Captain Prabhakaran: கேப்டன் பிரபாகரனுக்கு அதிகரிக்கும் மவுசு! 13 நாளில் இத்தனை கோடி வசூல்!
சென்னை: தமிழ் சினிமாவுல இப்போ புது ட்ரெண்ட் ஒண்ணு போய்க்கிட்டு இருக்கு. பழைய ஹிட் படங்களையெல்லாம், புது டெக்னாலஜியில் ரீ-ரிலீஸ் பண்றதுதான் அந்த ட்ரெண்ட். சமீபத்தில் நடிகர் விஜய்யோட 'கில்லி' படம் ரீ-ரிலீஸாகி, பாக்ஸ் ஆபிஸ்ல பெரிய சாதனை பண்ணுச்சு. ஆனா, இப்போ அதையே முந்துற மாதிரி, கேப்டன் விஜயகாந்த் படம் களமிறங்கி இருக்கு. அந்த படம், 'கேப்டன் பிரபாகரன்'தான். இந்த படத்தின் வசூல் தான் இப்போது பலரையும் வியக்க வைத்திருக்கிறது.

அசத்திய கேப்டனின் நூறாவது படம்
விஜயகாந்த் ரசிகர்களுக்கு கேப்டன் பிரபாகரன் ஒரு சென்டிமென்ட் படம். ஏன்னா, இது கேப்டனோட நூறாவது படம். ஆர்.கே.செல்வமணி இயக்கத்துல, 1991-ல் வெளியான இந்த படம், அப்பவே செம மாஸ். சரத்குமார், மன்சூர் அலிகான், ரம்யா கிருஷ்ணன், ரூபினி, லிவிங்ஸ்டன் எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே இந்த படத்தில் இருந்தது. படம் ஆரம்பிச்சு 25 நிமிஷத்துக்கு அப்புறம்தான் விஜயகாந்த் வருவார். ஆனாலும், அவர் வந்ததும் தியேட்டரே அதிருச்சு. அதுல வில்லனா அறிமுகமான மன்சூர் அலிகான் தன்னோட உடல் மொழியாலும், வசன உச்சரிப்பாலும் முதல் படத்திலேயே மாஸ் காட்டினார். வீரப்பன் கதாபாத்திரத்தை வில்லனா வெச்சு, கதை பண்ணி, அதை ஒரு ஆங்கில படம் போல தமிழ்ல எடுத்து ரசிகர்களை அசத்தினார் இயக்குநர் செல்வமணி.
இந்த படம், அப்பவே பல தியேட்டர்கள்ல 100 நாட்களைத் தாண்டி, சில தியேட்டர்கள்ல 250 நாட்களுக்கும் மேல் ஓடி வெள்ளி விழா படமா சாதனை பண்ணுச்சு.
34 ஆண்டுகளுக்குப் பிறகு வசூல் சாதனை
இப்படிப்பட்ட மாஸ் படம்தான், இப்போ ரீ-ரிலீஸ் ஆகி இருக்கு. கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி, 4K டெக்னாலஜியோட இந்த படம் வெளியானது. படம் ரிலீஸாகி 13 நாட்கள்தான் ஆகுது. ஆனா, இந்த 13 நாட்கள்ல, படம் 27.06 கோடி வசூல் செஞ்சிருக்கு. கிட்டத்தட்ட 34 வருஷத்துக்கு முன்னாடி வெளியான ஒரு படம், இப்போ இவ்வளவு பெரிய வசூலை அள்ளுனது, திரையுலகத்துக்கே பெரிய ஆச்சர்யத்தைக் கொடுத்துருக்கு.
இப்போதான் 'கேப்டன் ஒரு வசூல் மன்னன்'னு மறுபடியும் ஒருமுறை நிரூபிச்சிருக்கார். அவருடைய ரசிகர்கள், இந்த படத்துக்குக் கொடுக்குற ஆதரவு, அவர் இப்போ இல்லனாலும், அவரோட மக்கள் செல்வாக்கு குறையவே இல்லைன்னு காட்டுது. இந்த வசூலைப்பார்த்து பல பிரபலங்களும் பாராட்டிட்டு வர்றாங்க.
விஜய்யின் கில்லியை முந்துமா
ரீ-ரிலீஸ் படங்கள்ல, விஜய் நடிச்ச 'கில்லி' படம் ஒரு பெரிய சாதனை பண்ணியிருந்தது. அது 30 கோடி வரைக்கும் வசூல் செஞ்சுச்சு. இப்போ, நம்ம கேப்டனோட 'கேப்டன் பிரபாகரன்' அந்த வசூலை நெருங்கிடுச்சு. நாளை முதல் தொடர்ந்து மூன்று நாள் விடுமுறை வருகிறது. இதனால் கண்டிப்பா, இன்னும் ரெண்டு நாள்ல, 'கேப்டன் பிரபாகரன்' கில்லியோட ரீ-ரிலீஸ் வசூலை முந்தி, ஒரு புது சாதனை பண்ணும்னு சினிமா விமர்சகர்கள் கணிச்சிருக்காங்க. மறைஞ்சும் கலக்குற கேப்டன், ஒரு வசூல் மன்னன்தான் என்பதை இந்த படம் மீண்டும் ஒருமுறை நிரூபிச்சிருக்கு!












Click it and Unblock the Notifications