Chandralekha serial: வனிதா விஜயகுமாருக்கு பெரிய பொட்டு ரொம்ப பிடிக்குமோ?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொதுவாகவே இந்த காலத்து பெண்கள் நெற்றியில் பொட்டு வைப்பதில்லை. அப்படியே வச்சாலும் புருவத்துக்கு கீழே மூக்குக்கு மேலேன்னு ரொம்ப சின்னதா கண்ணுக்குத் தெரியாம வச்சுக்குவாங்க.

கல்யாணம் ஆன பொண்ணுங்க நெத்தியில் பொட்டு வைக்க விருப்பப்படலேன்னாலும், திருமணம் ஆனதற்கு அடையாளமாக நெற்றியின் வகிட்டில் குங்குமம் வைத்துக் கொள்வதை மறப்பதில்லை.

பிக்பாஸ் 3 மூலம் பிரபலம் ஆன நடிகை வனிதா விஜயகுமார் எப்போதும் உடைகளுக்கு மேட்சாக பெரிய அளவில் பொட்டு வைத்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டு இருக்கிறார்.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் வயதானாலும் ரொம்பவும் அழகாக இருந்தவர் வனிதா விஜய்குமார்தான். ஆனால், மற்ற ஹவுஸ் மேட்ஸ் போல, இவர் விதம் விதமான உடைகள் எல்லாம் அணிந்து இருக்கவில்லை.அணிந்த உடைகளையே திரும்ப அணிந்து இருந்த ஹவுஸ்மேட்ஸில் இவரும் ஒருவர்.

வண்ண வண்ண பொட்டுக்கள்

வண்ண வண்ண பொட்டுக்கள்

எப்போதும் சீரியல் ஹீரோயின்களில் வித்தியாசமான கதாபாத்திரம் அல்லது வில்லி கதாபாத்திரம் என்றால்தான் பெரிய பொட்டு என்று கெட்டப் மாத்துவார்கள்.ஆனால், வனிதா விஜயகுமார் எப்போதும் உடைக்கு ஏத்த மாதிரி அழகான நிறத்தில் பெரிய பொட்டு வைத்து இருப்பார்.

சந்திரலேகா சீரியல்

சந்திரலேகா சீரியல்

வனிதா விஜயகுமார் சன் டிவியின் சந்திரலேகா சீரியலில் நடிகை வனிதா விஜகுமாராகவே வருகிறார். பெண்ணியம் பேசும் கதாபாத்திரம் இவருக்கு, இவரது உண்மையான கதா பாத்திரத்துக்கு நிகராகவே இதிலும் நடிச்சு இருக்கார்.

அழகான பொட்டு

அழகான பொட்டு

வனிதாவுக்கு அவர் வைத்து இருக்கும் அழகான வண்ண வண்ண பொட்டு அவருக்கு மேலும் அழகு சேர்க்கிறது. நீங்கள் கவனித்து பார்த்தால் தெரியும்..அவர் எப்போதுமே பெரிய பொட்டு வைத்துதான் பிக்பாஸ் மற்றும் சீரியல்களில் காட்சி தருகிறார். இப்படி பொட்டு வைத்துக் கொள்வது அவருக்கு ரொம்பவும் பிடிக்கும் போலும். அதுவும் நன்றாகத்தான் இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+