ரோபோ சங்கரை காலி செய்த கல்லீரல்.. மதுவை தொட்டதுக்கு இதுவே காரணம்.. விஷமான அலுமினிய பெயிண்ட்: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: குடியினால் கூடுதலாக கல்லீரல் பாதிக்கப்படுகிறது என்றாலும், கல்லீரல் பாதிப்பதானது மது குடிப்பவர்களுக்கு மட்டுமே வராது, சர்க்கரை நோயாளிக்கும் வரலாம், வைரஸ் நோயாளிகளுக்கும் வரலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். இதில், சமீபத்தில் உயிரிழந்த ரோபோ சங்கருக்கு கல்லீரல் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் தன்னுடைய கருத்தை பேட்டியொன்றில் கூறியிருக்கிறார்.

ரோபோ சங்கரின் மரண சம்பவமானது, தமிழக மக்களை நிலைகுலைய வைத்துவிட்டது.. மதுவை தொட்டுவிட்டு, அது இல்லாமல் இருக்க முடியாத நிலைக்கு வந்ததாக, பேட்டியொன்றில் ரோபோ சங்கரே கூறியிருந்தார்..

Robo Shankar

அதேபோல, மதுப்பழக்கத்திலிருந்து தான் மீண்டு வந்து ஆரோக்கியமாகவும், சந்தோஷமாகவும் இருப்பதாக ரோபோ சங்கர் சமீபத்திய பேட்டியில் கூறியிருந்தார்.. எனினும் 46 வயதிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

உள்ளுறுப்புகள் பாதிப்பு

ரோபோ சங்கரின் திடீர் மரணத்திற்கு காரணம் மெட்டாலிக் பெயிண்ட் பூசியதும் ஒரு காரணம் என்கிறார்கள்.. மேலும் சிலர், சேலம் பச்சிலை வைத்தியத்தை ரோபோ சங்கர் சாப்பிட்டு வந்ததாக கூறுகிறார்கள்.

மேலும் சிலர், மஞ்சள் காமாலையிலிருந்து மீண்டு வந்த நிலையில், மறுபடியும் மதுப்பழக்கத்துக்கு ரோபோ சங்கர் ஆளானதால்தான் உயிரிந்துவிட்டார் என்று சொல்கிறார்கள்.. இப்படி ரோபோவின் மரணம் பலவிதமான அதிர்வலைகளை தொடர்ந்து சோஷியல்மீடியாவில் ஏற்படுத்தி வருகிறது..

உடம்பெல்லாம் காரீய அமிலம்

இந்நிலையில், King 24x7 என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன், "ரோபோ சங்கர் தன்னை தானே அழித்து கொண்டார். மேடை நிகழ்ச்சிகளில் ரசாயன பூச்சை தன்னுடைய உடம்பெல்லாம் ரோபோ பூசிக் கொண்டார்..

இந்த பெயிண்ட்டானது, காரீயம் அமிலத்தால் செய்யப்படுகிற அலுமினிய கோட்டிங் ஆகும்.. இந்த பெயிண்டை உடலில் பூசிவிட்டால், வியர்வையின்போது, வியர்வை துளைகளில் உடலுக்குள் ஊடுருவிவிடும்.. இதை வெளியில் எடுக்கவும் முடியாது.. அதனால்தான் ஹாலிவுட்டில் இந்த பெயிண்டை தடை செய்துவிட்டார்கள். பம்பாய் பாலிவுட்டிலும் தடை செய்துவிட்டார்கள்.

வியர்வை துளிகளில் ஊடுருவி

அப்படி உடம்பெல்லாம் பூசப்படும் இந்த பெயிண்ட்டை அப்புறப்படுத்த விமானத்துக்கு போடப்படும் முதல் தரமான பெட்ரோல் மற்றும் ஒயிட் பெட்ரோலை ஊறவைத்துதான், அந்த பெயிண்ட்டை அப்புறப்படுத்த முடியும்..

இந்த பெயிண்ட்டை தொடர்ச்சியாக உடலில் பூசினால், வியர்வை துளிகளுக்குள் ஊடுருவி, ஊடுருவி, அந்த இடமே அழுக தொடங்கிவிடும்.. இது சிறுநீரகம், கல்லீரல், கணையத்தை பாதிப்பதுடன், வியர்வையை வெளியேற்றக்கூடிய பணியை செய்வதையும் இந்த ரசாயனம் நிறுத்திவிடும்..

அழுகிய கல்லீரல்

இதனால் உடலில் ஏற்படக்கூடிய ரசாயன மாற்றங்கள், உபாதைகளை மறப்பதற்கு மதுவை நாடினார் ரோபோ சங்கர். இதுதான் அவரது மரணத்துக்கான முழு காரணம். வேறு எந்த காரணமும் இல்லை.. கல்லீரல் அழுகி செயலிழந்துவிட்டது, வேறு கல்லீரலை பொருத்தினாலும் கடினம்தான்..

ரோபோ சங்கரை பலமுறை காப்பாற்றியவர் நக்கீரன் கோபால்.. மதுப்பழக்கத்தை குறைத்து கொள்ள வேண்டும், உடம்பை பார்த்து கொள்ள வேண்டும் என்று பலமுறை அக்கறையோடு நக்கீரன் கண்டித்துள்ளார்.

சுருளிராஜன், சந்திரபாபு, கண்ணதாசன்

"வடிவேலுவுக்கு இன்று சினிமாவில் மார்க்கெட் இல்லை, விவேக் இல்லை.. இன்று யோகிபாபுக்கு பிறகு சினிமாவில் நல்ல எதிர்காலம் உள்ளது, எனவே உடம்பை கவனித்து கொள்ள வேண்டும்" என்று நக்கீரன் கோபால் அறிவுறுத்தியிருக்கிறார்.

கண்ணதாசன், சுருளிராஜன், சந்திரபாபு மதுவால் இறந்தவர்கள்தான்.. பிரபலமான நடிகர்களின் மரணங்களுக்கு காரணமும் மதுவாகவே உள்ளது.. மறுபக்கம் இல்லாத நபர்களைகூட பார்த்துவிடலாம்.. ஆனால், திரைத்துறையில் மதுப்பழக்கம் இல்லாதவர்கள் மிகவும் குறைவு.. எம்ஜிஆர், சிவகுமார், டி.ராஜேந்தர் போன்று ஒருசிலரே இதற்கு விதிவிலக்கானவர்கள்.. நடிப்புலகத்துக்கே இலக்கணமாக திகழ்ந்தவரும் மதுவால் உயிரிழந்தவர்தான்" என்றெல்லாம் கூறி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+