Dharmendra: நடிகர் தர்மேந்திராவின் உடல்நிலை இப்போது எப்படி இருக்கு? வெளியான தகவல்!
சென்னை: பாலிவுட் திரையுலகத்துல 90 வயசையும் தாண்டி கெத்து காட்டிட்டு இருக்கிற தர்மேந்திரா பற்றி பரவின வதந்தி குடும்பத்தையேக் கொந்தளிக்க வச்சிடுச்சு! உடல்நலக் குறைவால ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆன அவர், இப்போ சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பி இருக்கார். ஆனா, இதுக்கு நடுவுல சிலர், "தர்மேந்திரா இறந்துட்டாரு"ன்னு பொய் செய்தியைப் பரப்பி விட்டுட்டாங்க.

முதிய வயதில் வந்த உடல்நல குறைவு
ஹிந்தி சினிமாவின் மூத்த நடிகர் இவர். இவருக்கு இப்போ 90 வயசு ஆகுது. ஒரு காலத்துல சினிமா, அரசியல்னு பம்பரம் மாதிரி சுழன்றவர் இப்போ ஓய்வுல இருக்கார். இவருக்கு கடந்த சில காலமாவே உடம்பு சரியில்லாம இருந்திருக்கு. குடும்பத்தார் ரொம்ப கண்ணும் கருத்துமாப் பார்த்திருக்காங்க. ஆனால், நேற்று உடல்நிலை ரொம்ப மோசமானதால, உடனடியா ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணிருக்காங்க.
ஹேமமாலினி கோபம்
தர்மேந்திரா சிகிச்சைக்காக ஹாஸ்பிட்டல்ல சேர்ந்ததும், ஒரு சில விஷமிகள் கிளப்பிவிட்ட வதந்திதான், "தர்மேந்திரா உயிரிழந்துவிட்டார்!"ன்னு!. இதைப் பார்த்து கொதிச்சு போன ஹேமமாலினி, உடனே தன்னோட X பக்கத்துல பதிவிட்டு இருக்காங்க. "நடப்பது மன்னிக்க முடியாதது. சிகிச்சை பெற்று குணமாகி வர்ற ஒருவரைப் பற்றி பொறுப்புள்ள ஊடகங்கள் எப்படிப் பொய்ச் செய்தியைப் பரப்ப முடியும்? இது ரொம்ப அவமரியாதையான மற்றும் பொறுப்பற்ற செயல். எங்க குடும்பத்தோட தனியுரிமைக்கு மரியாதை கொடுங்க!"ன்னு பதில் கூறியிருந்தார்.
ஹேமமாலினி மட்டுமில்லாம, தர்மேந்திராவின் மகள்ன்னு எல்லாரும் காட்டமாகவே பேசி, அந்தச் செய்தியை மறுத்திருக்காங்க. குடும்பமே அந்தச் செய்திக்கு பதிலடி கொடுத்து, ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில், இப்போ இன்னொரு நல்ல செய்தி வந்திருக்கு!. ஹாஸ்பிட்டல்ல சிகிச்சை பெற்று வந்த தர்மேந்திரா, உடல்நலம் தேறி டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்குத் திரும்பி இருக்காராம்!

தொடரும் சிகிச்சை
ஆனாலும், வீட்லயும் மருத்துவர்களோடக் கண்காணிப்பில் தான் இருப்பார்னும், அங்கேயே அவருக்குத் தேவையானச் சிகிச்சை கொடுக்கப்படும்னும் சொல்லியிருக்காங்க. சினிமாவுல எத்தனை படத்தில் ஹீரோவா நடிச்சாலும், நிஜ வாழ்க்கையில் அவர் ரசிகர்களிடம் சோசியல் மீடியா மூலமாக பேசிக்கொண்டு தான் இருக்கிறார். அடிக்கடி போஸ்ட் போட்டு ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் கொடுத்து வருகிறார். அவர் பூரண குணம் பெற்று திரும்பி வந்தது, பாலிவுட்டுக்கு கிடைத்த பெரிய கொண்டாட்டம் தான்!
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications