சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்: களத்தில் 3 அணிகள்.. இன்று வாக்களிக்கும் 2000 உறுப்பினர்கள்!
சென்னை: சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் இன்று தொடங்கி உள்ளது. இதில் தினேஷ், பரத், சிவன் சீனிவாசன் ஆகியோர் தலைமையில் 3 அணிகளாக போட்டியிடுகிறார்கள். இவர்கள் தவிர நடிகை ஆர்த்தி கணேஷ் தனியாக தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
சென்னை, விருகம்பாக்கத்தில் சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல் தொடங்கியது. 2,000 உறுப்பினர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.

சுமார் 2000 உறுப்பினர்களைக் கொண்ட சின்னத்திரை நடிகர் சங்கத்தின் தேர்தல் இன்று தொடங்கி உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜூலை 22 ஆம் தேதி துவங்கியது. தொடர்ந்து, சின்னத்திரை நடிகர் சங்க உறுப்பினர்களிடம் வேட்பாளர்கள் வாக்கு சேகரித்து வந்தனர்.
சிவன் சீனிவாசன் தலைவராகவும், போஸ் வெங்கட் செயலாளராகவும் இருந்து வரும் தற்போதைய நிர்வாகத்தின் பதவி காலம் முடிவடைவதையடுத்து தேர்தல் அறிவிக்கப்பட்டது. தலைவர், செயலாளர், பொருளாளர் பதவிகளைத் தவிர, இரண்டு துணைத் தலைவர்கள், நான்கு இணைச் செயலாளர்கள், 14 கமிட்டி உறுப்பினர்கள் என மொத்தம் 23 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
சிவன் சீனிவாசன் தலைமையிலான அணி மீண்டும் இந்த தேர்தலில் போட்டியிடுகிறது. கடந்த தேர்தலில் இதே அணியில் துணைத் தலைவராகப் போட்டியிட்ட பரத், இந்த முறை தனியாக ஒரு அணியை உருவாக்கினார்.
நடிகரும் பிக் பாஸ் பிரபலமுமான தினேஷ் கோபால்சாமி தலைமையில் மூன்றாவதாக ஒரு அணியும் களத்தில் இறங்கியது. மூன்று அணிகளின் சார்பாக மொத்தம் 69 பேர் போட்டியிடும் நிலையில், நடிகை ஆர்த்தி கணேஷ்கர் சுயேட்சையாக தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
தினேஷ், பரத், நிரோஷா, நவீந்தர், துரைமணி, ராஜ்காந்த், அழகப்பன், லொள்ளு சபா பழனியப்பன், மீனா குமாரி, பிரேமி வெங்கட், ரவீனா மற்றும் மறைந்த நடிகர் நேத்ரனின் மனைவி தீபா உள்ளிட்டோர் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications