யாரு பெத்த புள்ளைகளோ இப்படி பேயா சிரிக்குதுக.. சைத்ராவின் "ஹாஹாஹாஹா"!
சென்னை: சைத்ரா ரெட்டியும், அவரது தோழிகளும் சேர்ந்து சிரித்த சிரிப்பால் இன்ஸ்டாகிராமே அலறிப் போய்க் கிடக்கிறது.
சைத்ரா ரெட்டியும் அவரது தோழிகளும் என்ற தலைப்பில் ஒரு படமே எடுக்கலாம். அந்த அளவுக்கு டெர்ரர் கேங் இது.. கூட்டமாகவே போவார்கள். கூட்டமாகவே என்ஜாய் செய்வார்கள்.
இப்படித்தான் இப்போதும் ஒரு கூட்டமாக கூடி பேய்த்தனமாக சிரித்து டப்ஸ்மாஷ் செய்து அலற விட்டுள்ளனர். சும்மா சொல்லக் கூடாது.. பேயே பயந்து போகும் அளவுக்கு சிரித்து வைத்துள்ளனர்.

செம டிமாண்ட்
தற்போது இருக்கும் சூழ்நிலைகளில் சினிமாவில் நடிக்கும் நடிகைகளை விடவும் சீரியல் நடிகைகளுக்குத்தான் அதிகமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர் .முன்பெல்லாம் அதிகமாக வெள்ளித்திரை நடிகைகளுக்கு தான் ரசிகர் மன்றங்களை அமைத்து கோயில்களையும் கட்டி வந்தனர் .ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

கலக்கல் ஆக்டிவ்
எந்த நடிகையாக இருந்தாலும் சரி அவர் இணையதளத்தில் ஆக்டிவாக இருந்தாலே போதும் அவருக்கு என்று தனி பட்டாளம் உருவாகிவிடும் .அந்த மாதிரிதான் சீரியலயும் தாண்டி சீரியல் நடிகையான சைத்ரா ரெட்டி ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் தனது திரைப் பயணத்தை அவனு மேட் ஷ்ரவானி என்னும் கன்னட சீரியல் மூலம் தொடங்கி இருந்தாலும் தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதலில் பிரியாவாக கலக்கியிருப்பார்.

கேரக்டரோடு ஒன்றினார்
இவருக்கு முன்பு இந்த கேரக்டரில் பிரியா பவானி சங்கர் நடித்திருந்ததால் அந்த கேரக்டரோடு அவர் ஒன்றி விட்டார் .அந்த இடத்தில் இனி யாரும் நடிக்க மாட்டார்கள் என நினைத்திருந்த நேரத்தில் அவருக்கு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் இந்த சீரியலில் இருந்து அவர் விலகியதும் அவருடைய இடத்தில் இவர் நடிக்க ஆரம்பித்தார்.

ரசிகர்கள் மனதில்
ஆனால் பின்பு அதே கேரக்டரில் ரசிகர்களின் மனதில் இடத்தை பிடித்து விட்டார் .ஆனால் ஹீரோயினியாக நடித்தால் தனது திறமையை காட்ட முடியாது என நெகட்டிவ் கேரக்டரில் தனது திறமையை காட்ட முடியும் வேண்டும் என காத்திருந்த அவருக்குத்தான் ஜீ தமிழில் இருந்து வாய்ப்பு கிடைத்திருக்கிறது. 2017ஆம் ஆண்டில் யாரடி நீ மோகினி சீரியல் மூலம் அவர் ஜீ தமிழில் காலடி எடுத்து வைத்திருந்தாலும் அதற்குப் பிறகு நெகட்டிவ் கேரக்டரில் தனது திறமையை நன்றாக காட்டி வருகிறார் .

சூப்பர் வில்லத்தனம்
பொதுவாக ஒரு திரைப்படமாக இருந்தாலும் சரி சீரியலாக இருந்தாலும் சரி எதிலுமே கதாநாயகன் என்று ஒன்று இருந்தால் வில்லன் என்று ஒன்று இருக்கும் அது போல தான் பலரும் கதாநாயகர்களை விரும்பினாலும் நெகட்டிவ் ரோலில் நடிக்கும் வில்லன்களால் தான் அவர்கள் கதாநாயகர்களுக்கு மதிப்பு அதுப்போல இந்த சீரியலின் மூலம் இவரை ரசிகர்கள் திட்டி தீர்த்தாலும் உண்மையில் இந்த சீரியல் நடிகைகள் செமையாக பிரண்ட்ஸ் களாக இருந்து வருகின்றனர் .

பேய் சிரிப்பு
அதனால்தான் இவர்கள் சூட்டிங் ஸ்பாட்டில் ஃப்ரீயாக இருக்கும் நேரத்தில் இந்த சீரியல் நடிகைகளுடன் இவர் ரீல்ஸ் வீடியோக்கள் எடுத்து அடிக்கடி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருவார். அப்படித்தான் இப்போது ஒரு வீடியோ போட்டுள்ளனர். இவரது தோழிகள் கூட்டமாக கூடி பேய் சிரிப்பு டப்ஸ்மாஷ் செய்து அலற விட்டுள்ளனர். முதலில் ஒவ்வொருவராக சிரிக்கின்றனர். கடைசியில் மொத்தமாக அலறுகின்றனர்.

காதலித்து திருமணம்
இவருக்கு சமீபத்தில் தான் திரைப்பட தயாரிப்பாளரும் ஒளிப்பதிவாளருமான ராகேஷ் என்பவருடன் திருமணம் முடிந்தது .திருமணத்திற்குப் பிறகும் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் இவர் தற்போது சினிமா ஹீரோயின்களுக்கு டப் கொடுக்கிற மாதிரி கலக்கலாக ஸ்லீவ்லெஸ் உடையில் போட்டோ ஷூட் எடுத்து இன்ஸ்டாகிராமில் தெறிக்க விட்டிருக்கிறார் .இவருடைய இந்த புது அவதாரத்தை பார்த்ததும் இதுவரைக்கும் இவரை திட்டி தீர்த்த ரசிகர்கள் கூட தற்போது நன்றாக ரசித்து வருகின்றனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications