இன்ஷியல் நடிகைக்கு CM சான்ஸ்? ராமாவரம் தோட்டத்தில் ஹீரோயின்ஸ் டிஸ்கஷன்.. தப்பித்த தமிழகம்: பிரபலம்
மதுரை: புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மறைந்தபோது, தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் யார் என்பது குறித்த விவாதம், அவருடன் நடித்த நடிகைகளிடையே ஏற்பட்டதாக மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். அத்துடன், எந்தெந்த நடிகைகளுக்கு இப்படியான வாய்ப்பு வந்தது? என்பது குறித்தும் விலாவரியாக கூறியிருக்கிறார் பத்திரிகையாளர் பாண்டியன்.
Seithi Malar என்ற சேனலுக்கு சமீபத்தில் பேட்டி ஒன்றை தந்திருந்தார் மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன்.. அதில், "எம்ஜிஆர் இறந்துவிட்டார்.. உடனே ஆர்எம் வீரப்பன் , அவசர அவசரமாக எல்லாரிடமும் கையெழுத்து வாங்கிக் கொண்டு, கவர்னரிடம் செல்ல முயன்றார்.

யார் முதலமைச்சர்
தன்னை முதலமைச்சராக அறிவிக்க வேண்டும் என்பதற்காக இப்படி திட்டமிட்டார்.. எம்ஜிஆரின் கணக்குப்பிள்ளை என்பதை தாண்டி வேறு ஏதாவது வரலாறு ஆர்.எம். வீரப்பனுக்கு உண்டா? கார்கில் போருக்கு போனாரா? சுதந்திர போராட்ட தியாகியா?
அந்த நேரத்தில் நடிகை கேஆர் விஜயா ஆர்எம் வீரப்பனுக்கு போனை போட்டு, "அக்கா (ஜானகி அம்மாள்) உங்களை ராமாவரம் தோட்டத்துக்கு வர சொல்கிறார்" என்று அழைத்துள்ளார்.. பிறகு லதா, மஞ்சுளா, கேஆர் விஜயா, உள்ளிட்டோர் ஜானகி அம்மாவிடம், ஆர்எம் வீரப்பன் தமிழகத்தின் முதல்வராக வருவதைவிட, நீங்களே முதல்வராக நில்லுங்கள் என்று சொல்லி உள்ளனர்..
கேஆர் விஜயாவுக்கு வந்த வாய்ப்பு
உடனே ஜானகி அம்மாள் அதற்கு மறுத்து, என்னால் முதலமைச்சராக ஆக முடியாது, நீயே முதலமைச்சராகிவிடு என்று கேஆர் விஜயாவை பார்த்து சொன்னார்.. இதைக்கேட்டு பதறிய கேஆர் விஜயா, என்னால் முதலமைச்சராக இருக்க முடியாது என்றார்.. பிறகு மஞ்சுளாவிடம் "நீயே முதல்வராக பொறுப்பேற்றுக் கொள்" என்று சொல்லவும் மஞ்சுளாவும் அந்த வாய்ப்பை தவிர்த்து லதாவிடம் அந்த வாய்ப்பை ஏற்குமாறு சொல்கிறார்.
இப்படியே தோட்டத்தில் ஒருவருக்கொருவர் விவாதம் நடந்து, கடைசியில் "அக்கா நீங்களே முதல்வராக நில்லுங்கள்" அனைத்து நடிகைகளும் சேர்ந்து ஜானகியம்மாளிடம் சொன்னார்கள். அத்துடன் ஆர்எம் வீரப்பனை அழைத்து, "அக்காதான் முதலமைச்சர்" என்று அறிவித்தனர்.. இப்படி மயிரிழையில் அன்று தப்பியது தமிழ்நாடு.. கடைசியில் ஜானகி அம்மாள், ஜெயலலிதாவை முதல்வராக ஏற்றார்..
ஜீவா, காமராஜர், கக்கன்
ஆனால், கக்கன், ஜீவா, காமராஜர், பெரியார் இவர்கள் இல்லாத ஜெயிலே கிடையாது.. அடக்க முடியாத கைதிகளை கர்நாடகாவில் குல்பர்கா சிறையில் தான் அப்போது அடைப்பார்கள். காரணம், அங்குள்ள சுவர்கள் சுண்ணாம்பு கல்லினால் கட்டப்பட்டிருக்கும்.. அங்குதான் பெரியாரை அடைத்தார்கள்.. உம்பெல்லாம் அவருக்கு புண் வந்துவிட்டது.. உங்கள் நண்பரை கர்நாடக சிறையில் அடைத்துள்ளீர்களே? என்று ராஜாஜியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, "அவர் அங்கு குளுகுளுன்னு இருக்கட்டுமே என்றுதான் அந்த சிறையில் வைத்திருக்கிறேன்" என்றாராம் ராஜாஜி.. இப்படி சமரசமே செய்து கொள்ளாத பல தலைவர்கள் கட்சி தலைவர்கள் அன்று இருந்துள்ளனர்" என்றார் பாண்டியன்.
மீண்டும் கே ஆர் விஜயா சான்ஸ்
அதேபோல, Globe 360 என்ற யூடியூப் சேனலுக்கு தமிழா தமிழா பாண்டியன் அளித்திருந்த பேட்டியிலும், கேஆர் விஜயாவுக்கு வந்த முதலமைச்சர் சான்ஸ்" குறித்து கூறியிருந்தார்..
அதில், "எம்ஜிஆர் மரணமடைந்தபோது, ராமாவரம் தோட்டத்தில் அவருடன் நடித்த கதாநாயகிகள் அனைவரும் ஒன்றுகூடினார்கள்.. கேஆர் விஜயா, மஞ்சுளா, லதா, எல்லாரும் ஜானகி அம்மாவுடன் ஒன்று திரண்டார்கள்.. அப்போது யார் அடுத்த முதலமைச்சர் என்ற போட்டி எழுந்தது.. ஜெயலலிதா ஜானகியை எதிர்த்ததால், எம்ஜிஆருடன் அதிக படம் நடித்தவர் என்ற முறையில் அடுத்த ஆப்ஷனாக கேஆர் விஜயாவை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கலாமா? என்ற பேச்சு எழுந்தது.
ஆனால், தனக்கு முதலமைச்சர் பதவி வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம் கேஆர் விஜயா. முதலமைச்சராக பதவியேற்றால், அது தனக்கு பலவிதமான விமர்சனங்களை தந்துவிடும்.. தன்னை பற்றி கிசுகிசுக்கள் எழுதுவார்கள் என்றெல்லாம் சொல்லி, முதலமைச்சர் பதவி வேண்டாம் என்று கேஆர் விஜயா மறுத்து விட்டார்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications