மகளிர் தினத்தில் வைரமுத்து வெளியிட்ட பதிவு... கவிதை நடையிலேயே பதிலடி கொடுத்த சின்மயி

மகளிர் தினத்திற்கு பெண்களை குறித்து வைரமுத்து பதிவு வெளியிட்டதை குறித்து சின்மயி பதில் கொடுத்திருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: மகளிர் தினத்தன்று பாடகர் வைரமுத்து தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பெண்களை குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

இந்த நிலையில் வைரமுத்துவின் பதிவிற்கு எதிர்ப்பதிவு கொடுக்கும் வகையில் பாடகி சின்மயி பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

ஏற்கனவே வைரமுத்து மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்திய சின்மயி தற்போது வெளியிட்டிருக்கும் பதிவு சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.

பின்னணிப் பாடகி

பின்னணிப் பாடகி

பாடலாசிரியர் வைரமுத்து மகளிர் தினத்தன்று தன்னுடைய வலைதள பக்கத்தில் பெண்களின் அருமையை குறித்து கவிதை நடையில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதை குறித்து கேலி செய்யும் வகையில் சின்மயி போட்ட பதிவு வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவின் பிரபலமான பின்னணி பாடகியாக இருப்பவர்தான் சின்மயி. இவர் ஏ ஆர் ரகுமானின் இசையில் கன்னத்தில் முத்தமிட்டாய் படத்தில் இடம்பெற்ற ஒரு தெய்வம் தந்த பூவே என்ற பாடலின் மூலமாக பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார். இவருடைய குரல் பலருடைய மனக்கவலையை மறக்க வைக்கும் வகையில் இதமாக வருடும் வகையில் இருக்கிறது என்று பலரும் இவரை பாராட்டி வருகின்றனர். இவர் பாடிய பல்வேறு பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது.

பாலியல் குற்றச்சாட்டு

பாலியல் குற்றச்சாட்டு

இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி இருந்தார். அது தமிழகத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது. சின்மயி மற்றும் வைரமுத்துவிற்கு இடையே ஏற்பட்ட போர் காரணமாக சின்மயிக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியது. மேலும் இது மீடு விவகாரம் குறித்து பலரும் கருத்து தெரிவித்து இருந்தார்கள்.

தொடரும் கருத்து மோதல்கள்

தொடரும் கருத்து மோதல்கள்

அது மட்டுமல்லாமல் அதைத்தொடர்ந்து வைரமுத்து யாருடைய படங்களில் ஒப்பந்தமானாலும் ஏன் இந்த மாதிரி ஆளுக்கு எல்லாம் வாய்ப்பு தருகிறீர்கள். இவரை எல்லாம் படத்தில் வைக்காதீர்கள் என்று சின்மயி அடிக்கடி விமர்சித்து ட்வீட் போட்டு வருகிறார். அது மட்டுமல்லாமல் நடிகைகள் யாரேனும் வைரமுத்துவை சந்தித்தால் அவர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்து வருகிறார். அது மட்டும் அல்லாமல் இந்த பிரச்சினைக்கு பிறகு சின்மயி பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார். பெண் அடிமைத்தனம் பெண்கள் சுதந்திரம் போன்ற பெண்கள் தொடர்பான விஷயங்களுக்கு கருத்து தெரிவித்து வருகிறார்.

வைரமுத்துவின் பதிவு

வைரமுத்துவின் பதிவு

வருடங்கள் பல ஆனாலும் வைரமுத்து பற்றி சமூக வலைதளத்தில் தொடர்ந்து சின்மயி விமர்சனம் செய்து வருகிறார். இந்த நிலையில்தான் நேற்று மகளிர் தினத்தை முன்னிட்டு பாடல் ஆசிரியர் வைரமுத்து தன்னுடைய twitter பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றே போட்டு இருந்தார். அதில் மாலையும் நகையும் கேட்கவில்லை பெண்; மதித்தால் கேட்கிறாள், வீடும் வாசலும் விரும்பவில்லை பெண்; கல்வி கேட்கிறாள், ஆடம்பரம் அங்கீகாரம் ஆசைப்படவில்லை பெண்; நம்பிக்கை கேட்கிறாள், கொடுத்துப் பாருங்கள் அவளே பாதுகாப்பாள் ஆண்களையும்.... உலக மகளிர் தின வாழ்த்து என்று குறிப்பிட்டு இருந்தார்.

சின்மயியின் எதிர்ப்பதிவு

சின்மயியின் எதிர்ப்பதிவு

இதற்கு பதில் சொல்லும் வகையில் வைரமுத்துவின் பதிவை விமர்சித்து சின்மயி அவ்வீட்டு வாசலை தாண்டும் போது காம வெறியர்களை கேட்கவில்லை பெண்; பாதுகாப்பு கேட்கிறாள், பாலியல் குற்றவாளிகளை அடையாளம் காட்டும் போது அவதூறு கேட்கவில்லை பெண்; நியாயம் கேட்கிறாள், பெண் விடுதலை மற்றும் பாதுகாப்பு பற்றி எல்லாம் இவர் பேசுவதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்று குறிப்பிட்டு இருக்கிறார். இது குறித்து சமூக வலைத்தளத்தில் அதிகமான கருத்துக்கள் குவிந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+