பிந்துகோஷ் கடைசி நொடிகள்.. பங்களா, 10 நாய், கார்.. அப்படி வாழ்ந்தாங்களே பிந்து கோஷ்.. பெஸ்ட் டான்சர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உடல்நல பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த பிந்து கோஷ், சிகிச்சை பலனின்றி காலமானார்.. இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடல் சென்னை அரசு பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், நாளை இறுதிசடங்குகள் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. பிந்துகோஷ் வயது 76 ஆகும்.

அன்றைய காலத்தில், அங்கமுத்து என்ற நடிகை இருந்தார். பராசக்தி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர்.. தன்னுடைய குண்டு உடலை வைத்து, நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்தவர் அங்கமுத்து.

Television bindhu Ghosh bindu gosh

அவருக்கு பிறகு, அதே குண்டு உடல்வாகை பயன்படுத்தி காமெடிகளில் பிரபலமானவர்தான் பிந்துகோஷ்.. 80களில் வெளிவந்த பெரும்பாலான படங்களில் பிந்துகோஷ் நடித்திருப்பார்.. ஆனால், பிந்துகோஷ் மிகச்சிறந்த டான்சர் என்பது பலரும் அறியாத தகவல்.

பிந்து கோஷ் காமெடி

பிந்து கோஷின் இயற்பெயர் விமலா.. " களத்தூர் கண்ணம்மா " என்பது அவரது முதல் படம். அந்தப் படத்தில், கமல்ஹாசனுடன் சேர்ந்து ஒரு குழு நடனம் ஆடியிருப்பார்.. அப்போது முதல் தங்கப்பன் மாஸ்டரின் அனைத்து படங்களிலும் அவர் குழு நடனத்திலும் பிந்துகோஷ் இடம்பெற்றார்.. மிகச்சிறந்த டான்சராகவும் பாராட்டப்பெற்றார்.

ஆனால், நாளடைவில் இவரது உடல் எடை கூடியதும், அதையும் பிளஸ் பாயிண்ட்டாக எடுத்து கொண்டு, காமெடி வேடங்களில் கலக்கினார் கோழி கூவுது, கௌரி கல்யாணம், சூரக்கோட்டை சிங்கக்குட்டி, கொம்பேறி மூக்கன், விடுதலை, மங்கம்மாள் சபதம் என ஏகப்பட்ட படங்களில் பிந்துகோஷ் நடித்திருப்பார்.

வயது மூப்பு - பலனளிக்காத சிகிச்சை

கிட்டத்தட்ட நூறு படங்களுக்கு மேல் நடித்திருக்கும் இவருக்கு தற்போது 76 வயதாகிறது. வயது மூப்பின் காரணமாக அவருக்கு உடலில் பல பிரச்சனைகள் இருந்து வந்துள்ளது. இதனால் மருத்துவ உதவி கிடைக்காமல், வறுமையில் அவதிப்பட்டு வந்தார். நடிகர் விஷால் பிந்து கோஷின் நிலை அறிந்து மருத்துவ உதவிக்கு பணம் கொடுத்திருக்கிறார். எனினும் சிகிச்சைக்கு பணம் போதவில்லை.

சமீபத்தில் கலாட்டா youtube சேனலுக்கு பிந்துகோஷ் பேட்டி தந்தபிறகுதான், வெளிஉலகுக்கு பிந்துகோஷின் உடல்நிலை பற்றி தெரியவந்தது.. "தூங்காதே தம்பி தூங்காதே பட சூட்டிங்கின்போது, வயிறு பெரிதாக உள்ளதால், பிளாஸ்டிக் சர்ஜரி செய்து, 13 கிலோ சதையை எடுத்தேன். அந்த சர்ஜரிதான் நான் செய்த தவறு. இதற்கு பிறகு BP, சுகர் முதல் ஹார்ட் ஆபரேஷன் வரை செய்தேன்.. ஆனால், இதற்கு பிறகு சிகிச்சை செய்ய வசதியில்லை..

கமல்ஹாசன் பதில் சொல்லல

ஒரு அறக்கட்டளை தான் மருத்துவ உதவி செய்கிறது. கமல்ஹாசனிடம் உதவி கேட்டு போன் செய்தும் பதில் சொல்லல. பிரபு, சத்யராஜ் என்று பலருக்கும் போன் செய்தேன்.. யாருமே எனக்கு உதவி செய்யல என்று கதறி அழுதிருந்தார். யாரேனும் உதவி செய்யுங்கள் என்று கையெடுத்து கும்பிட்டு கண்ணீர் விட்டு உதவி கேட்டிருந்தார் பிந்துகோஷ்..

இதற்கு பிறகுதான், நடிகை ஷகிலா மூலம் கேபிஒய் பாலா பிந்துகோஷ் வீட்டிற்கு சென்று அவரை நேரில் சந்தித்து 80,000 பணம் தந்து உதவினார்.. அப்போது பாலாவை பார்த்ததும் கையெடுத்து கும்பிட்டு நன்றி சொல்லியிருந்தார் பிந்துகோஷ்.. தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் எனக்கு ஏதாவது ஒரு உதவி செய்ய வேண்டும் என்றும் பிந்துகோஷ் கேட்டிருந்தார்.

கண்ணீர் அஞ்சலி

நடிப்பின் உச்சத்தில் இருந்தபோது, நன்றாகவே வாழ்ந்துள்ளார் பிந்துகோஷ்.. சென்னை தசரதபுரத்தில் பங்களா வீட்டை விலைக்கு வாங்கியிருக்கிறார் .. 4 வேலையாட்கள் பிந்துகோஷூக்கு இருந்தார்களாம். 10 நாய்களை வளர்த்திருக்கிறார்.. இறுதியில் சிகிச்சைக்காக வீடு, பணம், அனைத்தும் கரைந்து, வீட்டு வாடகைகூட கொடுக்க முடியாத நிலைமையை எதிர்கொண்டார் பிந்துகோஷ்.

எம்ஜிஆர், ஜெயலலிதா, கமல்ஹாசன் உள்ளிட்ட ஏராளமானவர்களுடன் நடித்தவர், அத்துடன் அவர்களுடன் பல பாடல்களில் டான்ஸ் ஆடியவர்.. பிந்துகோஷ் இறந்துவிட்டதாக பல முறை வதந்திகள் வந்திருக்கின்றன.. ஆனால், சிறிது நேரத்திலேயே அதற்கு மறுப்பு செய்திகள் வெளியாகும்.. ஆனால், இப்போது நிஜமாகவே பிரிந்து சென்றுவிட்டார். அவரது கடைசி நொடிகளும், கண்ணீரும் வலியுமாய் கரைந்துவிட்டது.

தற்போது பிந்துகோஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.. இந்த சம்பவம் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடல் சென்னை அரசு பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், நாளை இறுதி சடங்குகள் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+