சந்திரயான் 3 புகைப்படத்தை வெளியிட்டு கோபிநாத் போட்ட பதிவு.. சும்மா நச்சுன்னு சொல்லிவிட்டாரே
சென்னை: இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலாவில் வெற்றிகரமாக தரை இறங்கி இருக்கிறது.
அதுபோல நிலாவின் தென்துருவத்தில் தரை இறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றிருக்கிறது.

இது குறித்து பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வரும் நிலையில் நீயா நானா நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
இப்போது சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் உயரம் படிப்படியாக குறைக்கப்பட்டு நிலவின் தரைப்பகுதியில் கால் பதித்து இருக்கிறது. இந்த நிகழ்வு தற்போது செய்தி சேனல்களில் லைவாக காட்டப்பட்டு கொண்டிருக்கிறது. அதுபோல விக்ரம் லேண்டர் தரையிறங்கும் நிகழ்வை தென் ஆப்பிரிக்காவில் இருந்து காணொளி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரோ குழுவினருடன் இணைந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்.
இந்தியாவின் பெருமையான இந்த தருணத்தை பல பிரபலங்களும் மக்களும் சந்தோஷத்தில் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற வேண்டும் என்று இந்தியாவில் இருக்கும் பல இடங்களிலும், மத வழிபாட்டு தளங்களிலும் இதற்காக சிறப்பான பிரார்த்தனைகள் நடைபெற்று வந்தது.
சாதாரண மக்கள் முதல் பல பிரபலங்கள் வரைக்கும் இந்த நிமிடத்திற்காக காத்திருந்தனர். சந்திராயன் 3 வெற்றியை தங்களுடைய வெற்றி போன்று இப்போது அனைவரும் கொண்டாடி மகிழ்ந்திருக்கின்றனர். இந்த நிலையில் சமூக வலைத்தளத்துங்களிலும் சந்திரயான் வெற்றிக்காக வாழ்த்துக்களும் மீம்ஸ்களும் குவிந்து கொண்டிருக்கிறது.

அந்த வகையில் விஜய் டிவியில் நீயா நானா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கோபிநாத் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சந்திரயான் 3 புகைப்படத்தை வெளியிட்டு, "வாழ்த்துக்கள்..இது பெருமைக்குரிய தருணம்" என்று மகிழ்ச்சியோடு தெரிவித்து இருக்கிறார். அதே நேரத்தில் கோபிநாத் மட்டுமல்லாமல் சின்னத்திரை, பெரிய திரை பிரபலங்கள் பலரும் தொடர்ச்சியாக தங்களுடைய டிவிட்டர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியோடு பதிவுகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில் பின்னணி பாடகி சுஜாதா மோகன் தன்னுடைய instagram பக்கத்தில் சந்திராயன் புகைப்படத்தை வெளியிட்டு, அதில் பணிபுரிந்த அனைவருக்கும் வாழ்த்துக்களையும் தான் இந்தியர் என்பதில் பெருமை கொள்வதாகவும் பதிவு வெளியிட்டு இருக்கிறார். அதுபோல பிக் பாஸ் பிரபலமான ஐக்கி பெர்ரியும் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
-
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications