Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அப்போ ஹீரோயினியிடம் இரவல் டிரஸ் வாங்கி போட்டு நடிச்ச நடிகை! இப்போ விஜய் சேதுபதிக்கு ஜோடி, யாருன்னு தெரியுதா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சில நடிகைகளின் குழந்தை பருவ புகைப்படங்கள் பலருக்கும் இப்போது வியப்பை ஏற்படுத்தும். அதுபோலத்தான் நடிகை ஒருவருடைய குழந்தை பருவ புகைப்படம் வைரலாகி வருகிறது. அந்த நடிகை விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல் ஒன்றில் துணை நடிகையாக நடித்திருந்தார். பிறகு விஜய் சேதுபதிக்கு ஜோடியாகவும் நடித்திருக்கிறார். அதுபோல பிக் பாஸ் பிரபலமாகவும் இருக்கிறார். அந்த நடிகை தன்னுடைய தம்பியோடு எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் யார் அவர் என்று விரிவாக பார்க்கலாம்.

பொதுவாக ஒரு சில நடிகர்கள் அறிமுகமாகும் திரைப்படங்களில் தன்னுடைய கேரக்டர், அல்லது அந்த திரைப்பட பெயரை தன்னுடைய பெயராக மாற்றி இருக்கிறார்கள். அது சினிமாவில் மட்டுமல்ல சீரியலிலும் நடந்திருக்கிறது. சினிமாவில் நிழல்கள் திரைப்படத்தின் மூலமாக அறிமுக பிரபலமான ரவி தன்னுடைய பெயரை நிழல்கள் ரவி என்று மாற்றி வைத்திருக்கிறார். அதுபோல ரவி மோகன் கூட ஜெயம் என்ற படத்தில் அறிமுகமாகும் போது அவருக்கு கிடைத்த பிரபலத்தால் ஜெயம் ரவி என்று பெயரை வைத்திருந்தார். கடந்த வருடத்தில் தான் அவர் பெயர் மாற்றம் செய்திருக்கிறார்.

Myna Nandhini Vijay TV

ஆரம்ப காலம்

அந்த வரிசையில் தான் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மைனா கேரக்டரில் நடித்த நடிகை நந்தினி தன்னுடைய பெயரை "மைனா நந்தினி" என்று மாற்றியிருந்தார். இவரின் சொந்த ஊர் மதுரை தான். மதுரையிலிருந்து எப்படியாவது நடிக்க வேண்டும் என்று சென்னைக்கு வந்தபோது இவருக்கு வாய்ப்பு ஒன்றும் எளிமையாக கிடைத்துவிடவில்லை. சின்ன சின்ன கேரக்டரில் நடித்திருந்தார்.

சரவணன் மீனாட்சி சீரியல் நடிகை

ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருந்தாலும் அவருக்கு சரவணன் மீனாட்சி சீரியல் தான் நல்ல அறிமுகத்தை கொடுத்தது. அந்த சிரியலில் மைனா கேரக்டரில் நடித்ததால் தன்னுடைய பெயரை மைனா நந்தினி என்றே மாற்றி வைத்திருக்கிறார். ஆரம்பத்தில் சீரியலில் நடிக்கும் போது அதற்கான உடைகள் கூட நந்தினி இடம் கிடையாதாம். அப்போது அந்த சீரியலில் கதாநாயகியாக நடித்த ரக்ஷிதா மகாலட்சுமி தான் தன்னுடைய பாவாடை தாவணியை கொடுத்து நடிக்க வைத்ததாக பல இடங்களில் மைனா நந்தினி பேசியிருக்கிறார்.

விஜய் சேதுபதியின் மனைவி

தனக்காக புதிய உடைகளையும் ரக்ஷிதா வாங்கி தந்திருக்கிறார், எப்படி மேக்கப் போட வேண்டும் என்று கூட எனக்கு சொல்லித் தந்தார். அவர் தான் எனக்கு ஒரு தோழியாக மட்டுமல்லாமல் வழிகாட்டியாகவும் இருந்தார் என்று பல இடங்களில் நந்தினி பேசியிருந்தார். அதற்கு பிறகு ஒரு சில சீரியல்களில் நடித்துக் கொண்டு வந்த மைனா நந்தினிக்கு இப்போது திரைப்படங்களிலும், வெப் சீரிஸிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதுவும் விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மனைவியாக மைனா நந்தினி நடித்திருந்தார்.

Myna Nandhini Vijay TV

விமர்சனங்கள்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏழாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். அதே சீசனில் ரச்சிதா மகாலட்சுமியும் கலந்து கொண்டார் அப்போது மைனா நந்தினி ரச்சிதாவிடம் அதிகமாக பேசிக்கொள்ளவில்லை. அதற்கு என்ன காரணம் என்று இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்பட்டது. ஆரம்பத்தில் ரச்சிதாவை பற்றி அவ்வளவு பெருமையாக பேசிய மைனா நிகழ்ச்சியில் ஒன்றாக இருக்கும்போது ஏன் கண்டுகொள்ளாமல் போகிறார் என்று கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் சில வாரங்கள் கழித்து மைனாவே ஒரு இடத்தில் பேசி இருந்தார்.

முதல் கணவர்

அதாவது சரவணன் மீனாட்சி சீரியல் முடிந்து தன்னுடைய முதல் திருமணத்திற்கு பிறகு நான் கஷ்டப்பட்ட நேரத்தில் ரச்சிதா என்னுடைய சூழ்நிலையை அறிந்து என்னிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவர் ஆறுதல் தேவைப்படும்போது எனக்கு ஆறுதல் கொடுக்கவில்லை என்று வருத்தத்தை தெரிவித்து இருந்தார். மைனா நந்தினியின் குடும்ப வாழ்க்கையிலும் பல பிரச்சனைகள் இருந்தது. அவர் காதலித்து திருமணம் செய்த முதல் கணவர் சில மாதங்களில் தற்கொலை செய்து கொண்டார்.

Myna Nandhini Vijay TV

இரண்டாவது திருமணம்

பிறகு சீரியல் நடிகர் யோகேஸ்வரனை காதலித்து திருமணம் செய்திருந்தார். இப்போது இந்த தம்பதிக்கு ஒரு ஆண் மகன் இருக்கிறார். மைனா நந்தினி தொடர்ந்து சினிமா மற்றும் வெப் சீரிஸில் கலந்து கொள்வதற்கு யோகேஷ் உறுதுணையாக இருக்கிறார் என்று தன்னுடைய கணவர் குறித்து மைனா நந்தினி பெருமையாக பேசி இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+