நடிகர் மயில்சாமியின் இறப்பிற்கு பிரபலங்கள் பலர் உருக்கமான அஞ்சலி.. ட்ரெண்டிங்கில் வந்த செய்தி
சென்னை: நடிகராகவும் நகைச்சுவை நடிகராகவும் இருந்த மயில்சாமி இன்று காலமானார்.
சன் டிவியில் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் மயில்சாமி இருந்திருக்கிறார்.
சிவன் கோயிலில் இரவு முழுக்க சிவராத்திரி பூஜையில் பங்கேற்று இருந்த நிலையில் இன்று அதிகாலை மாரடைப்பால் நடிகர் மயில்சாமி காலமாகி இருக்கிறார்.
அவருக்கு தொடர்ந்து பிரபலங்கள் பலரும் இரங்கல் செய்தி தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் மயில்சாமி அறிமுகம்
1996 ஆம் ஆண்டு மர்மதேசம் சீரியலில் சந்தானகிருஷ்ணன் ஆக நடித்த நடிகர் மயில்சாமி அதற்குப் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும் இருந்திருக்கிறார். அது மட்டும் அல்லாமல் பல திரைப்படங்களில் பல நடிகர்களுக்கு டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் பணியாற்றிய நடிகர் மயில்சாமி இதுவரைக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த நடிகர் மயில்சாமிக்கு தற்போது 57 வயது தான் ஆகிறது.

நடிகர் சரத்குமாரின் இரங்கல்
இந்த நிலையில் இவர் இன்று காலை திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்திருக்கிறார். இவருடைய இறப்பு அவருடைய குடும்பத்தை மட்டுமல்லாமல் திரை பிரபலங்களையும் ரசிகர்களையும் அதிகமாக அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து ரசிகர்களும் திரை பிரபலங்களும் மயில்சாமியின் நண்பர்களும் அவருக்கு இரங்கல் செய்தி தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மயில்சாமியுடன் நண்பரும் நடிகருமான நடிகர் சரத்குமார் எனது நல்ல நண்பரும் சிறந்த மனிதருமான மயில்சாமியின் அகால மரணத்தை கேட்டு அதிர்ச்சியும் அடைந்தேன். ஆழ்ந்த வருத்தம். அவரது குடும்பத்தினர் உறவினர்கள் நண்பர்கள் மற்றும் திரையுலக சக ஊழியர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

ராதிகா சரத்குமார் வருத்தம்
எனது அன்பு நண்பரும் மிகச் சிறந்த மனிதரும் தமிழ் திரை உலகின் முன்னணி நகைச்சுவை நட்சத்திரமும் சிறந்த விரிவுரையாளருமான அவர்கள் திடீர் உடல்நல குறைவால் மறைந்த செய்தி பேரதிர்ச்சியையும், தீராத மன வேதனையையும் அளிக்கிறது என்று உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். சரத்குமாரை தொடர்ந்து அவருடைய மனைவியான நடிகை ராதிகா சரத்குமார் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இது மிகவும் வருத்தமாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது பத்திரிக்கையில் வாயிலாக இந்த செய்தியை அறிந்ததும் நம்ப நம்பமுடியவில்லை என்று தன்னுடைய வருத்தத்தை பதிவு செய்திருக்கிறார்.

பிரபலங்களின்
அவரை தொடர்ந்து நடிகர் அருண் விஜய் ஆழ்ந்த இரங்கல்கள் மயில்சாமி அண்ணா என்று பதிவிட, நடிகரும் பிக் பாஸ் பிரபலமாக இருக்கும் சுரேஷ் சக்கரவர்த்தி இது எதிர்பார்க்காத நாள் ஆழ்ந்த இரங்கல்கள் டியர் ஃப்ரெண்ட் என்று குறிப்பிட்டு இருக்கிறார். நடிகர் மயில்சாமியோடு பல படங்களில் ஒன்றாக நடித்த நடிகர் மனோபாலா, கொடுமை கொடுமை கொடுமை என்று தன்னுடைய வருத்தத்தை பதிவிட்டு இருக்கிறார். தொடர்ந்து பிரபலங்களும் ரசிகர்களும் சமூக வலைத்தளத்தில் நடிகர் மயில்சாமிக்கு இரங்கல் செய்தி தெரிவித்து வரும் நிலையில் அவருடைய பெயர் ட்ரெண்டிங்கில் வலம் வருகிறது.
-
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
பொற்காலம் படத்தில் முரளியின் தங்கச்சியாக நடித்த நடிகை மரணம்.. இப்படியா நடக்கணும்? கலங்கி நிற்கும் குடும்பம் -
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?











Click it and Unblock the Notifications