போண்டா மணி அனாதையா விட்டுட்டு போயிட்டாரே.. பாவம் மயில்சாமி.. பெட்ஷீட் எடுத்த நெல்லை சிவா: சுப்புராஜ்
சென்னை: உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ளாமல் உயிரிழந்த காமெடி நடிகர்கள் குறித்து, சாரபாம்பு சுப்புராஜ் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அதிலும் சமீபத்தில் உயிரிழந்த போண்டா மணியின் மரணம், தன்னை மிகவும் பாதித்ததாக வேதனை பகிர்ந்துள்ளார்.
King 24X7 என்ற யூடியூப் சேனலுக்கு சாரபாம்பு சுப்புராஜ் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அந்த பேட்டியில் அவர் சொல்லும்போது, "48 வருடமாகிறது நான் சினிமா துறைக்கு.. சினிமா துறையில்தான் என் வாழ்க்கை நடந்து கொண்டிருக்கிறது. அப்போதுள்ள சினிமாவில் மிகப்பெரிய பக்தி, தொழில் பக்தி இருந்தது.. இப்போது அப்படியில்லை.. அன்று அத்தனை நடிகர்களும் மிகப்பெரிய ஜாம்பவான்கள்.. தயாரிப்பாளர்களை தெய்வம் போல நடத்தினார்கள்..

கவிஞர்கள்: தேவர் பிலிம்ஸ், சத்யா மூவிஸ், ஏவிம், பிரசாத், இதெல்லாம் மிகப்பெரிய கம்பெனிகளில் நிறைய நிறைய படங்களை எடுத்தார்கள்.. அதேபோல கவிஞர்கள் எல்லாம் மிகப்பெரியவர்களாக இருந்தனர்.. கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், உளுந்தூர்பேட்டை சண்முகம், இப்படி பல பேர் கலக்கினார்கள்.. இசையில் எம்எஸ் விஸ்வநாதன் ஜாம்பவான்.. அசிஸ்டெண்ட் டைரக்டர்கள் அன்றைய காலகட்டங்களில் சிறப்பாக செயல்பட்டார்கள்" என்று பெருமைபட சொல்லியிருக்கிறார்.
தொடர்ந்து சுப்புராஜ் கூறும்போது, மறைந்த கமெடி நடிகர்கள் குறித்தும் தன்னுடைய வருத்தத்தை பகிர்ந்து கொண்டார்.. "நல்ல நல்ல காமெடி நடிகர்கள் தொடர்ந்து இறந்துவிட்டார்கள்.. விவேக் இறந்துட்டாரு.. மனோபாலா இறந்துட்டாரு. மயில்சாமி இறந்துட்டாரு, நெல்லை சிவா இறந்துட்டாரு.. போண்டாமணி இறந்துட்டாரு.. அல்வா வாசு இறந்துட்டாரு.. கோவை செந்தில் இறந்துட்டாரு..
நண்பர்கள்: இவர்கள் எல்லாருமே இறந்தது எனக்கு மனவருத்தமா இருக்கு. இவர்கள் எல்லாருமே எனக்கு நண்பர்கள். வடிவேலுகிட்ட நாங்கள் ஒன்றாக நடித்தோம்.. நெல்லை சிவா, மேனேஜர் கிருஷ்ணமூர்த்தி , போண்டாமணி இவர்கள் எல்லாம் நடிக்கும்போது டயலாக் சரியாக இல்லைன்னு சொன்னால், ஒப்புக் கொள்ளவே மாட்டார்கள். தங்களது நடிப்பை எந்த காலத்திலும் விட்டுத்தர மாட்டார்கள்.. அந்த அளவுக்கு எல்லாருமே நல்ல நடிகர்கள். தங்கள் நடிப்பின்மீது அபாரமான நம்பிக்கை வைத்திருந்தவர்கள்.
எனக்கு ரொம்ப வேதனை, போண்டா மணி இறந்ததுதான்.. அவருக்கு குழந்தைகள் இருக்காங்க.. பொண்ணை கல்யாணம் செய்து தராமல் போயிட்டாரு.. பையனை படிக்க வைக்காம போயிட்டாரு.. இப்ப அனாதையா விட்டுட்டு போயிட்டாரு.
மன உளைச்சல்: வாய்ப்பு கிடைக்காமல், மன உளைச்சலில் பல காமெடி நடிகர்கள் இறந்துவிட்டதாக சொல்கிறார்கள்.. அப்படியில்லை.. இறந்தவர்கள் எல்லாருமே நல்ல சான்ஸ் கிடைத்து நடித்தவர்கள்தான்.. மயில்சாமி, விவேக், இவர்கள் எல்லாம் உச்சத்தில் இருந்தபோதுதான் இறந்திருக்காங்க.. கிருஷ்ணமூர்த்தி ஷூட்டிங்கில்தான் இறந்துள்ளார்..
நெல்லை சிவா என்ன பண்ணார் தெரியுமா? கொரோனா வந்ததும், பெட்ஷீட்டை எடுத்து போர்த்திக் கொண்டு, நேராக அவரது ஊருக்கு போயிட்டாரு. இங்கே யாராவது டாக்டரை போய் பார்த்திருந்தால் பிழைத்திருக்கலாம்.
போண்டா மணி: போண்டா மணி உடம்பு மோசமாயிடுச்சு.. கிட்னி ஃபெயிலியர் ஆகியும், ஆஸ்பத்திரி போயி 2 நாளைக்கு டிரிப்ஸ் ஏத்திட்டு, மறுபடியும் ஆட போயிடுவார்.. போகாதே போகாதேன்னு சொல்லிட்டே இருந்தேன். கடைசியில மொத்தமா போயிட்டான்.
அல்வா வாசு சரக்கடிச்சே உடம்பு போயிடுச்சு.. தினமும் நான் போய், தண்ணி அடிக்காதேன்னு சொல்லுவேன், வடபழனி கங்கை அமரன் கோயில் தெரு முனையில், சரக்கடிச்சிட்டு படுத்து கிடப்பாரு. நுரையீரல், கல்லீரல் எல்லாமே போயிடுச்சு. அந்த சாவுக்கு போக முடியலேன்னுதான் எனக்கு ரொம்ப வேதனை. ஊருக்கு கொண்டு போயிட்டாங்க சடலத்தை..
மயில்சாமி: வண்டி வெச்சு கூட்டிட்டு போறேன்னு சொல்லியே நேரமாகி இழுத்தடிச்சிட்டாங்க.. இந்த மயில்சாமிதான் எல்லாத்தையும் அன்னைக்கு கெடுத்தது. இல்லாட்டி அந்த சாவுக்கு போயிருப்பேன்.. ஆனால், மயில்சாமி பரிதாபத்துக்குரிய மனிதர், நல்ல மனிதரும்கூட" என்றெல்லாம் அந்த பேட்டியில் தன்னுடைய வேதனையை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications