மதுரை பையனை காதலிக்க தேடும் சென்னை பொண்ணு.. அப்ளை செய்வோருக்கு "ஆஹா" ஆச்சரிய பரிசு காத்திருக்கிறதாம்
சென்னை: சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்கள், மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அத்துடன் குழப்பத்தையும், சந்தேகத்தையும் எழுப்பி வருகிறது. இந்த போஸ்டர்கள்தான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கின்றன.
சோஷியல் மீடியாவில் எத்தனையோ செய்திகள், நிகழ்வுகள் வைரலாகின்றன.. சிலசமயம், சுவர்களில் ஒட்டப்படும் போஸ்டர்கள்கூட வைரலாகிவிடுகின்றன.. போஸ்டர்கள் என்றாலே அரசியல் சம்பந்தப்பட்டது என்ற சம்பிரதாயம் உடைந்து, அனைத்து நிகழ்வுகளுக்குமே இப்போது போஸ்டர்கள் ஒட்ட துவங்கிவிட்டார்கள்.

போஸ்டர்கள்: தங்கள் குடும்ப நிகழ்வுகள் முதல் பொது சம்பவம் வரை போஸ்டர்கள் மூலமே பொதுமக்கள் வெளிப்படுத்தியும் வருகிறார்கள்.. இதில் சில போஸ்டர்கள் நகைச்சுவையாக இருக்கும்.. சில போஸ்டர்கள் சீரியஸ் விஷயமாகவும் இருக்கும். சில போஸ்டர்கள் உருக்கத்துடன் இருக்கும்.
இப்படித்தான், புதுக்கோட்டை ஆலங்குடியில் சில மாதங்களுக்கு முன்பு ஒரு கிண்டல் சம்பவம் நடந்தது.. அங்குள்ள குடியிருப்பு பகுதிகளில் பிஎஸ்என்எல் வயர்களை யாரோ அடிக்கடி திருடிவிடுகிறார்களாம்.. பைபர் வயர், மின் சாதனங்கள் என ஒவ்வொன்றாக திருடு போய் கொண்டேயிருந்தது.
மர்மதிருடன்: இதனால், அதிர்ச்சி அடைந்த பிஎஸ்என்எல் ஒப்பந்ததாரர்கள், தொடர்ந்து திருட்டு நடத்தி வரும் மர்மதிருடனுக்கு வாழ்த்து தெரிவித்து போஸ்டர்களை ஒட்டிவிட்டார்கள்.. அந்த போஸ்டரில், "வாழ்த்துகிறோம்... இன்டர்நெட் கேபிள் திருடா! ஆலங்குடிக்கு டஃப் கொடுக்கும் எங்கள் ஆருயிர் திருடனே!. சிசிடிவிக்கே தண்ணி காட்டும் எங்கள் திருடர் குல திலகமே! என்றெல்லாம் வாசகங்களை பொறித்திருந்தார்கள்.
அதேபோல, மதுரை மாநகர் காளவாசல் பகுதியை சேர்ந்த 24 வயது கார்த்திகேயன் என்பவர், தன்னுடைய அம்மா வீட்டு வேலை செய்து வாங்கி தந்த பைக்கை காணவில்லை என்று, பைக்கின் போட்டோவுடன் கூடிய போஸ்டர் அச்சடித்து மதுரையில் எல்லா பக்கங்களிலும் ஒட்டியிருந்தார். தன்னுடைய தாயின் நினைவாக இருந்த பைக்கை கண்டுபிடித்து தருவோருக்கு ரூ.10 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என்றும் உருக்கமாக அறிவித்திருக்கிறார்.
சென்னை போஸ்டர்: இப்படி பல்வேறு போஸ்டர்கள் மக்களை ஈர்த்து வரும்நிலையில், சென்னையில் இன்று பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.. ஆனால், இது எந்தவகையான போஸ்டர் என்றே தெரியவில்லை.
"சென்னை பெண்ணுக்கு காதலிக்க மதுரை பையன் தேவை.. அப்ளை செய்தால், ஆஹாவென்று ஆச்சரியப்படுத்தும் பரிசு காத்திருக்கிறது" என்று அந்த போஸ்டரில் வசனம் இடம் பெற்றுள்ளது... இந்த போஸ்டர் எதைப்பற்றி என்று தெரியவில்லை.. என்னவாக இருக்கும்? என்றும் தெரியவில்லை.. காதலர் தினம் நெருங்கி வரும்நிலையில், சென்னை மற்றும் மதுரை சுற்றுவட்டாரங்களில், சென்னை பொண்ணுக்கு காதலிக்க மதுரை பையன் வேண்டும் என்று போஸ்டரை பார்த்து பொதுமக்கள் குழம்பி போயிருக்கிறார்கள்.
சினிமா டயலாக்?: ஒருசிலர், இது ஏதாவது ஒரு சினிமாவின் வசனமாக இருக்கலாம் என்கிறார்கள்.. மேலும் சிலர், வருத்தப்படாத வாலிபர் சங்கம் போல, யாராவது இளைஞர்கள் சேர்ந்து இப்படி ஒட்டியிருக்கலாம் என்கிறார்கள்.. எனினும், சென்னை பொண்ணுக்கு மதுரை பையன் கிடைப்பாரா ? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
வேளச்சேரி ஷாக்.. பாட்டியுடன் சென்ற 4 வயது குழந்தை பட்டப்பகலில் காரில் கடத்தல்.. இறுதியில் ட்விஸ்ட்! -
நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்! -
கோட்டைக்கு வரும் புது மாப்பிள்ளை.. மணமகன் தேடும் இளம் பெண் அமைச்சர்.. ஜோதிடர்களுடன் தீவிர ஆலோசனை! -
“தற்போதைய மின் தடைக்கு கடந்த ஆட்சியே காரணம்”.. அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்! -
'அமரன்' மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு பெருமை சேர்த்த சென்னை! பிரதான சாலைக்கு பெயர் சூட்டி அதிரடி! -
3 லட்சம் சதுரடி! வருது 13 மினி மால்.. சென்னை மெட்ரோ 2ம் கட்ட ஸ்டேஷன்களில் சுவாரசியம்! தரமான பிளானிங் -
1 BHK வீடு கட்டும் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம்.. இப்போ புத்தம் புதுசா மாறப்போகுது! -
தமிழ்நாடு சைடில் நிலம் கிடைப்பதில் சிக்கல்.. பெங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ்வே திட்டம் தாமதம்.. போச்சு -
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
சென்னையில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து.. தாம்பரம் அருகே பரபரப்பு












Click it and Unblock the Notifications