ரோபோ சங்கர் இறுதி சடங்கில் மனைவி பிரியங்கா டான்ஸ்.. சின்மயி ஆதங்கம்! குவியும் கமெண்ட்ஸ்
சென்னை: சின்மயி, தமிழ் சினிமாவில் ஒரு இனிமையான குரலுக்கு சொந்தக்காரர். ஆனால், அவரது குரல் பாடல்களில் மட்டுமல்ல, சமூக அநீதிகளுக்கு எதிராகப் பேசும்போதும் மிக வலிமையாக ஒலிக்கும். மீ டூ விவகாரத்தில், தனக்கு நடந்த பாலியல் அத்துமீறலை தைரியமாகப் பொதுவெளியில் பேசி, தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியவர். அப்போது, தனித்து விடப்பட்டாலும், தன் நிலைப்பாட்டில் இருந்து ஒருபோதும் பின்வாங்காத சின்மயியின் புதிய குரல், இப்போது சமூகத்தில் உள்ள ஒரு ஆழமான அவலத்தைப் பற்றிப் பேசியிருக்கிறது. தற்போது அவர் ரோபோ சங்கர் மனைவிக்கு ஆதரவாக வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார்.

தனிமையின் போராட்டம்
சின்மயி சில வருடங்களுக்கு முன்பு பேசியது திரைத்துறையில் ஒரு பூகம்பத்தையே ஏற்படுத்தியது. சின்மயி பேசியதால், பல துறைகளில் உள்ள பெண்களும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை வெளிப்படையாகப் பேசத் தொடங்கினர். ஆனால், இந்த தைரியத்திற்குச் சின்மயி கொடுத்த விலை அதிகம். மீ டூ விவகாரத்தால், அவருக்குத் தமிழ் திரையுலகில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டது. ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக, அவர் தமிழ் படங்களில் பாடல்கள் பாடுவதையும், இசை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதையும் தவிர்த்து வந்தார். அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் அது ஒரு இருண்ட காலமாக அமைந்தது.
இருந்தும், அவரது திறமைக்குத் தடை போட முடியாது. சமீபத்தில், கமல்ஹாசன் நடித்த தக் லைப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், அவர் பாடிய முத்த மழை பாடல், அவருக்கு ஒரு கம்பேக் கொடுத்தது. இது, அவருடைய கலைப்பயணத்தில் இருந்த தடைகளை உடைத்தது. ஆனால், இப்போது அவர் மீண்டும் ஒரு சமூக அநீதிக்கு எதிராகக் குரல் கொடுத்திருக்கிறார்.
கணவன் இறந்தால் கலையுமா கோலம்
சின்மயி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு உணர்ச்சிப்பூர்வமான வீடியோவை வெளியிட்டுள்ளார். கணவனை இழந்த பிறகு, பெண்கள் தங்களுடைய பொட்டு, வளையல், மற்றும் அலங்காரங்களை அகற்றி, அலங்கோலப்படுத்தப்படுகின்றனர் என்ற அவலத்தை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் தனது வீடியோவில், "நாம பிறக்கும்போதே நமக்கு நகை போடுறாங்க, பொட்டு வைக்கிறாங்க, வளையல் போடுறாங்க, பொண்ணு என்று எல்லாம் பண்றாங்க. ஆனால், கல்யாணம் ஆன பிறகு, அது அத்தனைக்கும் சொந்தக்காரன் கணவன் தான். அந்த கணவன் கிளம்பிட்டா, இந்த கலர் எல்லாம் அழிந்துவிடணும் என்ற மனநிலையில்தான் இப்பவும் பலர் இருக்காங்க. இந்த 2025 ஆம் ஆண்டிலும் இந்த நடைமுறை மாறவில்லை" என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
"ஏற்கனவே அவங்க கணவனை இழந்த தவிப்பில் இருப்பாங்க. அந்த நேரத்தில், அவங்களுடைய கோலத்தை அழிப்பது நியாயம் இல்லை. இதையெல்லாம் பத்தி பேச, இன்னொரு பெரியார் போன்ற ஆண்கள் தான் வர வேண்டுமா?" என சின்மயி கேள்வி எழுப்பினார். இந்தக் கேள்வி, நம் சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் பழமைவாதத்தைக் காட்டுகிறது.
ரோபோ சங்கர் விவகாரம்
சின்மயி பேசிய இந்த விஷயம், சமீபத்தில் நடந்த மற்றொரு சோகமான சம்பவத்தையும் நினைவூட்டுகிறது. சின்னத்திரை நடிகர் ரோபோ சங்கர் இறந்தபோது, அவருடைய மனைவி பிரியங்கா, கணவர் உடல் முன் கண்ணீருடன் நடனமாடினார். அந்த நடனம், அவருடைய கணவர் மீது அவர் கொண்டிருந்த காதலின் வெளிப்பாடாக இருந்தது. ஆனால், அந்த துக்கத்திலும், பிரியங்காவின் நடனம் கலாச்சாரத்துக்கு எதிரானது என்று விமர்சிக்கப்பட்டது.
இதே சமூகம் தான், ஒரு பெண் கணவனை இழந்த துயரத்தில் இருக்கும்போது, அவளுடைய தோற்றத்தைக் குறித்து கேள்வி கேட்கிறது. ஒரு பக்கம், துக்கத்தைக் கொண்டாடாதே என்று சொல்கிறார்கள். இன்னொரு பக்கம், துக்கத்தில் நீ இப்படித்தான் இருக்க வேண்டும் என்று விதிகளை விதிக்கிறார்கள். இந்த முரண்பட்ட நிலைப்பாடு, பெண்களின் உணர்வுகளுக்கு இந்தச் சமூகத்தில் எந்த மதிப்பும் இல்லை என்பதைக் காட்டுகிறது.
மாறுமா இந்த நிலைமை
சின்மயியின் இந்த மனவலி நிறைந்த வீடியோவுக்கு, பலரும் ஆதரவாகத் திரண்டுள்ளனர். "நீங்கள் தனியாக இல்லை" என்று பலரும் அவருக்குக் கருத்து தெரிவித்து வருகின்றனர். சின்மயி, இந்த வீடியோவில் பேசியது, ஒரு பழக்கத்திற்கு எதிராக மட்டுமல்ல. அது, ஒரு பெண் தனது வாழ்க்கையில் சந்திக்கும் உணர்வுபூர்வமான விஷயங்களில், இந்தச் சமூகம் எப்படி ஒரு வன்முறையைச் செலுத்துகிறது என்பதைப் பற்றிப் பேசுகிறது.
சின்மயி கேட்டது போல், ஒரு பெரியார் வந்துதான் இந்த சமூக அவலங்களை மாற்ற வேண்டும் என்பதில்லை. ஒவ்வொரு தனிமனிதனும், இந்த அநீதிக்கு எதிராகக் குரல் கொடுத்து, மாற்றத்தை உருவாக்க வேண்டும். அந்த மாற்றம், இப்போது சின்மயியின் இந்த ஆதங்கக் குரலில் இருந்து தொடங்கியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications