ரூ.1000 கோடி.. நடிகரின் பண்ணை வீட்டு உல்லாசம்.. ஆவின் பால் பாக்கெட்டை கடித்து ஊற்றிய சசிகலா: பிரபலம்
சென்னை: கடலோர பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், பல்வேறு சமூகப் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (CISF) வீரர்கள் கொல்கத்தாவிலிருந்து கன்னியாகுமரி வரை நாடு தழுவிய சைக்கிள் பேரணி நடத்துகிறார்கள்.. அவர்கள் உங்க ஏரியா வரும்போது வரவேற்று, முடிந்தால் அவர்களுடன் கொஞ்சம் தூரம் சென்று உற்சாகப்படுத்துங்கள்" என்று நடிகர் ரஜினிகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார்.
BBT cinema என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள தமிழா தமிழா பாண்டியன், "ரஜினி தமிழ்நாட்டின் சாபக்கேடு.. பொதுநலமே 1 சதவீதம்கூட இல்லாத நபர் ரஜினிகாந்த்.. வெளியாகும் கூலி படத்தை 1000 கோடி ரூபாய்க்கு முதலீடாக்க வேண்டும் என்பதுதான் தற்போது ரஜினிக்கு தரப்பட்டுள்ள அசைன்மென்ட்.

இளம் வயது ஹீரோயின்கள்
நடிகை மீனா மகளாகவும், கதாநாயகியாகவும் நடித்தார். மீனாவின் மகள் வயதுடையவர்களுடனும் ஹீரோவாக நடித்து கொண்டிருக்கிறார். 300, 400 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார். ஆனால், திரைப்பட துறையில் சராசரியாக ஒப்பந்த தொழிலாளர்கள் மட்டும் 10,000 பேர் இருப்பார்கள். இந்த பணியாளர்களின் குடும்பத்துக்கு ஏதாவது இலவச பள்ளிகள் உள்ளதா? இலவச மருத்துவமனை உள்ளதா?
சாதாரண ஃபேக்டரி வைத்திருப்போர்களே இலவச மருத்துவமனை, கல்வி தருகிறார்கள். இஎஸ்ஐ, பிஃஎப், போனஸ் தருகிறார்கள்.. நடிகர் சங்க கட்டித்தில் அங்கே பேய் நடமாடுகிறது.. என்னதான் ரஜினி செய்தார் தமிழ்நாட்டுக்கு? எங்கே பார்த்தாலும் இவங்க சொத்தாகவே இருக்கிறது. அரசு நிலத்தில் வரி கட்டாத, ஆசிரமம் பள்ளிக்கூடத்தில், 1 அட்மிஷன் சீட்டுக்கு 1 லட்சம் வாங்குகிறார்கள். அங்கு சீட் வாங்குவதற்கு மார்வாடிகள் பணத்தை கொட்டுகிறார்கள்.
அரசு நிலத்தில் கட்டிடங்கள்
அரசு நிலத்தை ஒருவர் ஏமாற்றி விற்றதை, பலகோடி ரூபாய்க்கு வாங்கி, அதில், ராகவேந்திரா கல்யாண மண்டபம் கட்டி, அது கோர்ட் வரை சென்றது. பிறகு அதனை டிரஸ்ட்டாக்கிவிட்டார்.. அந்த டிரஸ்டில் இப்போது யார் யார் இருக்கிறார்கள்? தமிழ்நாட்டுக்காக காவிரி வாழ்வாதார பிரச்சனைக்கு உண்ணாவிரதம் இருந்தால், கர்நாடகா பக்கம் வரக்கூடாது என்று வாட்டாள் நாகராஜ் சொன்னதை இன்றுவரை கடைப்பிடிப்பவர் ரஜினி.. இவருடைய அடையாளம் கன்னடம்.
ஆனால், ரஜினி படத்துக்கு டிக்கெட் கிடைக்காவிட்டால், உடனே தற்கொலை செய்து கொள்கிறார்கள். இதுபோன்ற ரசிகர்களை வைத்து கூலி படத்தை 1000 கோடிக்கு விற்க போகிறார்.
தீவிரவாதிகள் நடமாட்டம்
வீரர்களை உற்சாகப்படுத்த எங்களுக்கு தெரியும்.. கடலோரத்தில் தீவிரவாதிகள் வரப்போகிறார்கள் என்றாரே, எங்கிருந்து வரப்போகிறார்கள்? எத்தனை மணிக்கு வரப்போகிறார்கள்? இது ரஜினிக்கு எப்படி தெரிந்தது, இதை உளவுத்துறைதான் விசாரிக்கணும்.
சினிமா தொழிலாளர்களுக்காக ரஜினி என்னதான் செய்திருக்கிறார். ஆனால் எம்ஜிஆர், காதுகேளாதோருக்கு பள்ளி, கண் பார்வையற்றோர் பள்ளி, ஊனமுற்றோர் பள்ளி என அத்தனை இருக்கிறதே? ரஜினியின் இலவச பள்ளி எங்கே?
சென்னை வெள்ளம்
கொரோனா நேரததில் எத்தனை பேருக்கு மருத்துவ உதவி செய்தார்? சென்னையில் வெள்ளம் வந்தபோது எத்தனை கோடி தந்தார்? லிஸ்ட் எங்கே? பல்லாயிரம் கோடி குடும்பத்துக்கு சேர்த்து வைத்துக் கொண்டு, திரைப்பட தொழிலாளர்களுக்கு எதுவுமே செய்யவில்லை.
கேளம்பாக்கத்தில் உள்ள ரஜினியின் பண்ணை வீட்டுக்கு செல்பவர்களை எத்தனை மாதம் கழித்து வெளியே அனுப்புகிறார்கள்? அங்கு நடக்கும் ஆட்டம், பாட்டம், மேட்டுக்குடி சீரழிவு கலாச்சாரத்தை வெளியே சொல்லிவிடக்கூடாது என்பதற்காக 6 மாதம் கழித்துதான் அனுப்புவார்கள். அவர்களுக்கும் வீடு, குழந்தை, குடும்பம் இருக்காதா? இதை பற்றி 500 பக்கம் எழுதலாம்.
பணம் உன்னை சேராது
பணம் மட்டுமே வாழ்க்கையில்லை.. பல கோடி ரூபாய் சொத்தை சேர்த்து, 25 வருடம் தமிழ்நாட்டையே தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஜெயலலிதாவுக்கு பால் ஊற்ற ஆள் இல்லை.. ஆவின் பால் பாக்கெட்டை பல்லால் கடித்து, பிளீச்சென சசிகலா ஊற்றியதுதான் நடந்தது.
ரஜினி சொல்லிதான் நம்முடைய மக்கள், சிஐஎஸ்பி வீரர்களை உற்சாகப்படுத்தப்போகிறார்களா? நம் மக்கள் இந்திய ராணுவ வீரர்களுக்கு என்றுமே தானாக முன்வந்து மதிப்பளிக்கக்கூடியவர்கள்.. சிஐஎஸ்பி வீரர்களுக்கு பேசுவதெல்லாம் நடிப்பு, நாடகம், ஏமாற்றுதானே தவிர, உண்மை 1 சதவீதம்கூட இல்லை.. எனவே ரஜினி, திரைப்பட தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இலவச பள்ளிக்கூடம் கட்டணும், மருத்துவமனை கட்ட முன்வரவேண்டும்" என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications