Blast Movie Review: "அர்ஜுனுக்கு கம்பேக்".. பிளாஸ்ட் கதை இதுதான்! இந்த இடம் சூப்பர்.. ப்ளூசட்டை மாறனே பாராட்டிட்டாரே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில் வெளியாகியுள்ள 'பிளாஸ்ட்' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வெளியான முதல் நாளிலிருந்தே படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வரும் நிலையில், பொதுவாக எந்த படத்தையும் கடுமையாக விமர்சிக்கும் ப்ளூ சட்டை மாறன் கூட இந்த படத்தை பாராட்டியிருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுபாஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் அர்ஜுனுடன் அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆக்ஷன், சஸ்பென்ஸ் மற்றும் குடும்ப உணர்வுகளை கலந்த ஒரு கமர்ஷியல் த்ரில்லராக உருவாகியுள்ள இந்த படம் தற்போது பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல தொடக்கத்தை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Blast Movie Arjun Action King Arjun Blue Sattai Maran Movie Review Abhirami

முதல் நாளிலேயே நல்ல ஓப்பனிங்

பிளாஸ்ட் திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே பல தியேட்டர்களில் நல்ல கூட்டத்தை ஈர்த்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக குடும்ப ரசிகர்கள் மற்றும் ஆக்ஷன் ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.

வார இறுதி நாட்கள் தொடங்கியுள்ளதால் சனி, ஞாயிறு காட்சிகளில் வசூல் மேலும் அதிகரிக்கும் என திரையரங்கு வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன. சமூக வலைதளங்களிலும் படத்திற்கு ஆதரவான பதிவுகள் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.

ப்ளூ சட்டை மாறன் என்ன சொன்னார்?

படம் குறித்து தனது விமர்சன வீடியோவில் பேசிய ப்ளூ சட்டை மாறன், "இந்தப் படத்தின் மீது பெரிய நம்பிக்கை இல்லாமல்தான் போய் அமர்ந்தோம். ஏனெனில் அர்ஜுன் ஒரு நல்ல படம் நடித்து பல வருடங்கள் ஆகிவிட்டன" என்று ஆரம்பத்திலேயே கூறியுள்ளார்.

மேலும் அவர் பேசும்போது, "படம் ஆரம்பித்து 20 நிமிடங்களுக்குள்ளாகவே இந்தக் கதை எதை நோக்கி போகிறது என்பதை ரசிகர்களுக்கு நன்றாக புரிய வைத்துவிடுகிறார்கள். அதற்கு பிறகு வரும் வில்லன் கதைதான் பழையதாக இருக்கிறது. இதில் ஒரு வில்லன் மட்டும் இல்லை. ஐந்து, ஆறு வில்லன்களுக்கு கதை சொல்ல வேண்டியதாகிவிட்டது. அதில் ஒரு அரை மணி நேரம் வழக்கம்போல் சென்றுவிடுகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அதன்பிறகு படம் வேறு லெவலுக்கு சென்று விடுகிறது எனவும் அவர் பாராட்டியுள்ளார். "அதற்குப் பிறகுதான் படம் தீ பிடிக்கிறது" ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில், "ஹீரோ குடும்பமும், வில்லன் குரூப்பும் சண்டை போட ஆரம்பித்த பிறகு படம் தீ பிடிக்க ஆரம்பித்துவிட்டது. எந்த இடத்திலும் சோர்வாக இல்லை. அடுத்து அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற ஆவலை தூண்டுகிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

Blast Movie Arjun Action King Arjun Blue Sattai Maran Movie Review Abhirami

குறிப்பாக கதையின் மையமாக இருக்கும் மூன்று வெவ்வேறு கோணங்களை அவர் பாராட்டியுள்ளார். "ஒரு கராத்தே மாஸ்டரின் குடும்பம், ஒரு கார்ப்பரேட் வில்லன், ஒரு போலீஸ் அதிகாரி. இந்த மூன்று பேரின் கதையும் ஒரு புள்ளியில் வந்து சேருகிறது. ஆனால் அவர்களுக்கே தங்களது உண்மையான எதிரி யார் என்பது தெரியாது. அதை ரொம்பவே பிரமாதமாக செய்திருந்தார்கள்"
என்று கூறியுள்ளார்.

அபிராமி கேரக்டர் செம

படத்தில் வந்த பல சிறிய விஷயங்களையும் ப்ளூ சட்டை மாறன் பாராட்டியுள்ளார். "அபிராமி யார் என்ற விஷயம், சண்டைக்கு நடுவே மூன்று பேரை கொலை செய்துவிட்டோம், இவர்களை என்ன செய்வது, ஒளிந்திருக்கும் இரண்டு பேரை என்ன செய்வது போன்ற வசனங்கள் எல்லாம் சுவாரஸ்யமாக இருந்தன. படம் முழுவதும் சின்ன சின்ன விஷயங்கள் நன்றாக இருந்தன"
என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல் நடிகர் தேர்வும் சிறப்பாக இருந்ததாக அவர் கூறியுள்ளார். "அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்டவர்கள் இந்த கதாபாத்திரங்களுக்கு சரியாக பொருந்தியிருந்தார்கள்"
என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

லாஜிக் ஓட்டைகள்

அதே நேரத்தில் படத்தில் சில குறைகளும் இருப்பதாக ப்ளூ சட்டை மாறன் கூறியுள்ளார். "20 முதல் 30 போலீஸ்காரர்கள் வரை இறந்திருப்பார்கள். ஆனால் அந்த வழக்கை காவல்துறை பிக்பாக்கெட் கேஸ் போல டீல் செய்துகொண்டிருக்கும். இந்த மாதிரியான லாஜிக் ஓட்டைகள் படத்தில் இருக்கின்றன" என்று தெரிவித்துள்ளார்.

Blast Movie Arjun Action King Arjun Blue Sattai Maran Movie Review Abhirami

குடும்பத்தோடு பார்க்கலாம்

படத்தின் மிகப்பெரிய பலம் பற்றி பேசும்போது, "இந்தப் படத்தில் மொக்கை காதல் காட்சிகளோ, தேவையில்லாத காமெடி டிராக்குகளோ இல்லை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்தோடு பார்க்கலாம்" என்று கூறியுள்ளார். இறுதியாக, "திரிஷ்யம் 1 திரைப்படம் ஒரு ஆக்ஷன் படமாக இருந்தால் எப்படி இருக்கும், அப்படித்தான் பிளாஸ்ட் இருக்கும்" என்ற ஒப்பீட்டையும் அவர் கொடுத்துள்ளார்.

பொதுவாக எந்தப் படத்தையும் கடுமையாக விமர்சிக்கும் ப்ளூ சட்டை மாறன் இவ்வளவு பாசிட்டிவாக பேசியிருப்பது ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. அதே நேரத்தில் படம் வெளியான முதல் இரண்டு நாட்களில் கிடைத்துள்ள வரவேற்பை பார்க்கும்போது, பிளாஸ்ட் திரைப்படம் அர்ஜுனுக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு வெற்றிப் படமாக அமைய வாய்ப்பு இருப்பதாக திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன.

அர்ஜுனும் தனது அனுபவத்தை முழுமையாக பயன்படுத்தி கதாபாத்திரத்திற்கு தேவையான கம்பீரத்தை கொடுத்திருக்கிறார். ஆக்ஷன் கிங் அர்ஜுனுக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற படமாக 'பிளாஸ்ட்' மாறுமா என்பதை வரும் சில நாட்களில் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் உறுதி செய்யும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+