சர்ப்ரைஸ் கொடுத்த வெங்கடேஷ் பட்! டப்பிங் பேசும் வீடியோவை வெளியிட்டு சொன்ன விஷயம்.. டுவிஸ்ட் இருக்கு
சென்னை: செஃப் வெங்கடேஷ் பட் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் டப்பிங் பேசும் வீடியோ ஒன்றை வெளியிட்டு சிங்கம் சிங்கிளா தான் வரும் என்று அதற்கு கேப்ஷன் கொடுத்திருக்கிறார்.
ஏற்கனவே குக் வித் கோமாளி 5வது சீசனில் இருந்து வெளியே வந்த செஃப் வெங்கடேஷ் பட் தான் புதியதாக வேறொரு நிகழ்ச்சியில் இணைந்திருப்பதாக கூறி இருக்கிறார். ஆனால் அது என்ன நிகழ்ச்சி என்பதை இப்ப வரைக்கும் தெளிவுபடுத்தாமல் இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சிக்கான டப்பிங் பணிகள் நடைபெற்று இருப்பதை ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கிறார்.

விஜய் டிவில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நான்கு சீசன்களாக நடுவராக இருந்து வந்த வெங்கடேஷ் பட் திடீரென்று அந்த நிகழ்ச்சியில் இருந்து தான் விலகி இருப்பதாக கூறியிருந்தார். வெங்கடேஷ் பட் விலகியதை தொடர்ந்து அந்த நிகழ்ச்சி இயக்குனர், தயாரிப்பாளர் என்று அடுத்தடுத்து வெளியேறி இருந்தனர். இந்த நிலையில் செஃப் தாமுவும் தன்னோடு வெளியே வந்துவிடுவார் என்று முதலில் சொல்லியிருந்த வெங்கடேஷ் பட் பிறகு அந்த வீடியோவை டெலிட் செய்திருந்தார்.
அதைத்தொடர்ந்து தாமுக்கு மறைமுகமாக அட்வைஸ் செய்கிற மாதிரி," நண்பனின் பேச்சு மாறலாம் ஆனால் நண்பனின் நட்பு என்றும் மாறாது" என்று ஒரு கேப்ஷன் கொடுத்து போஸ்ட் வெளியிட்டு இருந்தார். இப்படியான நிலையில் சில தினங்களுக்கு முன்பு வெங்கடேஷ் பட் "ஆரம்பிக்கலாமா..?" என்று ஒரு போஸ்ட் போட்டு இருந்தார். இதனால் இவர் புதிய நிகழ்ச்சியில் இணைந்து விட்டார் என்று ரசிகர்கள் புரிந்து கொண்டனர்.
அதே நேரத்தில் ஏற்கனவே தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுகிறேன் என்று அறிவிப்பை சொல்லும்போது தன்னை இன்னொரு புதிய பரிமாணத்தில் புதிய நிகழ்ச்சியில் பிரம்மாண்டமாக பார்க்கலாம் என்று குறிப்பிட்டு இருந்தார். இதனால் இவர் சன் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறாரா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். அதற்கு ஆமாம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலையுமே வெங்கடேஷ் பட் தெரிவிக்காமல் இருந்தார்.
இப்படியான நிலையில் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதியதாக ஒரு போஸ்ட் வெளியிட்டு இருக்கிறார். அதில், "சிங்கம் சிங்கிளாதான் வரும். நீங்க சொல்லிட்டீங்க நாங்க ஆரம்பிக்கிறோம்" என்று பதிவிட்டு இருக்கிறார். இதனால் இதுவும் புதிய சமையல் ஷோ தான் என்று தெரிகிறது.
அதே நேரத்தில் அந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோ சூட் ஏற்கனவே நடைபெற்று இருக்கிறது. அந்த புகைப்படத்தை தான் கடந்த போஸ்டில் வெங்கடேஷ் பட் வெளியிட்டு இருக்கிறார். இப்போது அந்த ப்ரோமோவிற்கு டப்பிங் பேசி இருக்கிறார். இந்த மாஸான வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெங்கடேஷ் பட் வெளியிட்ட சில மணி நேரங்களில் லைக்கள் குவிந்து வருகிறது.
அதே நேரத்தில் பலரும் அவரை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மிஸ் பண்ணுவதாக கூறி வருகிறார்கள். ஆனாலும் புதியதாக இணைந்திருக்கும் நிகழ்ச்சி என்ன என்பது பலரும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த சிறகடிக்க ஆசை ரோகிணி.. இனி ஆட்டம் ஆரம்பம்! என்ன கேரக்டர் தெரியுமா? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications