Box Office collection: வசூலில் ரெட்ரோவை முந்தியதா டூரிஸ்ட் பேமிலி? வெளியான பாக்ஸ் ஆஃபீஸ் தகவல்
சென்னை: கடந்த மே ஒன்றாம் தேதி நடிகர் சூர்யா நடித்த ரெட்ரோ திரைப்படமும் சசிகுமார் நடித்த டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படமும் வெளியானது. அந்த இரண்டு திரைப்படங்களில் எந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூல் செய்திருக்கிறது என்று பார்க்கலாம்.
நடிகர் சூர்யாவுக்கு சில வருடங்களாகவே திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இதனால் அவர் நடித்த ரெட்ரோ திரைப்படம் வெளியாவதற்கு முன்பே பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. அதுவும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கிறார் என்ற போது திரைப்படத்திற்கான எதிர்பார்ப்புமே அதிகமாக இருந்தது. இந்த நிலையில்தான் கடந்த மே ஒன்றாம் தேதி தியேட்டரில் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இதே நாளில் அந்தப் படத்திற்கு போட்டியாக சசிகுமார் நடித்த டூரிஸ்ட் பேமிலி திரைப்படமும் வெளியானது.

திரைப்பட விமர்சனங்கள்
டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் ஃபேமிலி ஆடியன்ஸை கவரும் வகையில் இருந்தது. அதேபோல ரெட்ரோ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தை பற்றி சுவாரசியமான தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ரெட்ரோ திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா நடித்திருந்தார்.
ரெட்ரோ திரைப்பட வசூல்
படம் வெளிய ஆவதற்கு முன்பே கனிமா பாடல் பட்டி தொட்டி எல்லாம் பிரபலம் அடைந்து விட்டது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த பாடல் தான் கொடிக்கட்டி பறந்து வருகிறது. எந்த பக்கம் திரும்பினாலும் திரை பிரபலங்கள் முதல் சாதாரண ரசிகர்கள் வரை எல்லாருமே இந்த பாடல்களுக்கு ரீல்ஸ் வீடியோக்களை தெறிக்க விட்டு வருகிறார்கள். அதுபோல ரெட்ரோ திரைப்படத்தில் பிரகாஷ்ராஜ், ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர் உட்பட பலர் நடித்திருந்தனர்.
டூரிஸ்ட் பேமிலி வசூல்
கலவையான விமர்சனத்தை பெற்று வரும் ரெட்ரோ திரைப்படம் மூன்று நாளில் உலக அளவில் 50 கோடிக்கு மேல் வசூலித்திருந்த நிலையில் மூன்றாம் நாளை ஒப்பீடுகளில் நான்காம் நாள் வசூல் சற்று சரிவை சந்தித்து இருந்தது. அதேபோல டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் நடிகை சிம்ரன் மற்றும் சசிகுமார் இருவரும் ஜோடியாக நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் அபிஜன் ஜீவித்த் இயக்கியிருந்தார்.

டூரிஸ்ட் ஃபமிலி நடிகர்கள்
இவர்களோடு கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம் எஸ் பாஸ்கர் என்று அதிகமான நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த திரைப்படம் நாளுக்கு நாள் நன்றாகவே பிக்கப் ஆகி வருகிறது. இந்த திரைப்படம் மூன்றாம் நாள் வசூலை விடவும் நான்காவது நாள் 40 சதவீதம் வந்திருக்கிறது. மூன்றாம் நாள் 2.29 கோடி வசூலித்திருந்த இந்த திரைப்படம் நான்காவது நாளில் 3.2 கோடி வசூலித்து இருக்கிறது.
உங்கள் கருத்து
திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் மூன்றாவது மற்றும் நான்காவது நாள் 5.7 கோடி வசூலித்து இருந்தது. இந்த வாரத்தில் பெரிதாக விடுமுறை நாட்கள் இனி இல்லை என்பதால் இந்த வாரத்தில் வசூல் நிலவரத்தில் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீங்க ரெட்ரோ மற்றும் டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்தை பார்த்துட்டீங்களா? இந்த இரண்டில் உங்களுக்கு எந்த படம் பிடித்தது. நீங்க இந்த படத்தை பார்க்கவில்லை என்றால் எந்த படத்தை பார்க்கணும் என்று ஆசைப்படுறீங்க நண்பர்களே!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications