப்படுவார்கள்.

அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 7 தொடங்கிய நிகழ்ச்சியில் முதல் வாரம் அனன்யா வெளியேற்றப்பட்டார். இதையடுத்து அவர் வெளியேறிய மறுநாளே பவா செல்லத்துரை தானாக விரும்பி வெளியேறியுள்ளார். இதையடுத்து மூன்றாவது வாரம் விஜய் வர்மா வெளியேற்றப்பட்டார். தற்போது 4 ஆவது வாரம் யார் வெளியேறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
15 போட்டியாளர்கள் கடுமையாக போட்டியிட்டு வருகிறார்கள். இது போதாமல் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் 5 பேர் நுழைகிறார்கள் என கமல்ஹாசன் ப்ரோமோவில் தெரிவித்திருந்தார். பிக்பாஸ் வீட்டில் வைல்டு கார்டு என்ட்ரியில் ஒருவர்தான் வருவார்கள். ஆனால் தற்போதுள்ள போட்டியாளர்கள் யாரும் சரியாக கன்டென்ட் தரவில்லை என கருதப்படுகிறது.
இதனால் ஒரு 5 பேரை வைல்ட் கார்டு என்ட்ரியாக அனுப்ப பிக்பாஸ் டீம் முடிவு செய்துள்ளது. இதுதான் பிக்பாஸ் வரலாற்றில் முதல் முறை என சொல்லப்படுகிறது. இந்த முறை குறைந்த வாக்குகளுடன் கூல் சுரேஷ், விஷ்ணு, மாயா, சரவண விக்ரம், அக்சயா ஆகியோர் உள்ளனர். இதில் டேஞ்சர் ஜோனில் வினுஷாவும் யுகேந்திரனும் உள்ளனர்.
எனவே இந்த வாரம் வினுஷா, யுகேந்திரன் ஆகிய இரு போட்டியாளர்கள் வெளியேற்றபடுவார்கள் என தெரிகிறது. அப்படி வெளியேறினால் போட்டியாளர்களின் எண்ணிக்கை 13 ஆக குறைந்துவிடும். இதையடுத்து வைல்டு கார்டு என்ட்ரி மூலம் 5 பேர் சேர்க்கப்பட்டால் மீண்டும் 18 போட்டியாளர்கள் என்ற அளவில் பிக்பாஸ் வீட்டில் காணப்படும்.

வைல்டு கார்டு என்ட்ரி மூலம் விஜயகுமாரின் கடைசி மகள் ஸ்ரீதேவி உள்ளே வருகிறார் என்கிறார்கள். அவர் உள்ளே வந்தால் ஏற்கெனவே வீட்டிற்குள் வனிதா மகள் ஜோவிகா இருக்கிறார். அவர் ஏற்கெனவே மக்களின் பாராட்டுகளையும் கண்டனங்களையும் சில விவகாரங்களில் பெற்று வருகிறார். பெரியவர்களையும் மரியாதை இல்லாமல் பேசுகிறார் என்கிறார்கள்.
இந்த நிலையில் சித்தி ஸ்ரீதேவி வந்தால் ஜோவிகா அவருடன் ஒத்து போவாரா, பிரிந்து கிடக்கும் தனது அம்மாவை அவருடைய சகோதர சகோதரிகளுடன் சேர்த்து வைப்பாரா? இல்லை சித்தியையும் கன்டென்ஸ்டென்ட்டாக பார்த்து சண்டைக் கோழியாக இருப்பாரா என்ற சந்தேகம் எழுகிறது.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications