Kalyana Vedu Serial: திருமுருகன் தொடர்ந்து தப்பித்துக் கொண்டு இருக்கிறார்...!
சென்னை: சன் டிவியின் கல்யாண வீடு சீரியலில் இயக்குநர் திருமுருகன் தொடர்ந்து தவறு செய்துக்கொண்டு இருந்தாலும், சானல் அவரை கண்டு கொள்ளாமல் விட்டு இருப்பதால் தப்பித்துக்கொண்டே வருகிறார்.
கலா சகுந்தலா சகோதரிகளை மட்டும்தான் அவர் இழிவாக காண்பித்தார் என்றால், இப்போது கோபியின் சித்தி முறையில் வரும் தந்தையின் இரண்டாவது மனைவியையும் மிக இழிவாக சித்தரித்து காண்பித்து வருகிறார்.
அவரை கோபி பேசும்போது அந்த பொம்பளை அந்த பொம்பளை என்று குறிப்பிட்டு பேசுவது ஏற்றுக் கொள்ளும்படி இல்லை. அவ்வளவு வாழ்த்து சொன்ன அந்த அம்மா இவ்வளவு கீழ் நிலைக்கு உடனே தள்ளப்பட்டது எப்படி?

அப்பாவுக்கு கொள்ளி
கோபி தனது அப்பாவுக்கு கொள்ளி வைத்துவிட்டு கிளம்பும் போது கோபியின் சித்தி, நீ நல்லா வருவே.. பெரும் கோடீஸ்வரான இருப்பே.. நீ தொட்டது துலங்கும்.. உன் வாழ்க்கை அமோகமா இருக்கும் என்று வாழ்த்தி பேசிவிட்டு, இனிமேல் உன் வழிக்கு நானும் என் மகளும் வர மாட்டோம்னு சொல்ற மாதிரி காட்சி வைத்து இருந்தார்.

எபிசோட் நீட்டிக்க
ஆனால், சிறிது நாட்கள் கழிவதற்குள் அந்த சித்தி கலா, சகுந்தலா சகோதரிகளுடன் சேர்த்துக்கொண்டு கோபி குடும்பத்தை வம்புக்கு இழுக்க திருவையாறுக்கே போகிறார். திடீரென அவரை ஒன்றும்தெரியாதவர் போல.. கேட்பார் சொல் கேட்பது போல மாற்றி விட்டார் திருமுருகன். எபிசோடை நீட்டிக்க இப்படி கேவலமாக மூன்று பெண்களின் கதாபாத்திரத்தை சித்தரித்து வருகிறார்.

அது இது பொம்பளை
சித்தி போனில் கோபியிடம் பேசுவதே தேவையில்லாத காட்சி.. அப்படிப்பட்ட காட்சியையும் வைத்து.. அவரை அது இது என்று பேசுவதோடு, அந்த பொம்பளை என் கூட பேசக் கூடாதுன்னு அவங்க பெத்த பெண்ணிடம் பேசுகிறார். அந்த பெண்ணும், அண்னன் என்று இவரிடம் உருகி.. அம்மாவை கேவலமாக பேசுவது போல காண்பிக்கிறார்.

அம்மா உசத்தி
எல்லா பிள்ளைகளுக்கும் பெற்ற அம்மாதான் உசத்தி. ஆனால், இவரை பெற்ற அம்மா மட்டும்தான் உலகில் உசத்தி என்பது போல் இந்த காட்சியை வைத்து இருக்கார்.சமூகத்தின் அவலம் என்பது பெண்கள் புறம் பேசுவது மட்டும்தானா? எத்தனை இருக்கிறது.. நிலைமை அப்படி இருக்க...இதில் ஃபோகஸ் எதற்கு?

போஸ்டர் எதுக்கு
ஏங்க.. கொஞ்சம் கூட அப்டேட் இல்லாமல் எதுக்குங்க பழைய போஸ்டரை வச்சுக்கிட்டு காலத்தை ஓட்டறீங்க? ஸ்வேதா புருஷன் கூட வாழ ஆரம்பிச்சே ஆறு மாசம் ஆச்சு.. இப்போ புருஷன்தான் வாழ்க்கை என்று ஸ்வேதா டெல்லிக்கே போயாச்சு..இன்னும் ஏன் கோபி தோளில் கைப்போட்டபடி ஸ்வேதா போஸ்டர்? கல்யாண வீடுன்னு சீரியல் பேர் வச்சுக்கிட்டு கல்யாணம் ஆன பெண்களை இழிவு படுத்தறீங்களா?
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications