நான் பரமக்குடி பொண்ணு.. சுத்த தமிழச்சி, அதுதான் திமிர் ஜாஸ்தி.. கெத்தா பேசிய சின்மயி.. கடைசியில் சொன்ன வார்த்தை
சென்னை: பாடகி சின்மயி நடிகர் கமல்ஹாசன் நடித்த "தக் லைஃப்" திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பாடிய "முத்தமழை" பாடல் ட்ரெண்ட் ஆனதை தொடர்ந்து சின்மயி பேசிய இன்னொரு பேட்டியும் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது. அதில், "தன்னுடைய சொந்த ஊர் பரமக்குடி தான். நான் சுத்தமான தமிழச்சி. அதனால் தான் திமிரா பேசுறேன்" என்று சிரித்தபடியே சின்மயி பேசி இருக்கிறார்.
பாடகி சின்மயி பற்றிய பேச்சு தான் இணையத்தில் அதிகமாக இருக்கிறது. ஓவர் நைட்டில் ஒபாமா ஆன மாதிரி என்று சிலர் சொல்வார்களே அதுபோலத்தான் இப்போது சின்மயியின் நிலைமையும் மாறி இருக்கிறது. சின்மயி பாடுவதற்கும் டப்பிங் பேசுவதற்கும் சில வருடங்களுக்கு முன்பு தடை விதிக்கப்பட்டது. அப்போது அவர் கொடுத்த புகார் காரணமாக அவர் மீது பழிவாங்கும் படலம் நடந்ததாக சின்மயி பல குற்றச்சாட்டுகளை கொடுத்திருக்கிறார்.

சின்மயி பாடிய பாடல்
சின்மயி பாடகியாக மட்டுமல்லாமல் தொகுப்பாளினியாகவும், டப்பிங் ஆர்டிஸ்ட் என்று பல திறமைகளை கொண்ட சின்மயியால் சில வருடங்களாகவே எந்த வேலையும் செய்யாமல் முடக்கப்பட்டு இருந்தார். ஆனாலும் இப்போது அவர் பாடிய முத்தமழை பாடல் தான் சோசியல் மீடியா முழுவதும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. அதுபோல சோசியல் மீடியாவில் பயங்கர ஆக்டிவாக இருக்கும் சின்மயி சமூக வலைத்தளத்தில் பரபரப்பாக பேசப்படும் பல விஷயங்கள் குறித்து தன்னுடைய கருத்தை தெரிவித்து வருவார்.
பாடகி சின்மயி சொந்த ஊர்
அதிலும் பாலியல் வன்கொடுமைகள், பெண்களுக்கு எதிராக நடக்கும் அராஜகம், சமுதாயத்தில் நடக்கும் சில பிரச்சனைகள் குறித்து கூட தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் சின்மயி கலந்து கொண்டிருந்தார். அப்போது சின்மயியை பற்றி பரவி வரும் கேள்விகள் குறித்து கேட்கப்பட்டது. அதாவது சின்மயியின் சொந்த ஊர் எது என்று கேட்கப்பட்டது.
பாடகி சின்மயி பேட்டி
அதற்கு சின்மயி, "நான் எங்க வேணாலும் பிறந்திருக்கலாம். ஆனால் என்னுடைய தாய் மொழி தமிழ் தான். சொந்த ஊரு இராமநாதபுரம். நான் பரமக்குடி. என்னுடைய கணவர் தஞ்சாவூர். அதில் அலங்காரங்குடி. ஆனால் சின்மயி தெலுங்கு, நாயுடு என்றெல்லாம் பேசிட்டு இருப்பாங்க. ஸ்ரீபாதம் என்பது லட்சுமியின் பெயர். ஸ்ரீபாதம் என்பதில் ஜாதியின் பெயர் என்பதால் நான் ஸ்ரீபாதா என்று ஸ்டைலா இருக்கட்டும் என்று வைத்துக் கொண்டேன், அவ்வளவுதான்.

சுத்தமான தமிழச்சி
நான் சுத்தமான அக்மார்க் தமிழச்சி. அதனால்தான் எனக்கு இவ்வளவு திமிர் ஜாஸ்தி" என்று சொல்லி இருந்தார். அதோடு நீங்க தமிழ்நாட்டுக்காரங்களையே நிறைய திட்டுறீங்களே என்ற கேள்விக்கு, "நம்ம வீட்ல இருக்குறவங்களை தானே நாம திட்ட முடியும். பக்கத்து வீட்ல இருக்கவங்களையா நாம திட்ட முடியும்? என்று சின்மயி பேசி இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications