இப்படி பண்ணிட்டீங்களே சித்து... பார்த்துப் பார்த்து கண்ணீர் விட்டுக் கதறும் ரசிகர்கள்
சென்னை: தற்கொலை செய்துகொண்ட விஜே சித்ரா கடைசியாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட புகைப்படத்தை பார்த்து கண்ணீரோடு கமெண்டுகளை போட்டு வரும் அவருடைய ரசிகர்கள் பலரும் உருக்கமான பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
மக்கள் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகி இவர் நடிக்காத டிவி சானல்களே இல்லை என்று சொல்லுமளவிற்கு விஜய் டிவி சன் டிவி ஜீ தமிழ் என அனைத்து சேனல்களிலும் தொகுப்பாளராகவும் கலக்கிக் கொண்டிருந்தவர் விஜே சித்ரா .
இவருக்கு சினிமா வட்டாரங்களில் பெரும் ரசிகர்கள் இருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் நடிகர்-நடிகைகள் இடமும் நல்ல நட்பாக பழகி வந்த இவருக்கு இன்ஸ்டாகிராமிலும் பெரும் பட்டாளம் இருக்கிறது.

பிரைடல் மேக்கப்
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்துக் கொண்டிருந்தாலும் மாடலிங் விளம்பரங்களிலும் நடித்துக்கொண்டே இருந்தார். அதனால் விதவிதமாக மேக்கப் போட்டு போட்டோக்களை எடுத்து குவிப்பார். அந்த மாதிரிதான் தற்போது கூட பிரைடல் மேக்கப் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி இருந்தார்.

கடைசியாக போட்ட போட்டோஸ்
அந்த போட்டோக்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஐ டி யில் நேற்று கடைசியாக இவர் அப்லோட் பண்ணி இருக்கிறார். இதை பார்த்ததும் எப்போதும்போல இவருக்கு ரசிகர்கள் கமெண்டுகளை போட்டு வந்தனர். அதுவும் இவரது அழகையும் இவரது நடிப்பை புகழ்ந்து கமெண்ட் போடாத ரசிகர்களே இல்லை அந்த அளவிற்கு எப்போதுமே இவருக்கு பாசிட்டிவ் கமெண்டுகள் மட்டும்தான் வந்து கொண்டிருக்கும் .

எல்லோருக்கும் பிடித்தவர்
பல நடிகைகளை கூட சில நெட்டிசன்கள் டபுள் மீனிங்கில் கலாய்த்து வந்தாலும் இவரை எல்லோரும் ஜாலியாக தான் பார்ப்பார்களே தவிர தப்பான வார்த்தைகளை பேசி கலாய்த்ததில்லை. அந்த அளவிற்கு ரசிகர்களின் மனதில் ஒரு நல்ல ஒரு இடத்தில் இருந்தவர். அதுவும் இவருக்கு ஃபேன்ஸ் பேஜ் அமைத்து ஃபேன்ஸ் ஆர்மி அமைத்து கலக்கிக் கொண்டிருந்தனர்.

பந்தா இல்லாதவர்
ரசிகர்களிடம் நேரடியாக பேசும் அளவிற்கு ஒரு வெகுளியான பந்தா இல்லாத பிரபலமாக வலம் வந்து கொண்டிருந்தார். இவருடைய எளிமையை பார்த்து இவருக்கு ரசிகர்கள் நாளுக்கு நாள் கூடிக் கொண்டிருந்தனர். இவர் எப்போதும் தன்னுடைய ரசிகர்களின் பிறந்தநாள் களுக்கு நேரில் சென்று அவர்களுக்கு அதிர்ச்சி அளித்து ரசிகர்களின் வீட்டிலும் செல்லப்பிள்ளையாக வலம் வந்து கொண்டிருந்தார் .

ரசிகர்களே உறவினர்கள்
உறவினர்களை போல ரசிகர்களை தனக்கு மிகவும் நெருக்கமானவராக இவர் நினைத்து வந்தார். அதுமட்டுமல்ல அவர் எப்போதுமே சொல்லி இருக்கிறார் எனக்கு உறவினர்கள் எல்லாமே என் கூட நடிக்கும் நடிகர் நடிகைகளும் ரசிகர்களும் மட்டும்தான் என்று. அதனால் தான் அவருக்கு அனைவரிடமும் செல்லப் பிள்ளையாக வலம் வந்து கொண்டிருந்தார் .

அதைப் பார்த்து கதறும் ரசிகர்கள்
தற்போது கடைசியாக இவர் பிரைடல் மேக்கப் போட்ட போட்டோக்களை அப்லோட் பண்ணி இருக்கிறார். அதை பார்த்து பலர் கவிதைகளை கொட்டி வந்தனர். அதற்கு அவரும் திருப்பி ரசிகர்களுக்கு ரிப்ளை பண்ணி இருக்கிறார். ஆனால் அதற்குப் பிறகுதான் தற்கொலை பண்ணியிருக்கிறார்.

இப்படிப் பண்ணலாமா
இதைக் கேள்விப்பட்டதும் இவருடைய ரசிகர்கள் கடைசியாக அவர் அப்லோட் பண்ணின போட்டோஸ் களில் தான் அவர்களது மனதில் இருக்கும் கவலைகளை கொட்டி தீர்த்து வருகிறார்கள். சிரித்த முகமாக பார்த்துக் கொண்டிருந்தவர் இப்படி கட்டிலில் பிணமாக இருக்கும் புகைப்படத்தை பார்த்ததும் ரசிகர்கள் மனது உடைந்து போய் இருக்கிறார்கள்
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications