நடிகை ராதா, அம்பிகா என் சித்தி, ரத்த சொந்தம்.. ஆனால், எங்க அப்பா சொல்லி வளர்த்தாங்க! நடிகை சிவ கவிதா எமோஷனல்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சின்ன மருமகள் சீரியலில் ஈஸ்வரி கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை சிவ கவிதா ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் நடிகை ராதா மற்றும் நடிகை அம்பிகா இருவரும் தன்னுடைய சொந்த சித்தி என்று பேசி இருக்கிறார். அதோடு தான் எப்படி சினிமா வாழ்க்கைக்கு வந்தேன் என்றும் அந்த நிகழ்ச்சியில் பேசி இருக்கிறார்.
சினிமாவில் ஒரு சில டாப் நடிகர்களின் உறவினர்களும் இருக்கிறார்கள். ஆனால் இது இவர்களின் சொந்த பந்தம் என்பது யாருக்கும் தெரியாது. அதுபோலத்தான் நடிகை ராதா மற்றும் அம்பிகாவின் உறவினரான சிவ கவிதா பற்றி பலருக்கும் தெரியாது. இந்த நிலையில் சிவ கவிதா இப்போது விஜய் டிவியில் சின்ன மருமகள் சீரியலில் ஈஸ்வரி என்ற வில்லியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த சீரியலில் இவருடைய நடிப்பை பார்த்து இவரை திட்டி தீர்த்து வரும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் தான் சமீபத்தில் இவருடைய பேச்சு இருந்தது.

மர்ம தேசம் சீரியல் நடிகை
சிவகவிதா ஏற்கனவே 90's களுக்கு பிரபலமான மர்ம தேசம் சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்த சீரியல் இவருக்கு ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியது. இந்த சீரியலில் எல்லோரையும் மிரட்டும் பாட்டி கேரக்டரில் ஒரு நடிகை நடித்திருப்பார் அவருக்கும் சிவ கவிதாவிற்கும் ஒரே சம்பளமாம். இந்த சீரியலில் அதிக சம்பளம் வாங்கிய நடிகைகள் இவர்கள் இரண்டு பேர்தானாம். குறைந்த வயதில் சினிமாவில் என்ட்ரியான சிவ கவிதாவுக்கு இந்த சீரியல் அதிகமான சம்பளம் வாங்கி கொடுத்தது என்று அப்போது கூறியிருந்தார்.
சீரியலில் அறிமுகம்
ஆரம்பத்தில் சினிமாவில் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்று காத்திருந்த இவருக்கு சீரியல் வாய்ப்பு வந்த போது வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார். ஆனாலும் இவருடைய அண்ணன் தான் சீரியலில் நடித்தாலும் உனக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று அட்வைஸ் கொடுத்திருக்கிறார். அதனால் சீரியலில் அறிமுகம் ஆகி இருக்கிறார். ஆனால் சீரியல் மூலமாக மக்கள் இவ்வளவு அன்பு காட்டுவார்கள் என்று எனக்கு அப்போது தெரியாது என்று சொல்லி இருக்கும் சிவ கவிதா 90ஸ்களில் பேவரைட் சீரியல் பலவற்றில் நடித்திருக்கிறார்.
சீரியல் வில்லி
சமீபத்தில் கூட சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் புது வசந்தம் சீரியலிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். அதுபோல சில வருடங்களுக்கு முன்பு முடிவடைந்த இதயத்தை திருடாதே சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து இருந்தார். தொடர்ந்து இவர் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் இவருக்கு ஒரு தனியார் நிகழ்ச்சியில் விருது வழங்கப்பட்டது. அப்போது சிறந்த வில்லிக்கான விருதை வாங்கிய மகிழ்ச்சியில் சிவ கவிதா தன்னுடைய சினிமா வாழ்க்கை தொடக்கம் பற்றி பேசி இருந்தார்.

அப்பாவின் அட்வைஸ்
சிவ கவிதா பேசுகையில், என்னுடைய குடும்பத்தில் எங்க சித்திகள் ரெண்டு பேரும் சினிமாவில் டாப்பில் இருந்தார்கள். அது வேறு யாருமில்லை நடிகை ராதா மற்றும் அம்பிகா தான். ரத்த சொந்தம் தான். இவர்கள் சினிமாவில் நடிப்பதை பார்த்து வளர்ந்த நான் எப்படியாவது இவர்களை போலவே நடிக்கணும் என்று ஆசையோடு இருந்தேன். அப்போ எங்க அப்பாவும் எனக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணாங்க. சினிமாவில் நல்ல நிலைமைக்கு வரணும் என்று என்னுடைய அப்பா சொல்லித்தான் வளர்த்தாங்க. ஆனால் யாருடைய உதவி இல்லாமல் நான் சினிமாவில் அறிமுகமானேன்.
வளர்ச்சி
ஆரம்பத்தில் சீரியல் வாய்ப்பு வந்த போது கூட முதலில் மறுத்தாலும் பிறகு சரி என்று நடிக்க தொடங்கி விட்டேன். ஆனால் நடிக்க தொடங்கியதால் என்னுடைய படிப்பு முழுமையாக எனக்கு கிடைக்கவில்லை. எங்க சித்திங்க ராதா, அம்பிகா போல என்னால் டாப்பில் வர முடியவில்லை என்றாலும் ஓரளவிற்கு நானும் சீரியல் மூலமாக மக்களுக்கு தெரிய வந்திருக்கிறேன் என்பது எனக்கு சந்தோஷம்தான் என்று சிவ கவிதா பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications