ப்ளூ சட்டை மாறனின் “கிடா வெட்டு”.. பயங்கரமாக அந்த பிரபலத்தை சீண்டல்..என்ன வார்த்தை சொல்லி இருக்காரு?
சென்னை: ஒவ்வொரு புது பட வெளியீட்டின் போதும் அந்த படம் குறித்த தனது விமர்சனத்தின் மூலம் மற்றவர்களின் விமர்சனத்திற்கு உள்ளாவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் இந்த முறை ஜெயிலர் படத்தையும் விட்டு வைக்கவில்லை.
தனி ஆளாக ரஜினி ரசிகர்கள் மட்டும் இன்றி ஜெயிலர் படத்திற்கு ஆதரவாக தன்னை தாக்கி பேசி வரும் சினிமா பிரபலங்களையும் ட்விட்டரில் போட்டு தாக்கி வருகிறார்.

தற்பொழுது இன்றைய கிடாய் வெட்டு என்று தலைப்பு வைத்து சில பிரபலங்களுக்கு சுடச்சுட சில பதிலடி பதிவை பதிவிட்டுள்ளார். ஆதாரங்களோடு சில கேள்விகளை எழுப்பி வரும் ப்ளூ சட்டை மாறனுக்கு இணையத்தில் பலர் ஆதரவு கொடுத்தும் வருகின்றனர்.
பிரபல சினிமா விநியோகஸ்தரும் தியேட்டர் உரிமையாளருமான திருப்பூர் சுப்ரமணியம் மற்றும் சீனியர் சினிமா பத்திரிக்கையாளர் செய்யாறு பாலுவையும் மறைமுகமாக சாடி சில கேள்விகளை எழுப்பி உள்ள ப்ளூ சட்டை மாறன் அவரது இன்றைய பதிவில்;
இன்றைய கெடா வெட்டு: " தமிழ் இயக்குனரின் படத்தை மிக கீழ்த்தரமாக விமர்சித்த விமர்சகர். கண்டனம் தெரிவிக்காமல் வாயில் கொழுக்கட்டையை வைத்திருந்த பருப்பூர் சுப்ரமணியம், அடையாறு பாலு மற்றும் சொம்பு தூக்கிகள்".
"கபாலியின் கொத்தடிமையாக இருந்துகொண்டு பல்வேறு யூ ட்யூப் பேட்டிகளில் அவருக்கு சொம்படித்து.. மற்ற ஹீரோக்களை மட்டம் தட்டி வரும் அடையாறு பாலு எனும் சீனியர் சினிமா ரிப்போர்ட்டர்.
இன்றைய கெடா வெட்டு:
— Blue Sattai Maran (@tamiltalkies) August 14, 2023
1. தமிழ் இயக்குனரின் படத்தை மிக கீழ்த்தரமாக விமர்சித்த விமர்சகர். கண்டனம் தெரிவிக்காமல் வாயில் கொழுக்கட்டையை வைத்திருந்த பருப்பூர் சுப்ரமணியம், அடையாறு பாலு மற்றும் சொம்பு தூக்கிகள்.
2. கபாலியின் கொத்தடிமையாக இருந்துகொண்டு பல்வேறு யூ ட்யூப் பேட்டிகளில்… pic.twitter.com/8i5VFtbkxt
குறிப்பு: இப்போது மட்டுமல்ல. இனி வரும் காலத்திலும் கபாலி மற்றும் அவரது கொத்தடிமைகளின் சாயம் எந்த சமரசமும் இன்றி.. இரவு பகலாக ஓயாமல் வெளுக்கப்படும். அக்குறிப்பிட்ட ட்வீட்களை படிக்க விரும்பாத பொதுவான சினிமா ரசிகர்கள் தயவு செய்து ஸ்கிப் செய்து விடவும். தவறாக எண்ண வேண்டாம்.
இதுபோக இதர செய்திகள், சுய கருத்துகள் மற்றும் மீம்களை உள்ளடக்கிய ட்வீட்களும் தொடரும். புரிதலுக்கு நன்றி.
ஆரம்பிக்கலாங்களா?": சமீப காலமாக தன்னை விமர்சிக்கும் பிரபலங்களை விமர்சனத்தோடு விட்டு விடாமல் கொஞ்ச நாட்கள் வச்சு செய்வதை வழக்கமாக கொண்டிருக்கும் ப்ளூ சட்டை மாறனிடம் இப்பொழுது சிக்கி இருக்கும் இந்த பிரபலங்கள் பற்றி பல தகவல்கள் வெளிவர வாய்ப்பு இருப்பதாக இணையவாசிகள் கமெண்ட்டுகளில் பதிவிட்டு வருவதோடு ப்ளூ சட்டை மாறனை ஊக்குவித்தும் வருகின்றனர்.
-
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications