Bison box office: மாரி செல்வராஜின் 'பைசன்', வேட்டையில் 'தளராத' துருவ்! ரூ. 50 கோடி வசூலை கடந்து சாதனை!
சென்னை: இந்த வருட தீபாவளி சினிமா உலகில் பலரையும் வியந்து பார்க்க வைத்தது. இந்த வருடத்தில் பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் வெளியாகாமல் எல்லாமே இளம் கதாநாயகர்கள் நடித்த படம் வெளியானது. அதில் இந்த தீபாவளி ரிலீஸ்ல யாரு ஜெயிச்சான்னு பார்த்தா, துருவ் விக்ரமோட 'பைசன் காளமாடன்' தான், மத்தப் படங்களுக்குப் போட்டியா இல்லாம, ஒரு தனி ஆட்டத்தையே ஆடியிருக்குன்னு சொல்லலாம்! அக்டோபர் 17ஆம் தேதி வெளியான இந்தப் படத்துக்கு, பிரதீப் ரங்கநாதனோட 'டியூட்' மற்றும் ஹரிஷ் கல்யாணோட 'டீசல்' படங்கள் தான் பெரிய போட்டியா இருந்தன. ஆனா, பைசன் கொடுத்த அனலைக் கட்டுப்படுத்த அவங்களால முடியலைங்க!

பிரம்மாண்ட வெற்றி vs எதார்த்த வெற்றி
பிரதீப் ரங்கநாதனோட 'டியூட்' படம் உலகளவில் 100 கோடி வசூல் ஈட்டியிருந்தாலும், தமிழ்நாட்டுல நாளுக்கு நாள் வசூல் குறைய ஆரம்பிச்சது. ஆனா, மாரி செல்வராஜ் இயக்கத்துல துருவ் விக்ரம் நடிச்ச 'பைசன் காளமாடன்' திரைப்படம் நாளுக்கு நாள் வசூல் வேட்டையாட ஆரம்பிச்சு, இப்போ 50 கோடி வசூலைத் தாண்டினதா படக்குழுவே அதிகாரப்பூர்வமா அறிவிச்சிருக்காங்க!
துருவ் விக்ரமின் முதல் அரைசதம்
துருவ் விக்ரமிற்கு முதல் 50 கோடி பாக்ஸ் ஆபிஸ் படம்னு சொல்றாங்க. இந்த வருஷம் அப்பா சியான் விக்ரம் நடிச்ச 'வீர தீர சூரன்' படம் உலகளவில் 63 கோடி ரூபாய் தான் வசூல் செஞ்சுச்சு. ஆனா, மகன் துருவ் விக்ரம், குறைஞ்ச பட்ஜெட்ல, பெரிய பட்ஜெட் படங்களுக்குப் போட்டியாக 50 கோடியைத் தாண்டி ஒரு மிகப்பெரிய வசூல் சாதனையை செஞ்சுட்டார்னு சினிமா வட்டாரங்கள் பேசிக்கிறாங்க. சீக்கிரமே அப்பா விக்ரமோட லைஃப் டைம் வசூலையும், துருவோட 'பைசன்' முந்துவது உறுதியாயிடுச்சுன்னு சொல்றாங்க.
கதை
'பைசன்' ஏன் இப்படி ஜெயிச்சது? இதுதான் அந்தப் படத்தின் வெற்றிக்கான மந்திரம். இந்தப் படம் அர்ஜுனா விருது வென்ற கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு, கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவானது. இதில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, அமீர், லால் போன்ற பலரும் நடிச்சிருந்தாங்க.
விமர்சனம்
படம் பார்த்த பலரும் மாரி செல்வராஜ் அழுத்தமானச் சமூகக் கருத்துகளைத் துணிச்சலாகப் பேசிய விதத்தையும், கபடி வீரர்களின் வாழ்க்கைப் போராட்டத்தையும் வெகுவாப் பாராட்டினாங்க. 'பைசன்' படத்துக்கு 10 நாட்களில் உலகளவில் 55 கோடி ரூபாய் வசூலானதா மாரி செல்வராஜ் தன்னோட ட்விட்டர் பக்கத்துல அதிகாரப்பூர்வமா அறிவிச்சிருக்காரு.
"நல்ல படம் பண்ணலைன்னா, என் படத்தைப் புறக்கணிச்சுட்டாங்க, மக்கள் படம் பார்க்க விரும்பலைன்னு பேசுறதெல்லாம் வெறும் சமாளிஃபிகேஷன் தான். நல்ல படத்தைத் தமிழ்நாட்டு மக்கள் கண்டிப்பாகக் கொண்டாடுவார்கள்" என்பதற்குத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கி வரும் படங்கள் பாக்ஸ் ஆபிஸ் வெற்றி பெறுவதே சான்றுன்னு சொல்றாங்க. இப்போ, அடுத்ததா தனுஷ் நடிக்கும் அவரோட படம், இதைவிடப் பெரிய வசூல் சாதனை படைக்கும்னு எதிர்பார்க்கப்படுது!
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications