"விஜய் ஜெயிச்சதும் வீட்டிலேயே ஷாக் கொடுத்த குடும்பம்”... போஸ் வெங்கட் சொன்ன ஓபன் ஸ்டேட்மென்ட்
சென்னை: நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட், நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து ஆரம்ப காலங்களில் கடுமையாக விமர்சித்தவர்களில் ஒருவராக இருந்தார். "விஜய்யால் அரசியலில் பெரிய தாக்கம் ஏற்படுத்த முடியாது" என்ற கருத்தை பல மேடைகளில் வெளிப்படையாக கூறியிருந்த அவர், தற்போது அளித்துள்ள ஒரு பேட்டி சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
குறிப்பாக, தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தனது சொந்த வீட்டிலேயே சந்தித்த 'அவமானங்களை' அவர் நகைச்சுவையாக பகிர்ந்துகொண்ட விதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் குறித்து ஆரம்பத்திலிருந்தே எதிர்ப்பு
தமிழக அரசியல் களத்தில் விஜய் களமிறங்கிய காலத்திலிருந்தே, அவரின் வெற்றி வாய்ப்புகள் குறித்து பல்வேறு கருத்துக்கள் வெளியாகின. அதில், விஜய்யால் பெரிய அளவில் வெற்றி பெற முடியாது என்று நம்பிக்கையுடன் பேசியவர்களில் போஸ் வெங்கட்டும் ஒருவர்.
பல தொலைக்காட்சி விவாதங்களிலும், நேர்காணல்களிலும் விஜய்யின் அரசியல் எதிர்காலம் குறித்து அவர் சந்தேகம் தெரிவித்திருந்தார். ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியாகிய பிறகு நிலைமை தலைகீழாக மாறியதாக அவர் தற்போது ஒப்புக்கொண்டுள்ளார்.
கனவு மாதிரி இருந்துச்சு
சமீபத்திய பேட்டியில் பேசிய போஸ் வெங்கட், தேர்தல் முடிவுகள் வெளியான நாளை நினைவு கூர்ந்தார். "ரிசல்ட் பார்த்துக்கிட்டு இருந்தப்போ எனக்கு அது ஒரு கனவு மாதிரி இருந்துச்சு. நான் நினைச்சது ஒன்னு... நடந்தது வேற ஒன்னு. என்னால நம்பவே முடியல" என்று அவர் கூறியுள்ளார்.
மனைவியிடமிருந்து முதல் டோஸ்
அதன்பிறகு வீட்டில் நடந்த சம்பவங்களை பகிர்ந்த அவர், "நான் டிவி பார்த்துக்கிட்டு இருந்தேன். உடனே என் மனைவி வந்து தலையில் தட்டி, 'உங்களுக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா? என்னெல்லாம் சொன்னீங்க?'ன்னு கேட்டாங்க" என்று சிரித்தபடியே தெரிவித்துள்ளார். இதோடு முடிந்துவிடவில்லை. அடுத்தடுத்து அவரது குடும்ப உறுப்பினர்களும் அவரை கலாய்த்ததாக கூறியுள்ளார்.
பின்னர் தனது மகன் வந்து, "அப்பா... உங்களுக்கு அரசியல் அறிவு சுத்தமாவே இல்லை" என்று நேரடியாக சொல்லிவிட்டு சென்றதாக போஸ் வெங்கட் கூறியுள்ளார். அதன்பிறகு வந்த அவரது மகளின் ரியாக்ஷன் தான் இணையத்தில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.
"என் பொண்ணு பக்கா விஜய் ரசிகை. அவள் வந்து, 'நான் சொன்னேன்ல டாடி... எனக்கு 18 வயசு இருந்திருந்தா நானே விஜய்க்கு ஓட்டு போட்டிருப்பேன்'ன்னு சொல்லிட்டு போயிட்டா" என்று போஸ் வெங்கட் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவங்களை நினைவுகூர்ந்த அவர், "என் வீட்டிலேயே இப்படி நடந்துச்சுன்னா, தமிழ்நாடு முழுக்க என்னை எவ்வளவு பேர் கலாய்ப்பாங்கன்னு நினைச்சேன்" என்று கூறியுள்ளார்.
உதயநிதி பேசியது
இதற்கு முன்பு ஒரு பேட்டியில் பேசியிருந்த உதயநிதி ஸ்டாலின், "நாம் நம்முடைய சாதனைகளை வெளியில் மக்களிடம் சொன்னோம். ஆனால் வீட்டில் உள்ள இளைஞர்களிடம் சரியாக எடுத்துச் செல்லவில்லை. அதனால்தான் அவர்களின் கவனம் வேறு தலைவர்களிடம் சென்றுவிட்டது" என்று கூறியிருந்தார்.
அதேபோல போஸ் வெங்கட் வீட்டிலேயே அவரது குழந்தைகள் விஜய்க்கு ஆதரவாக இருந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் ஒப்பிட்டு பேசப்பட்டு வருகிறது.
விஜய் ரசிகர்கள் வைரல் செய்யும் வீடியோ
போஸ் வெங்கட்டின் இந்த பேட்டி வெளியாகிய சில மணி நேரங்களிலேயே, விஜய் ரசிகர்கள் அதனை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
"விஜய் வெற்றிபெற மாட்டார் என்றவர் இன்று தனது கணிப்பே தவறு என மறைமுகமாக ஒப்புக்கொள்கிறார்", "வெளியில் மட்டுமல்ல, வீட்டிலேயே விஜய்க்கு ஆதரவு இருந்திருக்கிறது", "மகளின் ஒரே வசனம் போதும்" என்று ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
அதேநேரத்தில், சிலர் போஸ் வெங்கட் தனது தவறான கணிப்பை நேர்மையாக ஒப்புக்கொண்டதற்காக அவரை பாராட்டியும் வருகின்றனர்.
எது எப்படியோ, தேர்தல் முடிவுகளை விட போஸ் வெங்கட் வீட்டில் நடந்த இந்த 'குடும்ப விசாரணை' தான் தற்போது இணையத்தில் அதிகம் பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்














Click it and Unblock the Notifications