இசை வெளியிட்டு விழாவில் இப்படி உருட்டுறீங்க? சாப்பாட்டை வைத்து அனுதாபமா? தனுஷ் பற்றி ப்ளூசட்டை மாறன் போஸ்ட்
சென்னை: நடிகர் தனுஷ் தானே இயக்கி நடித்துள்ள இட்லி கடை திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில், தனுஷின் மேலாளர் ஸ்ரேயாஸ் பேசிய சில கருத்துகள், திரைத்துறையில் புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளன. இந்த விவகாரம் குறித்து சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் போட்ட போஸ்ட் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இயக்குநராக தனுஷின் புதிய பயணம்
நடிகர், பாடகர், பாடலாசிரியர் எனப் பன்முகத் திறமைகளைக் கொண்ட தனுஷ், பவர் பாண்டி திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படம் பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் பிறகு, அவர் இயக்கிய நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் சுமாரான வரவேற்பைப் பெற்றது.
தற்போது, அவர் இட்லி கடை என்ற திரைப்படத்தை இயக்கி, கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் நித்யா மேனன், அருண் விஜய், ராஜ்கிரண் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். குபேரா, ராயன், கேப்டன் மில்லர் போன்ற அவரது சமீபத்திய படங்கள் பெரிய வெற்றியைப் பெறாத நிலையில், இட்லி கடை அவருக்கு ஒரு வெற்றியைப் பெற்றுத்தருமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.
ஸ்ரேயாஸின் பரபரப்பான பேச்சு
இட்லி கடை திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தனுஷின் மேலாளர் ஸ்ரேயாஸ் பேசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அவர், "பிரபலமாவதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று உழைத்து, ரத்தம் சிந்தி முன்னேறுவது. இரண்டாவது, உச்சத்தில் இருப்பவரை அடிப்பது. தனுஷால் வாழ்ந்தவர்கள், வளர்ந்த பிறகு அவரையே அடிக்கிறார்கள். தைரியம் இருந்தால் நேருக்கு நேர் வந்து அடிக்க வேண்டும். அவர் நல்லவனாக இருக்க வேண்டும்; ரொம்ப நல்லவராக இருக்கக்கூடாது" என்றார்.
இந்தக் கருத்துக்கள் மறைமுகமாக வேறு சில நடிகர்களைச் சாடுவதாகப் பார்க்கப்படுகிறது. இந்த சர்ச்சை பேச்சால் சோசியல் மீடியாவில் அதிகமான விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
புளூ சட்டை மாறனின் பதிலடி
சினிமா விமர்சகர் புளூ சட்டை மாறன், பொதுவாகப் பிரபலங்களின் பேட்டிகள் மற்றும் திரைப்படங்களை நக்கலடித்து விமர்சிப்பவர். இவர், இந்தச் சம்பவத்தையும் விட்டு வைக்கவில்லை. தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், "வேற எந்த மாநில சினிமா pre release event-லயும் நடக்காத காமெடிகள் கோலிவுட்டில் தான் நடக்கும். இவங்களுக்கு எதிரா யாரோ சதி செய்றாங்கன்னு சொல்லுவாங்க. ஆனா யாருன்னு சொல்ல மாட்டாங்க. அன்பை பரப்புங்க, ignore negativity, சாப்பாட்டுக்குக் கஷ்டப்பட்டேன்னு தத்துவமும், அனுதாபமும் கனமழையா கொட்டும். படம் சம்பந்தமா பேச பல விஷயங்கள் இருக்கும். அதை விட.. இதைத்தான் ஹெவியா உருட்டுவாங்க. Kollywood pre release events - Cringe Ultra Pro MAXXX" என்று பதிவிட்டு, இந்த விவகாரத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மாறன், இதற்கு முன்னரும் தனுஷின் சில படங்களின் தோல்வி குறித்து விமர்சித்து இருக்கிறார். இந்தப் பதிவின் மூலம், அவர் மறைமுகமாகத் தமிழ் திரையுலகில் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதைக் கிண்டல் செய்துள்ளார். இட்லி கடை திரைப்படம் தனுஷுக்கு வெற்றியைப் பெற்றுத் தருமா அல்லது இந்தச் சர்ச்சைகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பைக் குறைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்?












Click it and Unblock the Notifications