"தன் கையால் சாப்பிட்டார்... இப்போது தானே வண்டி ஓட்டினார்!" CM விஜய்யை கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்
சென்னை: தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய், ஆட்சிப் பொறுப்புகளை தீவிரமாக கவனித்து வருகிறார். தினமும் புதிய திட்டங்கள், திடீர் ஆய்வுகள், அதிகாரிகளுடன் ஆலோசனைகள் என பிஸியாக இயங்கிவரும் அவரின் ஒவ்வொரு நடவடிக்கையும் அரசியல் வட்டாரங்களிலும், சமூக வலைதளங்களிலும் பெரிய விவாதமாக மாறி வருகிறது.

விஜய் செய்த செயல்
அந்த வகையில், இன்று தமிழ்நாடு அரசின் மருத்துவத் துறைக்காக புதிதாக கொண்டுவரப்பட்ட 40 வாகனங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் விஜய் வழங்கினார். நிகழ்ச்சியில் வாகனங்களின் தரம் எப்படி இருக்கிறது என்பதை நேரடியாக அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில், அவர் தானே ஒரு வாகனத்தை ஓட்டி பார்த்ததார்.
இதன் வீடியோக்கள் வெளியாகியதும் தவெக ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் அதை வைரலாக்கி, "மக்களுக்காக நேரடியாக களத்தில் இறங்கும் முதல்வர்" என பாராட்டத் தொடங்கினர். ஆனால், இதே சம்பவம் எதிர்ப்பாளர்களுக்கு வேறு மாதிரியான ட்ரோல் கன்டென்டாக மாறிவிட்டது. குறிப்பாக பிரபல திரை விமர்சகரான ப்ளூ சட்டை மாறன், இதை கிண்டலாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்து கவனம் ஈர்த்துள்ளார்.
ப்ளூ சட்டை மாறன் பதிவு
அவரது பதிவில், "தன் கையால் தானே மதிய உணவு சாப்பிட்டதை தொடர்ந்து... தன் கையால் தானே வண்டி ஓட்டினார்... வைரலாகும் வீடியோ" என்று நக்கலாக குறிப்பிட்டுள்ளார். இந்த ஒரு வரி பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ஏற்கனவே முதலமைச்சர் விஜய்யின் சில நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சிகள், "இவை அனைத்தும் வெறும் இமேஜ் பில்டப் அரசியல்" என்று விமர்சித்து வரும் நிலையில், ப்ளூ சட்டை மாறனின் இந்த பதிவு அந்த விவாதத்தை மேலும் சூடுபிடிக்க வைத்துள்ளது.
ரசிகர்கள் கருத்து
மறுபுறம் விஜய் ஆதரவாளர்கள், "ஒரு முதல்வர் நேரடியாக சென்று பார்ப்பதும் தவறா?", "எதையும் விமர்சிக்கத்தான் பார்க்கிறார்கள்" என்று பதிலடி கொடுத்து வருகின்றனர். சிலர் ப்ளூ சட்டை மாறனின் பதிவை ரசித்து பகிர, இன்னும் சிலர் இது தேவையில்லாத கிண்டல் என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சினிமாவில் விமர்சனங்களால் சர்ச்சையை கிளப்பிய ப்ளூ சட்டை மாறன், இப்போது அரசியல் விஷயத்திலும் ஒரே ஒரு பதிவால் இணையத்தை பரபரப்பாக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த பதிவு சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.
-
"தவெக ஆட்சி 6 மாதம் இல்லை.. 3 மாதமாவது தாங்குமா?" - முன்னாள் முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் -
உங்கள் மண்டையில் ஏதாவது இருக்குதா! விஜய்யின் பெரம்பூர் தொகுதியில் வெடித்து பேசிய மேயர் பிரியா! -
இரக்கமே காட்டாதீங்க.. கேஸை போடுங்க.. திமுக மாஜி அமைச்சர்களுக்கு விஜய் செக்.. வரிசையாக ஆக்சன் -
திருச்சி கிழக்கு விஜய் வென்ற தொகுதி.. அங்கு காங்கிரஸ் போட்டியிடாது.. ராஜேஷ் குமார் திட்டவட்டம்! -
விஜய் தவெகவின் ‘வெற்றி டிவி’? டெல்லியில் டிரேடுமார்க் விண்ணப்பம்! களமிறக்கப்படும் பிரம்மாண்ட திட்டம் -
ஆதவ் அர்ஜுனா சொன்னது நடக்குதா? ஈபிஎஸ் தலையில் இடிப்போல் இறங்கிய செய்தி.. அதிமுக எதிர்காலம்? -
ஸ்கீமுக்கு 10 செகண்டா? தலைமை செயலகத்தில் 75 நிமிட சர்ப்ரைஸ்! 436 திட்டங்களை விஜய் நகர்த்தியது எப்படி? -
திருச்சி கிழக்கில் களமிறங்குகிறாரா லாரன்ஸ் மாஸ்டர்? ஜூன் 11-ல் முக்கிய அறிவிப்பு! அவரே வெளியிட்ட பதிவு -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள் -
4 அதிமுக விக்கெட் காலி.. இபிஎஸ்ஸுக்கு தலைவலி.. தவெகவில் இணைந்த மாஜி அமைச்சர்கள்.. விஜய் தந்த செக்மேட் -
பாஜக லேபிளை உடைத்த அண்ணாமலை.. ஆட்டத்தையும் கலைத்த "சாமானியன்" அரசியல்.. இது பிளான் B-யா? -
விஜய் வென்றதும் மக்கள் மீது திடீர் பாசமா? லதா ரஜினிகாந்தின் புதிய இயக்கத்தை சீண்டிய ப்ளூ சட்டை மாறன்












Click it and Unblock the Notifications