முற்றத்துல ரோஜா பூ... தூணில் மல்லிகை பூ.. ஆகாயத்தில் நட்சத்திரம்... கீழ நம்ம மூச்சு காத்து!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியின் சின்னத்தம்பி சீரியலில் இத்தனை நாள் புருஷன் பொண்டாட்டி போல வாழ்ந்த நந்தினி, சின்னத்தம்பிக்கு மறுபடியும் கல்யாணம் பண்ணி வைக்கறாங்க.

கல்யாணம் செய்தா அப்புறம் முதலிரவு நடக்காதா.. நண்பர்கள் முதலிரவு ஏற்பாடுகள் செய்யறாங்க. நந்தினியும், சின்னத்தம்பியும் என்ன நடக்குமோ, எப்படி நடக்குமோன்னு காத்திருக்காங்க.

முதலில் நடந்தது பிடிக்காத கல்யாணம்.. இப்போ ரெண்டு பேருக்குமே காதல் மலர்ந்து, பெற்றோர்கள் இவங்களை புரிஞ்சுகிட்டு நல்லபடியா கல்யாணம் செய்து வைக்கறாங்க.

முகம் வாட்டம்

முகம் வாட்டம்

நண்பர்கள் ஒரு வழியாக வெளியில் வந்து நந்தினியின் கண்ணை மூடிக்கிட்டு அழைச்சுட்டு போடான்னு சொல்றாங்க. இருவரும் சஸ்பென்ஸ் தாங்காமல் உள்ளே போறாங்க. கண்களை திறந்தவுடன் நந்தினி முகம் வாடிப் போகுது.

துணி சோப்பு

துணி சோப்பு

எப்புடி நந்தினின்னு சின்னத்தம்பி கேட்க, என்னங்க இது.. இன்னிக்கு எவ்ளோ முக்கியமான நாள், இதுக்காக எவ்ளோ நாள் காத்திருந்தேன்.. பிளாஸ்டிக் பூ..கட்டில்ல சாமந்தி பூ, வாசனைக்கு ஊதுவத்தி... சாப்பிடறதுக்கு மைசூர் பாக்கு... அப்புறம் பாருங்க காட்டில் கால் ஆடுதுன்னு அதுக்கு துணி சோப்பு வச்சு ஆடாம செய்துருக்காங்க.. எப்படி எனக்கு மூட் வரும்னு சிணுங்கறா நந்தினி

சொல்லு நந்தினி

சொல்லு நந்தினி

உனக்கு எப்படி வேணும் சொல்லு நந்தினின்னு சின்னத்தம்பி கேட்க..நம்ம முதலிரவு முற்றத்துல வானம் பார்த்து நடக்கணும். கட்டில்ல வெறும் ரோஜா பூ மட்டும்தான் இருக்கணும். நாலு தூணிலும் மல்லி பூ மட்டும்தான் அலங்கரிச்சு இருக்கணும். மேல நட்சத்திரம் தெரிய, பூச்சு கத்தும் சத்தம்.. அதோட நம்ம மூச்சு சத்தம் மட்டும்தான் கேட்கணும்னு சொல்றா நந்தினி.

முதலிரவு முற்றம்

முதலிரவு முற்றம்

சரி கொஞ்ச நேரம் நீ ரெடியாகு.. நான் ஏற்பாடு பன்றேன்னு சொல்லிட்டு போனவன், மறுபடியும் நந்தினியின் கண்ணை மூடி அழைச்சுட்டு போறான். முற்றத்தில் அவள் கேட்டபடி பூ அலங்காரம். பால். பழம்னு அசத்தலா முதலிரவு முற்றம் தயாரா இருக்கு. அசந்து போறா நந்தினி

நல்ல நேரம்

நல்ல நேரம்

2 மணிக்குத்தான் நல்ல நேரம், அதுவரை டிவி பாருங்கன்னு சொல்லிட்டு போறாங்க நண்பர்கள். இருவரும் ஓகே கண்மணி ரொமான்ஸ் படம் பார்க்கறாங்க.. இவன் இந்த பக்கத்திலிருந்து அவள் பக்கமாக நகர.. அவள் அந்த பக்கத்தில் இருந்து இவன் பக்கமாக நகர.. கட்டிலில் இருவரும் மிக நெருக்கத்தில்..

மூட் கிரியேட்

மூட் கிரியேட்

இருவருக்கும் மெதுவாக மூட் கிரியேட்டாகி கட்டி அனைத்து இதழோடு இதழ் சேர்க்க போக கதவைத் தட்டும் சத்தம்.. பூஜை வேளையில கரடி புகுந்த மாதிரி யாரா இருக்கும்? முதலிரவு நடக்குமா.. இல்லை புஸ்ஸுன்னு போகுமா?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+