டி.டி வைத்த கோரிக்கை.. பிரபலங்கள் கூறிய கருத்துக்கள்..இது சமுதாயத்துக்கு தேவையான மாற்றம் தான்!
தொகுப்பாளர் டிடி நிகழ்ச்சி நடக்கும் போது தொகுப்பாளர்கள் உட்கார்ந்தபடியே நிகழ்ச்சியே நடத்துவதற்கு வேண்டுகோள் வைத்ததைத் தொடர்ந்து பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள்.
சென்னை: தொகுப்பாளர் டிடி தற்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களுக்கு ஒரு இருக்கை வழங்க வேண்டும் என்று ஒரு வேண்டுகோளை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருந்தார்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களிடம் டிடி வைத்த கோரிக்கையை தொகுப்பாளர்கள் மற்றும் பல பிரபலங்களும் வரவேற்று பாராட்டி வருகிறார்கள்.
அதிலும் குறிப்பாக தொகுப்பாளர் அஞ்சனா தன்னுடைய நன்றியையும் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளையும் அந்த பதிவில் பகிர்ந்து இருக்கிறார்.

முன்னனி தொகுப்பாளர்
விஜய் டிவியில் முன்னணி தொகுப்பாளராக இருந்து வரும் டிடி ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் பல பிரபலங்களுக்கும் இன்ஸ்பிரேஷன் ஆக இருந்து வருகிறார். தன்னுடைய வாழ்க்கையில் எத்தனையோ சோகங்களை தாண்டி வந்திருக்கும் டி டி எப்போதுமே சிரித்த முகமாக தன்னுடைய பிரச்சனைகளை கையாண்டு வரும் விதம் பலரையும் கவர்ந்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அடிக்கடி மோட்டிவேஷன் வீடியோ வெளியிட்டு பலருடைய மனங்களை கவர்ந்திருக்கும் டிடி தற்போது தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் அவருடைய புகைப்படம் ஒன்றை பகிர்ந்து கேப்ஷன் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். வாத்தி ஆடியோ வெளியீட்டு விழாவில் அவர் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து டிடி வைத்த கோரிக்கை பலருடைய கவனத்தை ஈர்த்து வருகிறது.

டிடி வெளியிட்ட புகைப்படம்
ஏற்கனவே டிடிக்கு உடல் நலத்தில் பிரச்சனை இருப்பது பலருக்கும் தெரிந்தது தான். அவரால் அதிகமான நேரம் நின்று கொண்டு வேலை பார்க்க முடியாது. அவருடைய கால்களில் சில பிரச்சனைகள் இருப்பதால் அவர் ரொம்ப நேரம் நின்று கொண்டிருக்க முடியாது என்பதால் அவருக்காக வாத்தி இசை வெளியீட்டு விழாவில் அவர் வெளியே இருந்து பார்க்கும்போது நின்று கொண்டு இருப்பது போலவே தெரிகிற வகையில் ஒரு இருக்கை அமைத்துக் கொடுத்திருக்கின்றனர். அந்த புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து, நம்மால் மாற்றுத்திறனாளியாக இருக்க முடியும். உடலுக்கும் மனதுக்கும் செல்கிறது. உங்கள் அனைவரின் அன்பும் சமீப நாட்களில் இந்த வாத்தி ஆடியோ வெளியீட்டு படத்தை வெளியிட எனக்கு பலத்தை கொடுத்தது. இப்படித்தான் பேப்பரிலும் என் கேப்ஷனிலும் எழுதுகிறேன்.

ஒரு இருக்கை வேண்டும்
5 மணி நேரம் நின்று நிகழ்ச்சிகளை நடத்தும் அறிவிப்பாளர்களுக்கு பார்வையாளர்களுக்கு நிற்பது போல் தெரிகிற இருக்கை ஏற்பாடுகளை வழங்குமாறு ஷோ ஒருங்கிணைப்பாளர்களை கேட்டுக்கொள்கிறேன். இது அவர்களுடைய நீண்ட காலத்திற்கு உதவும் என்று குறிப்பிட்டு இருக்கிறார். இந்த பதிவை தொகுப்பாளர் அர்ச்சனா உண்மை கண்ணா என்று பாராட்டியிருக்கிறார். அதைத்தொடர்ந்து மாகாபா தன்னுடைய ஆதரவை தெரிவிக்க, கோபிநாத் இந்த கருத்தை பாராட்டி இருக்கிறார். அவரை தொடர்ந்து அஞ்சனா, எவ்வளவு சிந்தனை மிக்க மற்றும் கனிவான வார்த்தை டி டி. பல வருடங்கள் ஒன்றாக நின்று கொண்டிருப்பதால் எனது இடுப்பு பந்து மூட்டுகளிலும் முழங்கால் மூட்டுகளிலும் நான் தீவிரமான சிக்கல்களை அனுபவித்து இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

வலியும் வேதனையும்
மேலும் அஞ்சனா வலியால் பல நேரம் நான் துடித்து இருக்கிறேன், சில நாட்களில் ஒரு அங்குலம் கூட நகர முடியாமல் படுக்கையிலிருந்து எழவும் முடியவில்லை. இந்த பதிவு என் மனதை தொட்டது. நீங்கள் எப்போதும் உங்களின் சக தொகுப்பாளர்களை நேசிப்பீர்கள். மேலும் ஊக்கமளித்து வருகிறீர்கள் .எல்லா முரண்பாடுகளும் எதிராக நீங்கள் வெற்றி பெறுவதையும், பிரகாசிப்பதையும் உங்கள் மனவலிமையும் என்னை பல வழிகளில் ஊக்கப்படுத்தி உள்ளது. நான் எப்போதும் உன்னை தேடுவேன். சூப்பர் ஸ்டார் லவ் யூ நாங்கள் உன்னை நேசிக்கிறோம் என்று அஞ்சனா கருத்து தெரிவித்திருக்கிறார்.

அஞ்சனா கூறிய வார்த்தை
அதற்கு டிடி, அஞ்சனா என் அன்பே உன் வலியை என்னால் முழுமையாக உணர முடிகிறது. அதுவும் தாயான பிறகு அது நகைச்சுவை அல்ல, நீயும் ஒரு போர் வீரன். நாம் நம்மை கொண்டாட வேண்டும். அடுத்த முறை நீங்கள் இந்த அமைப்பை பயன்படுத்தி எனக்கு ஒரு படத்தை அனுப்ப வேண்டும். இந்த மேடை நிகழ்ச்சிகளில் உலகம் சிறியது மற்றும் எங்கள் நிகழ்ச்சி இயக்குனர்கள் ஒருவரை ஒருவர் அறிந்திருக்கின்றனர். எனவே நிச்சயமாக அடுத்ததை கேளுங்கள் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று பதிலளித்திருக்கிறார். அதற்கு அஞ்சனா கண்டிப்பா நான் செய்வேன். விரைவில் உன்னை பார்த்து உன்னை கட்டி பிடிக்க காத்திருக்கிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார். தற்போது டிடியில் இந்த பதிவை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
-
ஸ்டன் ஆன விஜய்.. "80 சீட்+ துணை முதல்வர்" எல்லாம் ஓகே.. ஆனா ஒரு விஷயத்தை யோசிக்கும் தவெக தலைமை -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
Election Exclusive: நெருங்குது கிளைமேக்ஸ்..தாமரையுடன் கைகோர்க்கும் விசில்! நள்ளிரவில் ஹோட்டல் மீட்டிங்.. டோட்டல் மாற்றம் -
இந்தியா கோட்டை விட்ட ‘தங்கமான’ வாய்ப்பு! ஈரான் போரை பயன்படுத்தி.. தட்டித் தூக்கிய சீனா! சூப்பர் பவர் -
காங்கிரஸ் கட்சியா இது? தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே அசாம் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! -
கரூர் கேஸ்.. செந்தில் பாலாஜிக்கு மட்டுமல்ல.. "அவங்களுக்கும்" சம்மன் அனுப்பும் சிபிஐ.. பயங்கர செக்! -
4 மணி நேரம் கூட இருக்காது.. தேர்தல் அறிவிப்புக்கு முன்பு மம்தாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாயும் பாஜக! -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
போச்சு.. திமுக கூட்டணியில் முதல் விக்கெட்? பாஜக பக்கம் சாயும் பண்ருட்டி வேல்முருகன்? என்ன காரணம்? -
திமுக கூட்டணியில் தொடர்வது மறுபரிசீலனை செய்யப்படும்.. திடீரென டோனை மாற்றிய தவாக தலைவர் வேல்முருகன் -
Tamil Nadu Election 2026 Date: வெளியானது தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தேதி! எந்தெந்த தேதியில் என்னென்ன நடக்கும்? -
தோல்வியை ஒப்புக்கொண்ட அமெரிக்கா! ஈரான் முன் மண்டியிட்ட டிரம்ப்? குட்டி பாதையால் வீழ்ந்த வல்லரசு












Click it and Unblock the Notifications