பிரஜின்க்கு கிடைத்த சூப்பர் வாய்ப்பு.. இளையராஜா திரைப்படத்தில் மீண்டும் ஹீரோவாக அறிமுகம்
சென்னை: பிரஜின் தற்போது சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று விட்டார் .
இளையராஜாவின் 1417 வது படத்தில் பிரஜின் மீண்டும் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கிறார்.

மீண்டும் கிடைத்த வாய்ப்பு
சன் டிவியில் தொகுப்பாளராக அறிமுகமாகி சீரியல்களில் கதாநாயகனாக மாறிய பிரஜின் தற்போது வெள்ளித்திரையிலும் மீண்டும் காலடி எடுத்து வைத்திருக்கிறார். ஏற்கனவே இவர் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும்போது திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் தற்போது பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் இவருக்கு வெள்ளித்திரை வாய்ப்பு கிடைத்திருப்பது ரசிகர்களின் மத்தியில் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. அதுவும் அவருக்கு அதிகமாக பிடித்த இளையராஜா இசையமைக்கும் திரைப்படத்தில் இவருக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு அனைவராலும் வாழ்த்துக்களை வழங்கப்பட்டு வருகிறது.

வெளியான ஃபர்ஸ்ட் லுக்
சின்னத்திரையில் அனைவரையும் அதிகமாக கவர்ந்த சீரியல்கள் ஆன சின்னத்தம்பி, காதலிக்க நேரமில்லை, கோகுலத்தில் சீதை, அன்புடன் குஷி போன்ற சீரியல்களில் கதாநாயகனாக நடித்த பிரஜின் தற்போது ஒளிபரப்பாகி வந்த வைதேகி காத்திருந்தாள் எனும் சீரியலிலும் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் தான் இவருக்கு பம்பர் பரிசு கிடைத்திருக்கிறது. இவருடைய திறமையை மீண்டும் நிரூபிக்கும் விதமாக இவருக்கு தற்போது வெள்ளித்திரை வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அவர் நடித்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் இப்போது வெளியாகி இருக்கும் நிலையில் இந்த திரைப்படத்தின் பெயர் நினைவெல்லாம் நீயடா என தெரியவந்துள்ளது.

இத்தனை பிரபலங்களா இருக்காங்க
பிரஜின் வைதேகி காத்திருந்தாள் என்னும் சீரியலில் இருந்து விலகியதும் அவருக்கு பதிலாக வேறு ஹீரோயினை களமிறக்கி இருந்தது. ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த சீரியல் விரைவில் முடிவடைந்துவிட்டது. இந்த நிலையில் தற்போது இவர் நடிக்கும் திரைப்படம் லேகா தியேட்டர்ஸ் தயாரிக்கின்றனர். அதுபோல இந்த திரைப்படத்தை இயக்குகிறார். இதில் பிரஜின் ஜோடியாக மனிஷா யாதவ் நடிக்கிறார். இவர்களுடன் சினாமிகா, ரோஹித், மனோபாலா, முத்துராமன் உள்ளிட்ட பலரும் இதில் நடித்துள்ளனர். பியர் பிரேமா காதல் படத்தை ஒளிப்பதிவு செய்த ராஜா பட்டாச்சார்ஜி தான் இந்தப் படத்திலும் ஒளிப்பதிவு செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இளையராஜாவின் இசை
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா வெளியிட்டார். படத்தின் இயக்குனர் ஆதி ராஜன் போஸ்டரை வெளியிட யுவன் சங்கர் ராஜாவுக்கு ட்விட்டர் வழியாக தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார். நினைவெல்லாம் நீயே டா திரைப்படமானது பள்ளிநாட்களில் மலர்ந்த காதல் எப்படி நீண்ட காலமாக தொடர்கிறது என்பதை பற்றிய ஒரு படம் ஆகும் என்று இயக்குனர் தெரிவித்துள்ளார். அதற்கு ஏற்றார் போல் தான் ஃபர்ஸ்ட் லுக் உள்ளது. இப்படத்தில் இசைஞானி இளையராஜா 5 பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். அதில் ஒரு பாடலை இசையமைப்பாளர் இளையராஜாவின் மகன் யுவன்சங்கர்ராஜா பாடியுள்ளார். இந்த திரைப்படம் வெள்ளித்திரையில் பிரஜின் ஜொலிக்க வழிவகுக்குமா??என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications