இது உங்க ஷோ இல்ல பிரியங்கா! இங்க நாங்க வச்சதுதான் சட்டம்.. விளாசிய செஃப் தாமு.. வெளியான வீடியோ
சென்னை: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகுவதற்கு காரணம் பிரியங்கா தான் என்று மறைமுகமாக கூறியிருந்த நிலையில் பிரியங்காவை செஃப் தாமு அசிங்கப்படுத்திய வீடியோ ஒன்று இணையத்தில் ட்ரெண்ட் ஆகி கொண்டு இருக்கிறது. என்ன நடந்தது என்பது பார்க்கலாம்.
நேற்று முன்தினம் மணிமேகலை வெளியிட்ட பதிவு மற்றும் வீடியோதான் இணையத்தில் அதிகமாக பேசப்படுகிறது. சின்னத்திரையில் மணிமேகலைக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். தொகுப்பாளராக பலருக்கும் பரிச்சயமாக்கி இருந்தாலும் இவர் தான் செய்யும் சின்ன சின்ன விஷயங்களையும் கூட யூடியூப்பில் வெளியிட்டு ரசிகர்களிடம் நெருங்கிய நட்பில் இருக்கிறார்.

அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தன்னை வேலை செய்ய விடாமல் ஒரு குக்காக வந்த தொகுப்பாளர் தொந்தரவு செய்கிறார் என்று ஒரு பதிவு வெளியிட்டு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகி விட்டேன் என்று கூறியிருந்தார். மணிமேகலை இந்த முடிவெடுத்ததற்கு காரணம் பிரியங்கா தான் என்று இணையத்தில் அவரை அதிகமானோர் திட்டி தீர்த்து வருகிறார்கள். மீம்ஸ்களில் கூட பிரியங்காவை பலரும் திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்புவரைக்கும் பிரியங்கா குழந்தைத்தனமாக என்டர்டைன்மென்ட் செய்யும் விதத்தில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் என்று அவரை பாராட்டிய ரசிகர்கள் கூட பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னை எதிர்ப்பவர்களை தம்பி, நண்பன் என்று உறவுமுறை சொல்லி அழைத்து அவர்கள் தன்னை எதிர்க்காத வகையில் பார்த்துக் கொள்கிறார் என்று அவரை நிறைய பேர் திட்டிக் கொண்டு இருந்தார்கள்.
ஆனாலும் கடைசி நாள் வரைக்கும் பிரியங்கா தன்னுடைய ரசிகர்களின் செல்வாக்கால் இருந்தார். தன்னுடைய நண்பன் என்று தட்டிக் கொடுத்த ராஜு பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வெற்றி பெற்றதும் பிரியங்கா பெரிய அளவில் சந்தோஷப்பட்டு இருந்தார். ஆனால் அதற்கு பிறகு எனக்கு விஜய் டிவியில் நிகழ்ச்சி கிடைக்குமா? இல்லையா? என்று பலமுறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரியங்கா பதறி கொண்டு இருந்தார்.
Chef Damu says “This is not Start Music, it is Cook with Comali, naanga vachathu thaan sattam”
— BB Mama (@SriniMama1) September 14, 2024
Is is not something dominating speech? #Manimegalai #CookuWithComali #CookwithComali5
pic.twitter.com/Z16iXew7Wu
சிறப்பு விருந்தினராக பிக் பாஸ் வீட்டிற்குள் வருபவர்களிடம் கூட பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு விஜய் டிவியில் எனக்கு நிகழ்ச்சி கிடைக்குமா என்று தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார். இது ஒரு பக்கம் இருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வழக்கம் போல பிரியங்காவிற்கு நிகழ்ச்சிகள் கிடைத்துக் கொண்டிருந்தது. விஜய் டிவியில் எந்த நிகழ்ச்சி பார்த்தாலும் அங்கு பிரியங்கா மற்றும் மாகாபா இருவரும் முகம் தான் தெரியும் என்று சொல்லும் அளவிற்கு எல்லா நிகழ்ச்சிகளும் இவர்கள் இருவருமே ரவுண்டு கட்டி ஆடிக் கொண்டிருக்கிறார்கள்.
அதிலும் தொகுப்பாளராக தான் எல்லா நிகழ்ச்சிகளிலும் இருந்தாலும் போட்டியாளராகவும் குக் வித் கோமாளியின் ஐந்தாவது சீசனில் அறிமுகம் ஆகி இருந்தார். ஆனால் இந்த சீசனில் இவர் குக்காக வந்திருக்கிறாரா? அல்லது தொகுப்பாளராக வந்திருக்கிறாரா? என்று பல பேர் இவரை கிண்டல் செய்து வந்தனர். ரசிகர்கள் கலாய்த்து வந்தது போலவே நேற்று முன்தினம் உள்ளே நடந்த பூகம்பம் இணையத்தில் வெடித்திருக்கிறது.
அதாவது மணிமேகலை, பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் தடுக்கிறார் என்று குற்றச்சாட்டு வைத்திருந்தார். இந்த நிலையில் பிரியங்காவை செஃப் தாமு கலாய்த்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. அதில் வழக்கம் போல பிரியங்கா தன் தம்பி என்று கூப்பிடும் இர்பானுக்காக செஃப் தாமுவிடம் சண்டை போடுகிறார்.
அதாவது போன வாரம் என்னுடைய தம்பி அட்வான்டேஜ் டாஸ்க் வெற்றி பெற்று இருந்தான் ஆனால் அப்போ சும்மா ஏதோ அவன் உள்ள வந்துட்டான் என்பது போல பேசினீங்க. ஆனா இந்த வாரம் பழைய குக்குகள் வெற்றி பெற்றதா பெருமையா பேசுறீங்க என்று வாக்குவாதத்தில் ஈடுபட, அதற்கு செஃப் தாமு பிரியங்கா போன வாரமும் அதற்கு முந்தன வாரமும் பழைய குக்குகள் வரவில்லை.. ஆனா இன்னைக்கு நாங்க வைக்கிறது தான் சட்டம்.
இது நீங்க தொகுத்து வழங்கும் ஸ்டார் மியூசிக் ஷோ இல்ல. இது குக் வித் கோமாளி நிகழ்ச்சி என்று பிரியங்காவிற்கு பதிலடி கொடுத்து இருக்கிறார். பிரியங்கா தொகுப்பாளராக எல்லா நிகழ்ச்சிகளிலும் வரும் போட்டியாளர்களிடம் கேள்வி கேட்பது போல இங்கு தான் ஒரு போட்டியாளர் என்பதை மறந்து நடுவர்களிடமும் கேள்வி கேட்டு கடைசியில் அசிங்கப்பட்டு இருக்கிறார். இதை இப்போது இணையத்தில் பல ட்ரெண்ட் செய்து கொண்டிருக்கிறார்கள்.
-
சிறகடிக்க ஆசையில் ரசிகர்கள் நினைத்தது நடந்தது.. இனியாவது விஜயா திருந்துவாரா? முத்து கொடுத்த செம ட்விஸ்ட் -
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
மணிமேகலையின் புதிய வீடு பார்த்தீங்களா?... கஷ்டப்பட்ட நாட்களை மறக்கலையே! வாழ்த்தும் ரசிகர்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications