"அவள் என் மகள்” ஆனால்..? மணிமேகலை விலகல் குறித்து உண்மையை போட்டு உடைத்த செஃப் தாமு
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியதை குறித்து செஃப் தாமு கருத்து தெரிவித்திருக்கிறார்.
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 4இல் இருந்து மணிமேகலை திடீரென வெளியேறி இருந்தார்.
மணிமேகலை எதற்காக இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார் என்பதை குறித்து எந்த தகவலையும் மணிமேகலை கூறாமல் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் மணிமேகலையின் வெளியேற்றம் குறித்து செஃப் தாமு சில தகவல்களை கூறி இருக்கிறார்.

நான்காவது சீசன்
விஜய் டிவியில் அதிகமான ரசிகர்களை கவர்ந்த நிகழ்ச்சி என்றால் பிக் பாஸ் நிகழ்ச்சி மற்றும் அதைத்தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். தங்களுடைய கவலைகள் எல்லாம் மறந்து போகும் இந்த நிகழ்ச்சியை பார்த்தால் என்று அதிகமான ரசிகர்கள் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் இந்த நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் ஆர்வத்துக்கோடு காத்திருக்கின்றனர். தற்போது நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. நான்கு சீசன்களாக ஒரு சில கோமாளிகள் மட்டும் தான் தொடர்ந்து வருகின்றனர். குக்குகள் அடிக்கடி மாறி வருகிறார்கள்.

திடீர் அறிவிப்பு
அந்த வகையில் நான்கு சீசன்களாக இந்த நிகழ்ச்சியில் பலரையும் சிரிக்க வைத்து நிகழ்ச்சியை கலகலப்பாக கொண்டு போய்க் கொண்டிருந்த ஒரு போட்டியாளராக மணிமேகலை இருந்து வந்தார். இந்த நிலையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு திடீரென்று தான் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற போவதாக அறிவித்து அனைவருக்கும் ஷாக் கொடுத்தார். இந்த நிகழ்ச்சி குழுவுடன் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக அவர் வெளியேறினாரா? என்று பல்வேறு கேள்விகள் நிலவி வருகிறது.

அடுத்த கட்ட முன்னேற்றம்
ஆனாலும் மணிமேகலை தான் வெளியே போனது பற்றி என்ன காரணம் என்பதை வெளிப்படையாக இதுவரைக்கும் பேசவில்லை. ஆனாலும் அவர் தன்னுடைய வழக்கமான பணிகளை செய்து வருகிறார். குறிப்பாக கிராமத்தில் அவர் வாங்கி இருந்த நிலத்தில் ஒரு பெரிய பார்ம் ஹவுஸ் கட்ட போவதாக அறிவித்து அதற்கான பூஜை புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வரும் தாமு பேட்டி ஒன்றில் மணிமேகலையை குறித்து பேசி இருக்கிறார்.

இதுதான் காரணமாம்
அதில் மணிமேகலை எனக்கு மகள் போன்றவள். அவர் நிகழ்ச்சியை விட்டு போனது எங்களுக்கு லாஸ் தான். அவருடைய காமெடி அதிகம் நான் மிஸ் பண்ணுகிறேன். இது அவருடைய விருப்பம். அடுத்து ஆங்கர் போன்ற விஷயத்தில் கவனம் செலுத்த இருக்கிறார் என நினைக்கிறேன். அவரது எதிர்காலம் ரொம்ப முக்கியம் அதனால் எடுத்த முடிவுதான் இது என்று தாமு கூறி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications