நடிக்கும் போது விபத்தை பார்த்து ஓடிய கதாநாயகி.. காப்பாற்றிய டைரக்டர்.. "சித்தி" ஷில்பாவின் மறுபிறவி
சீரியலில் நடிக்கும் போது தன்னுடைய புடவையில் ஏற்பட்ட தீயை அணைத்து காப்பாற்றிய டைரக்டர் குறித்து சீரியல் நடிகை ஷில்பா உருக்கமாக பேசியிருக்கிறார்
சென்னை: சித்தி சீரியலில் வில்லி கேரக்டரில் நடிகை ஷில்பா நடித்து வந்தார். அவர் இதுவரைக்கும் பல சீரியல்களில் நடித்திருக்கிறார்.
இந்த நிலையில் அவர் நடித்த சீரியல் ஒன்றில் தனக்கு ஏற்பட்ட விபத்து குறித்தும் அப்போது தன்னை காப்பாற்றிய டைரக்டர் குறித்தும் நெகிழ்ச்சியாக பேசி இருக்கிறார்.
சினிமாவில் இருந்தாலே அவர்கள் அட்ஜஸ்மென்ட் பண்ணி தான் இருப்பார்கள் என்று சிலர் நினைக்கிறார்கள் ஆனால் இங்கேயும் பல ஆண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று ஷில்பா கூறி இருக்கிறார்.

சித்தி சீரியலில் பிரபலம்
சின்னத்திரை நடிகையாகவும், தொகுப்பாளராகவும் பரீட்சையமான நடிகை ஷில்பா மேரி தெரசா சன் டிவியில் ஒளிபரப்பான சித்தி சீரியலின் மூலமாகத்தான் சின்ன திரையில் பிரபலம் ஆகி இருக்கிறார். அந்த சீரியலில் ராதிகா சரத்குமார் உடன் இணைந்து இவர் நடித்து பின்பு இரண்டாவது சீசனிலும் இவர் நடித்திருந்தார். இரண்டாவது சீசனில் இவர் வில்லியாக நடித்து மிரட்டி இருப்பார். இரண்டாவது சீசனில் இவரை மொட்டை அடித்துக் கொண்டு நடிக்க வேண்டும் என்று கூறியதால் இவர் எனக்கு அந்த கேரக்டர் வேண்டாம் என்று கூறினாராம். ஆனால் அந்த கேரக்டரில் நடிக்க சொல்லி ராதிகா தான் இவரை சமாதானம் செய்தாராம். அதற்கு பிறகு தான் தனக்கு இந்த அளவிற்கு பிரபலம் கிடைத்தது என்பதை பார்த்த பிறகு தான் நான் விலகிப் போகாமல் இருந்தது நல்லது என்று தோன்றியது என்று கூறியிருக்கிறார்.

வதந்திகளுக்கு விளக்கம்
நடிகை ஷில்பா பிரியமானவளே, அரசு போன்ற திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் இதுவரைக்கும் ஏழு திரைப்படங்களில் நடித்திருப்பதாகவும், 92 சீரியல்களில் நடித்திருப்பதாகவும் கூறியிருக்கிறார். விஜய் டிவியின் சமீபத்தில் முடிவடைந்த அரண்மனைக்கிளி சீரியலிலும் இவர் அனிதா கேரக்டரில் நடித்திருப்பார். இந்த நிலையில் தான் நடிப்பு துறைக்கு வந்து எட்டு வருடங்கள் ஆகிவிட்டது என்றும் இந்த நடிப்பு துறையில் இருப்பவர்களை பற்றி வெளியே பலரும் பலவிதமாக பேசி வருகிறார்கள். ஆனால் நடிகை நடிப்பு துறையில் மட்டும்தான் அட்ஜஸ்ட்மென்ட் இருக்கிறது என்று இல்லை வெளியே பல வேலைகளிலும் ஆண்களும் பெண்களும் ஒன்றாக தான் வேலை பார்த்து வருகிறார்கள் ஆனால் அங்கே என்ன மாதிரியெல்லாம் நடக்கிறது என்பது பலருக்கு தெரியவில்லை. ஏதோ ஒருவர் செய்யும் தவறால் மொத்தமாக இப்படித்தான் இருக்கும் என்று பலர் நினைத்து விடுகிறார்கள் என்று கூறி இருக்கிறார்.

படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து
நடிகை ஷில்பா சமீபத்தில் ஒரு பேட்டியில் தான் நடிகையாக மாறி எட்டு வருடங்கள் ஆகின்ற நிலையில் எனக்கு பல நேரங்களில் ஆண்கள் துணையாக இருந்திருக்கிறார்கள். அதில் அது ஒரு டைரக்டர் கோபி என்பவரை பற்றி கூறியே ஆக வேண்டும். ஒரு சீரியலில் நான் நடித்துக் கொண்டிருக்கும் போது என்னுடைய புடவையில் தீ பிடிப்பது போன்றும் அதை கதாநாயகி வந்து அணைப்பது போன்று ஷூட்டிங் இருந்தது. நான் அன்று காட்டன் புடவை தான் கட்டி இருந்தேன். என்னுடைய முந்தானையில் தீ பிடித்ததும் அதை பார்த்த அந்த நடிகை பயந்து ஓடிவிட்டார். ஆனால் அப்போது ஓடி வந்து டைரக்டர் தான் தீயை அணைத்து என்னை காப்பாற்றினார். அப்போது அவருடைய கைகளில் இருந்த முடி எல்லாம் கருகிவிட்டது. ஆனாலும் டக்கென்று ஓடிவந்து உதவியது அவர்தான் என்று நெகிழ்ச்சியோடு கூறி இருக்கிறார்.

சித்தி சீரியலால் கிடைத்த வரவேற்பு
தான் இதுவரைக்கும் எத்தனையோ சீரியல்களில் நடித்திருந்தாலும் தொகுப்பாளராக வேலை செய்த நான் வெளியே செல்லும்போது ரசிகர்கள் மத்தியில் எனக்கு கிடைக்கும் பாராட்டு என்னை மெய்சிலிர்க்க வைத்திருக்கிறது. பலர் நான் வில்லியாக நடித்த சீரியல்களை நினைவு கூறி நீங்க அவங்க தானே என்று கேட்கும் போது எனக்கு வியப்பாக இருந்திருக்கிறது. அதுவும் குறிப்பாக சித்தி சீரியலில் நான் மொட்டை அடித்துக் கொண்டு நடித்தது அப்போது எனக்கு வருத்தமாக இருந்தாலும் பிறகு அந்த சீரியலில் மூலமாக எனக்கு கிடைத்த வரவேற்பினால் தான் தொடர்ச்சியாக இப்ப வரைக்கும் பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
-
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
கருப்பு படத்தில் ஆர்ஜே பாலாஜி ஸ்கேம் பண்ணிட்டாரா? "இந்த” சீரியலின் 30 நிமிட கதை தான் முழு படமா? ரசிகர்கள் ட்ரோல் -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
‘கருப்பு ஸ்டார்’ பட்டம் கொடுத்த ரசிகர்... உடனே திரிஷா கொடுத்த பதில்... இவ்வளவு இறங்கி பேசிட்டாரே! -
நயன்தாரா என்னை மாதிரி கஷ்டப்பட்டவங்க.. விக்னேஷ் சிவன் பழசை மறந்துட்டாரு! ஓபனாக பேசிய நடிகை சோனா -
பிரபுவின் ‘டூயட்’ நாயகி மீண்டும் வருகிறார்... 30 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-என்ட்ரி! எந்த ஹீரோவுடன் கம்பேக்? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம்












Click it and Unblock the Notifications