முதல்வர் விஜய் வீட்டில் கொண்டாட்டம்.. ஷோபா சந்திரசேகருக்காக வெளிநாட்டிலிருந்து நேரில் வந்த மருமகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக முதலமைச்சர் விஜய்யின் அம்மா சோபா சந்திரசேகரின் பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பான வீடியோக்கள் சோசியல் மீடியாவில் கவனம் பெற்று வருகின்றன. குறிப்பாக வெளிநாட்டில் இருந்து வந்த மருமகளை பார்த்ததும் ஷோபா சந்திரசேகர் காட்டிய அந்த தாய்மையான பாசம் தான் ரசிகர்களை அதிகம் கவர்ந்து இருக்கிறது.

பொதுவாக பிரபலங்களின் பிறந்தநாள் என்றால் கேக், புகைப்படங்கள் வாழ்த்துக்கள் என கொண்டாட்டம் கலைகட்டும். ஆனால் விஜய் அம்மாவுக்காக அவரது மருமகள்களும் சேர்ந்து கொடுக்கும் ஒரு சின்ன சர்ப்ரைஸ் எவ்வளவு பெரிய சந்தோஷமாக இருக்கும் என்பதற்கு இந்த வீடியோவே சாட்சி என்று ரசிகர்கள் அதை ஷேர் செய்து வருகின்றனர்.

ஷோபா சந்திரசேகர் பிறந்தநாள்

ஷோபா சந்திரசேகருக்கு ஆகஸ்ட் 24ஆம் தேதி தான் பிறந்தநாள். தற்போது 78வது வயதில் அடியெடுத்து வைத்துள்ளார். ஆனால் அவரை பலரும் விஜயின் அம்மா என்ற அடையாளத்தில் பார்த்திருக்கலாம். உண்மையில் தமிழ் சினிமாவில் அவருக்கென்று ஒரு தனி பயணம் இருக்கிறது. பின்னணி பாடகியாக சினிமாவில் பயணத்தை தொடங்கிய சோபா பின்னர் கதை எழுத்தாளர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல்வேறு வேலைகளை பார்த்திருக்கிறார்.

Vijay Shoba Chandrasekar

இன்ப அதிர்ச்சி

அதனால் சினிமா குடும்பத்தில் இருந்தாலும் அவர் வெறும் நடிகரின் அம்மா மட்டுமல்ல திரைத்துறையில் தன்னுடைய காலத்திலேயே பல வேலைகளை செய்தவர். இந்த நிலையில் நேற்று அவருடைய பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு அவருடைய மருமகள் வெளிநாட்டில் இருந்து நேரில் வந்திருக்கிறார். கதவை திறந்து பார்த்த சோபா சந்திரசேகருக்கு அவருடைய மருமகளை பார்த்ததும் இன்ப அதிர்ச்சி. உடனே எனக்காகவா நீ வெளிநாட்டில் இருந்து வந்திருக்க என்று அதிர்ச்சியுடன் ஷோபா கேட்டிருக்கிறார்.

முதல்வர் விஜய் மனைவி

இந்த வீடியோவை எடுத்த ஷோபாவின் இன்னொரு மருமகள் அதை சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். ஏற்கனவே விஜய் குடும்பத்தில் பல சர்ச்சைகளும், வதந்திகளும் இருக்கிறது. அதாவது விஜயின் மனைவி சங்கீதா குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக லண்டனில் தன்னுடைய குழந்தைகளுடன் வசித்து வருகிறார். அங்கு விஜயின் மகள் படித்து வருவதால் அதற்காக அவர் தங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Vijay Chief Minister Shoba Chandrasekar

அதே நேரத்தில் விஜயின் மகன் மட்டும் சென்னையில் தங்கி இருக்கிறார். அவ்வபோது அம்மாவை பார்ப்பதற்காக வெளிநாட்டுக்கு போய்க் கொண்டிருக்கிறார். அதனால் விஜய்யின் மனைவி மகள் மகன் யாருமே விஜய் குடும்பத்தினருடன் இல்லை என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் ஷோபா மற்றும் எஸ்ஏ சந்திரசேகர் இருவரும் தனியாக வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு அவருடைய உறவினர்கள் தான் துணையாக இருக்கிறார்கள். உறவினர்களின் குழந்தைகளுடன் ஷோபா சந்திரசேகர் கொஞ்சி விளையாடும் வீடியோக்களையும் அடிக்கடி வைரலாகி வரும்.

குடும்பத்தினரின் அன்பு

விஜய் முதல்வரான சமயத்தில் கூட மொத்த குடும்பத்தினரும் சந்திரசேகர் வீட்டில் இருந்து தான் அந்த மகிழ்ச்சியை கொண்டாடி இருந்தனர். விஜய் இப்போது முதல்வராக மாறிய பிறகு அரசு பணிகளில் கவனம் செலுத்தி வந்தாலும் அவருடைய பெற்றோருக்கு உறுதுணையாக இருக்கும் குடும்பத்தினர் கொடுத்த சர்ப்ரைஸ் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது.

Vijay Chief Minister Shoba Chandrasekar

அதே நேரத்தில் அம்மாவின் பிறந்தநாளுக்கு கூட முதல்வர் விஜய் நேரில் போகவில்லையா? அப்படி போயிருந்தால் போட்டோ எடுத்து ஷோபா சந்திரசேகர் போஸ்ட் போட்டு இருப்பாங்களே அப்போ முதல்வர் பெற்றோரை கூட கவனிக்காமல் அவ்வளவு வேலை பார்க்கிறாரா? என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். எது எப்படியோ முதல்வர் விஜய் அம்மாவின் அம்மாவின் பிறந்தநாளில் உறவினர்கள் கொடுத்த சர்ப்ரைஸ் இப்போ இணையத்தில் கவனத்தை பெற்று வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+