Retro vs Tourist family box office: 15 நாள் முடிவில் எத்தனை கோடி வசூல்? எந்த படம் டாப்? வெளியான தகவல்
சென்னை: நடிகர் சூர்யா நடிப்பில் உருவான ரெட்ரோ திரைப்படம் கடந்த மே மாதம் மூன்றாம் தேதி திரையரங்கில் வெளியானது. அதே நாளில் டூரிஸ்ட் ஃபேமிலி பேமிலி திரைப்படமும் வெளியானது. இந்த இரண்டு திரைப்படங்களில் எந்த திரைப்படம் அதிக வசூல் பெற்றது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
நடிகர் சூர்யா நடிப்பில் உருவான ரெட்ரோ திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பே பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. இந்த திரைப்படத்தை 2d நிறுவனம் தயாரித்து இருந்தனர் இந்த திரைப்படத்திற்கு போட்டியாக நடிகரும், இயக்குனருமான சசிகுமார் மற்றும் சிம்ரன் நடித்த டூரிஸ்ட் பேமிலி திரைப்படமும் வெளியானது.

டூரிஸ்ட் ஃபேமிலி வசூல்
டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தை 25 வயதான இயக்குனர் அபுஜன் ஜிவி என்கிற புதுமுக இயக்குனர் இயக்கி இருந்தார். இவர் இதற்கு முன்பு உதவி இயக்குனராக கூட பணியாற்றியது கிடையாது. இதனால் இந்த திரைப்படம் எப்படி இருக்கும் என்பதும் பலருடைய கேள்வியாகவும் இருந்தது. இந்த திரைப்படத்திற்கான ட்ரெய்லர் வெளியான போதே இந்த திரைப்படம் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது. இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் நிறுவனம் தயாரித்திருந்தது. ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார்.
ரெட்ரோ திரைப்பட வசூல்
ரெட்ரோ திரைப்படம் 65 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டிருந்தது. இந்த திரைப்படம் பாக்ஸ் ஆஃபீஸ் 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. அதிலும் தமிழ்நாட்டில் மட்டும் 66 கோடி வசூலித்து இருந்தது. அதுபோல டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் பாக்ஸ் ஆபீசில் 50 கோடிக்கு மேல் வசூலித்து இருக்கிறது. ஆனால் இந்த திரைப்படம் பட்ஜெட் வெறும் 7 கோடி தான் அதனால் தயாரிப்பாளருக்கு இந்த திரைப்படம் அதிக அளவில் லாபம் கொடுத்திருக்கிறது.
ஸ்ரீதர் விளக்கம்
இந்த நிலையில் நடிகர் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடித்த படைத்தலைவன் திரைப்படம் வருகிற மே 23ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத் செயலாளர் ஸ்ரீதர் பேசிக்கொண்டிருந்தார். அப்போது ரெட்ரோ திரைப்படத்தை விடவும் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் வசூலில் முந்திவிட்டது என்று கூறியிருக்கிறார். அதோடு சசிகுமார் இதுபோன்ற படங்களை தொடர்ந்து கொடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்திருந்தார்.
ரசிகர்களுக்கு குழப்பம்
அதே நேரத்தில் இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது ரெட்ரோ திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது என்று பட குழு அறிவித்திருக்கிறது. ஆனால் டூரிஸ்ட் ஃபேமிலி 50 கோடி வசூலை தான் கடந்ததாக கூறப்படுகிறது. இப்படி இருக்கும் போது ரெட்ரோவை விட டூரிஸ்ட் பேமிலி எப்படி முந்தி இருக்கும் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதே நேரத்தில் ஒரு சிலர் அதிக லாபம் கிடைத்த படமாக டூரிஸ்ட் ஃபேமிலி இருக்கிறது என்பதை கூட இவர் இப்படி சொல்லி இருக்கலாமோ என்றும் விளக்கம் கொடுத்திருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications