Kpy பாலாவிற்கு பலமுறை மெசேஜ் செய்தோம்! ஆனால் கடைசிவரை வரல.. பிஜிலி ரமேஷ் மனைவி எமோஷனல்
சென்னை: சமூக வலைதளத்தின் மூலம் பிரபலம் ஆகி விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்திருந்த பிஜிலி ரமேஷ் இன்று காலை உடல் நிலை குறைபாட்டால் காலமானார். அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று சில மாதங்களாகவே அவர் வீடியோக்களில் பேசியிருந்தார். இந்த நிலையில் தங்களுக்கு உதவி செய்யுமாறு கே பி ஒய் பாலாவிடம் உதவி கேட்டு பல முயற்சி செய்தாலும் அவர் கடைசி வரை எங்களுக்கு உதவவில்லை என்று எமோஷனலாக பிஜிலி ரமேஷ் மனைவி பேட்டியில் பேசியிருக்கிறார்.
youtube சேனலில் VJ சித்துவின் பிராங்க் மூலம் பிரபலமான பிஜிலி ரமேஷ் தமிழில் காத்து வாக்குல இரண்டு காதல், கோலமாவு கோகிலா, நட்பே துணை, ஜாம்பி உட்பட பல படங்களில் நடித்திருந்தார். அதோடு குக் வித்து கோமாளி நிகழ்ச்சியின் முதல் சீசனில் கோமாளியாக அறிமுகமாகி இருந்தார். ரஜினிகாந்தின் பாபா திரைப்படம் முத்திரையை தன்னுடைய அடையாளமாக அடிக்கடி அவர் காட்டி பலருக்கும் பரீட்சையமாகவும் மாறி இருந்தார்.

ரஜினியின் தீவிரமான ரசிகரான பிஜிலி ரமேஷ் அளவுக்கு அதிகமாக குடித்து உடல்நிலை மோசமாகி இருந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய குடிப்பழக்கத்தை விட்டிருந்தார். அதற்கு காரணம் ரஜினி தான் என்றும் பேட்டிகளில் பேசி இருந்தார். அதாவது ஜெயிலர் திரைப்பட ஆடியோ ரிலீஸ் போது ரஜினிகாந்த் குடியால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசியது தன்னை ரொம்பவும் பாதித்ததாகவும் அதற்கு பிறகு தான் குடிப்பதை விட்டு விட்டதாகவும் கூறியிருந்தார்.
ஆனால் ஆரம்பத்தில் அவர் குடித்தது அவருடைய கல்லீரல் பகுதியை அதிகமாக பாதிப்பு அடைய செய்து விட்டதாக சில மாதங்களுக்கு முன்பு ஒரு வீடியோவில் பேசி இருந்தார். கால்கள் மற்றும் வயிறு பகுதி பெரிய அளவில் வீங்கி சாப்பிட முடியாமல் சில மாதங்கள் மருத்துவமனையிலேயே அட்மிட் ஆகி இருந்த பிஜிலி ரமேஷை அவருடைய மனைவிதான் கவனித்து வந்தார். இந்த நிலையில் தங்களுக்கு உதவி செய்யுமாறு கேபிஒய் பாலா மற்றும் லாரன்ஸ் மாஸ்டரிடம் பலமுறை கேட்டதாகவும் ஆனால் தங்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை என்று பிஜிலி ரமேஷ் மனைவி கண்ணீரோடு பேசியிருக்கிறார்.

அதில் கேபிஒய் பாலா, லாரன்ஸ் மாஸ்டர் போன்றோர் பலருக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்து அவர்களிடம் எங்களுக்கு ஏதாவது உதவி கிடைக்குமா? அல்லது இவருக்கு ஏதாவது ஆபரேஷன் செய்வதற்கு உதவி செய்வார்களா என்பதை தெரிந்து கொள்வதற்காக தான் நாங்கள் முயற்சி செய்தோம். ஆனால் அது நடக்கவில்லை. இன்னும் இரண்டு நாளில் பாலாவை நேரில் சந்திக்கலாம் என்று நானும் என்னுடைய கணவரும் பேசிக் கொண்டிருந்தோம்.
அதற்குள் இன்று காலையில் அவருடைய உயிர் பிரிந்து விட்டது. சில மாதங்களாகவே நாங்கள் கேபிஒய் பாலாவிடம் பேச வேண்டும் என்று முயற்சி செய்து பல மெசேஜ் செய்தோம் ஆனால் அவர் அதற்கு பதிலே சொல்லவில்லை. எங்கள் மீது அவர் கோபமாக கூட இருக்கலாம். இவர் குடித்து தானே இவருடைய உடல் இப்படி ஆகிவிட்டது என்று அவர் நினைத்து விட்டாரோ என்னவோ தெரியவில்லை.

இல்லையென்றால் அவர் ஏழைகளுக்கும், விவசாயிகளுக்கும் உதவுவதில் பிஸியாக இருக்கலாம் அதனால் எங்களுக்கு ரிப்ளை செய்யவில்லையோ என்னவோ புரியவில்லை. நமக்கு உதவவில்லை என்று வருத்தம் பட முடியாது. ஆனால் மெசேஜ் செய்ததற்கு ஒரு பதிலாவது சொல்லி இருக்கலாம் என்பது கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது என்று கண்ணீரோடு அந்த பேட்டியில் பிஜிலி ரமேஷின் மனைவி பேசியிருக்கிறார்.
-
முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படம் எப்போது ரிலீஸ்? ஜெயிப்பாரா இந்த ஜூனியர்? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications