Chithi 2 Serial: சித்தி 2 வில்.. செல்லமே சீன்ஸ் கூட.. செகண்ட் ரிலீஸ் போல இருக்கே!
Recommended Video
சென்னை: சன் டிவியின் சித்தி 2 சீரியல் கடந்த இரு வாரங்களாக ஒளிபரப்பாகி வருது. சித்தி சீரியலின் டைட்டில் சாங்தான் சித்தி 2 சீரியலுக்கும் என்று முடிவு செய்து அதுதான் இப்போது ஒலிபரப்பாகி வருது. கண்ணின் மணி பாடல் எல்லாருக்குமே மலரும் சுக நினைவுகளை கிளறி விடுவதாக இருக்கிறது.
அப்போது குழந்தைப் பருவமாக இருந்தவர்கள், இந்த பாடலைக் கேட்டு ஏக்கப் பெருமூச்சு விடுகிறார்கள். இந்த பாடல் தங்களை பள்ளிக் கால நினைவுக்கு கொண்டு செல்வதாகப் பகிர்ந்துக்கொண்டு பெருமூச்சு விடுகிறார்கள்.
இப்படி பலருக்கும் அழியா நினைவுகளை தந்து இருக்கும் இந்த பாடல் மீண்டும் அந்த நினைவுகளை கிளறிவிட்டு, அவரவர்களை அந்ததந்த நினைவுகளின் சுகத்தில் ஆழ்த்தும்படி சித்தி 2 டைட்டில் சாங்காக ஒலிபரப்பாகி வருது.

இதே சீன் செல்லமே
சித்தி 2 சீரியலில் நேற்றைய தின ஒளிபரப்பு எபிசோடில் செல்லமே சீன் போலவே ஒரு காட்சி. இந்த காட்சியும் ஒரு சில எபிசோட்களிலேயே ஒளிபரப்பாகி உள்ளது என்றால், இதே போல ஒரு சில எபிசோட்களில்தான் செல்லமே சீரியலிலும் இந்த சூழ்நிலை, காட்சி ஒளிபரப்பாகியது. செல்லமே சீரியலில் அஷ்வின் நீலிமாவுக்கு முறைப் பையன். ஆனால், அஷ்வின் மகாலட்சுமியை காதலிப்பார். அவருடன் கல்யாண ஏற்பாடுகள் என்று ஆரம்பிக்கும்போது நீலிமா விஷம் சாப்பிட்டுவிடுவார்.

ஹாஸ்பிடலுக்கு போனால்
நீலிமாவைத் தூக்கிகிட்டு ஆஸ்பிடலுக்கு போனால், அப்போதுதான் தான் மாமாவை விரும்புவதாக கூறுவார். இதை முதலிலேயே சொல்லி இருக்கலாமே என்று அண்ணி ராதிகா கேட்க, எனக்கு மாமாதான் வேணுமென்று சொல்வவார் நீலிமா.அதே போலத்தான் இப்போது செவ்வந்தி அதே அஷ்வினை விரும்புகிறார். அத்தை பெண்... மாமாவுக்கு வேறு பெண் பார்க்கிறார்கள், அவர் அந்த பெண்ணைத்தான் லவ் பண்ணுகிறார் என்று தெரிந்ததும் செவ்வந்தி விஷம் சாப்பிட்டு விடுகிறார்.

ஹாஸ்பிடலில் மாமாதான்
அப்போது செவ்வந்தியிடமும் ராதிகா கேட்கறாங்க.. உனக்கு அன்பு மாமாதான் வேணும்னா சொல்லி இருக்கக் கூடாதா? எப்படியாவது உனக்கு நீ ஆசைப்பட்ட மாமனோடு கல்யாணம் செய்து வைக்கிறேன்னு ராதிகா வாக்கு கௌடுக்கறாங்க. இப்படி ராதிகாவின் சீரியல்களில் இருந்தே சூழ்நிலை, காட்சிகள் எடுத்து செகண்ட் ரிலீஸ் செய்தால் அவங்க சீரியலை ஓட்டி விடுவார்கள். பார்ப்பவர்களுக்கு ராதிகாவின் அனைத்து சீரியல்களை கலந்துக்காட்டி எடுக்கப்படும் சீரியலாக இருந்து விடுமே...

குடிகாரர்கள் திருந்தினால்
சித்தி 2 சீரியலில் நந்தினியின் அப்பா ரொம்ப குடிகாரறாம். வீட்டில் அண்ணன் இருக்க, பொண்ணு போயி டாஸ்மாக்கில் சரக்கு வாங்கிகிட்டு வருதாம். அந்த பொண்ணுதான் ராதிகாவின் பெண் வெண்பாவால், குடிகாரி என்று பேசப்பட்டு, கடைசியில் ராதிகாவும் சேர்ந்து சண்டை போடும்படி ஆகிவிடுகிறது. ராதிகா நந்தினியை கீழே பிடித்துத் தள்ள, கையில் உள் காயம் பட்டுவிடுகிறது. இதை பார்த்து குடிகார அப்பா திருந்தி விடுகிறாராம். சீரியலில் கொஞ்ச நஞ்சம் லாஜிக் பார்க்க கூடாதுன்னா தேவலை... சுத்தமா லாஜிக் பார்க்க கூடாதுன்னா எப்படிங்க?
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications