சந்திரயான் 3 ஒற்றை புகைப்படம்.. ரவுண்ட் கட்டி அடித்த சின்னத்திரை பிரபலங்கள்.. ஆஹா பெருமையான தருணம்
சென்னை: இன்று இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலாவில் வெற்றிகரமாக தரை இறங்கி இருக்கிறது.
இதனால் உலக நாடுகளே பெருமையாக இந்தியாவை பார்க்கும் நிலையில் இந்தியாவில் இருக்கும் பிரபலங்கள் பலரும் இந்த வெற்றியை கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் சந்திரயான் 3 நிலவில் தர இறங்கிய புகைப்படத்தை வெளியிட்டு சின்னத்திரை பிரபலங்கள் பலரும் தொடர்ச்சியாக வாழ்த்துக்களை கூறி தங்களுடைய மகிழ்ச்சியை காட்டி வருகின்றனர்.
தற்போது விக்ரம் லேண்டர் நிலாவில் வெற்றிகரமாக தரையிறங்கி விட்டது. நிலாவில் தென்துருவத்தில் தரை இறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்று இருக்கிறது. சந்திராயன் 3 நிலாவில் செய்யப் போகும் ஆய்வுகள் எதிர்கால விண்வெளி பயணங்களுக்கே பயனளிக்கும் என்று சென்னையில் உள்ள பிர்லா கோளரங்கத்தின் இயக்குனர் லெனின் கூறிக் கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் ரஷ்யாவில் லூனா 25 விண்கலம் தொழில்நுட்ப கோளாறுகளால் நிலாவில் மோதி நொறுங்கியது. இதைத்தொடர்ந்து இஸ்ரோ மீது இந்தியா மட்டுமல்லாமல் மொத்த உலகின் கண்களும் முற்றிலும் பதிந்திருந்தது. இந்த நிலையில் சந்திராயன் 3 மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது. இந்த நிலையில் தற்போது வெற்றிகரமாக இந்தியாவின் சந்திரயான் 3 நிலவில் தரை இறங்கியதை பலரும் பெருமையோடு கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.
சாதாரண இந்திய குடிமகன்களில் தொடங்கி பிரபலங்கள், திரை துறையினர், அரசியல் பிரபலங்கள் என பலரும் இதை கொண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில் சின்னத்திரை பிரபலங்கள் தொடர்ச்சியாக தங்களுடைய சமூக வலைத்தள பக்கங்களில் இதில் பணியாற்றியவர்களுக்கு வாழ்த்துக்களையும் தாங்கள் இந்தியர் என்பதில் பெருமை என்றும் கூறி வருகின்றனர். அதில் பிக் பாஸ் ஷிவானி சந்திராயன் 3 புகைப்படத்தை வெளியிட்டு "ஜெய்ஹிந்த்" என்று பதிவு வெளியிட்டு இருக்கிறார்.
அதைத் தொடர்ந்து விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த அறந்தாங்கி நிஷா," நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய சந்திராயன் 3. இதற்கு உழைத்த அத்தனை சகோதர சகோதரிகளுக்கும் நன்றி" என்று உணர்வுபூர்வமாக பதிவு வெளியிட்டிருக்கிறார். அதுபோல குக் வித் கோமாளி சிவாங்கியில் தொடங்கி, நீயா நானா கோபிநாத், பிக் பாஸ் பிரபலங்கள் என பலரும் தொடர்ச்சியாக தங்களுடைய வாழ்த்துக்களை சந்திரயான் 3 வெளியிட்ட புகைப்படங்களோடு தெரிவித்து வருகிறார்கள்.
-
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications