குக் வித் கோமாளி 5ல் என்னை பற்றி பேச மறந்துவிட்டார்கள்! உண்மை வெல்லும்.. வெங்கடேஷ் பட் பரபரப்பு
சென்னை: குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் "உங்களை மிஸ் செய்வதாக யாருமே சொல்லலையே" என நெட்டிசன் கேள்விக்கு உண்மை ஒரு நாள் வெல்லும் என செஃப் வெங்கடேஷ் பட் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி நேற்று தொடங்கிய நிலையில் வெங்கடேஷ் பட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் சில உருக்கமான தகவல்களை தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோவில் வெங்கடேஷ் பேசியிருப்பதாவது : ஹலோ எப்படி சொல்வது என தெரியவில்லை. என்னை மிஸ் செய்வதாக நீங்கள் அனுப்பும் மெசேஜ்களை படிக்கும் போது நான் ரொம்ப கொடுத்து வைத்தவனாக உணர்கிறேன். கடவுள் என்னை அதிகமாக ஆசீர்வதித்திருக்கிறார் என தோன்றுகிறது. நன்றி, என்றைக்குமே நான் உங்களை ஏமாற்ற மாட்டேன்.
உங்களை எங்கேயும் விட்டுக் கொடுக்க மாட்டேன். என் வாழ்க்கையின் நாடித் துடிப்பே ரசிகர்களாகிய நீங்கள்தான். இன்று முதல் காலையில் 8 மணிக்கு ஒரு சர்பிரைஸ் காத்துக்கிட்டு இருக்கிறது. சன் டிவி பாருங்கள்! உங்களுக்கே தெரியவரும். உங்கள் அனைவரின் அன்புக்கும் நன்றி என கூறியுள்ளார்.

இந்த வீடியோவில் ரசிகர்களின் கேள்விகளுக்கும் அவர் பதிலளித்துள்ளார். பியார் பிரியா என்பவர் சன்டிவியில் எந்த ஷோ, கல்யாண மாலைதான் டெலிகாஸ்ட் ஆகிட்டு இருக்கு என சிரித்த எமோஜியுடன் கேட்கிறார். அதற்கு வெங்கடேஷ் பட், "நடு நடுவுல ப்ரோமோ மாதிரி ஒரு டீசர் வரும்" என பதில் அளித்திருக்கிறார்.
வித்யா ஸ்ரீ என்ற ரசிகர், நேற்றைய தினம் (குக் வித் கோமாளி சீசன் 5) உங்களை மிகவும் எதிர்பார்த்தோம் சார். உங்களை பற்றி அவர்களாவது பேசியிருக்க வேண்டும். ஆனால் நடுவர்களான மாதம்பட்டியும் தாமுவும் கூட பேசவில்லை. இது எங்களுக்கு அதிருப்தியை கொடுத்துள்ளது என்றார்.

அதற்கு பட், பரவாயில்லை விடுங்கள். அவர்கள் பேச மறந்துவிட்டார்கள். அதனால்தான் என்னை பற்றி உலகமே பேசிக் கொண்டிருக்கிறது. அது போல் மாஸ் அஜித் வெறியர்கள் என்ற நெட்டிசன், உங்கள பத்தி mis பண்றோம்னு கூட ஒருத்தர் கூட நேத்து showla பேசல அப்படி என்ன sir மனுஷங்க. ஆயிரம் கருத்து வேறுபாடு இருக்கலாம் ஆனா நீங்க build பண்ண show la உங்கள miss பண்றோம்னு ஒருத்தர் கூட பேசல அதான் எனக்கு இதான் உலகம்னு தோணுது. May be உங்கள பத்தி பேச கூடாதுனு tv சேனல் சொல்லி இருக்கலாம். Fans நாங்க தான் ரொம்ப feel பண்றோம் என தெரிவித்துள்ளார்.

இதற்கு வெங்கடேஷ் பட், உண்மை ஒரு நாள் வெல்லும் என தெரிவித்துள்ளார். ஆக , ரசிகர்களுக்கு அனுப்பிய பதில்களை பார்த்தால் விஜய் டிவி நிர்வாகத்துடன் பட்டுக்கு ஏதோ கசப்பான அனுபவம் என்றே தெரிகிறது. அது என்ன என்பதுதான் வெளிப்படையாக தெரியவில்லை.
இதயம் தொட்ட சமையல் நிகழ்ச்சி மூலமும் பிரபலமடைந்தார். தனது யூடியூப் சேனலில் நிறைய எளிய சமையல் குறிப்புகளை கொடுத்து வருகிறார். கலந்த சாதம், சைட் டிஷ் உள்ளிட்டவைகளையும் செய்து காட்டுவார்.
இவர் அசைவ உணவை உண்ண மாட்டார். ஆனால் சமைப்பார், நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் சமைக்கும் அசைவ உணவை நுகர்ந்து பார்த்தே அதில் உள்ள நிறை குறைகளை சொல்லிவிடுவார். இவர் ஆசான் மெமோரியலில் கேட்டரிங் படித்தவர். பிறகு சிங்கப்பூரில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்திருந்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications